
பாவ் பாஜி க்ரேவி
யாரெல்லாம் அனுராகம் ஆரம்பமே படிச்சிங்க? அதுல அனுக்ரஹா ‘ரெடி டூ ஈட் ஃபுட்’ கம்பெனில வேலை பார்த்துட்டிருப்பா. அந்த வகை உணவு ஒன்னும் நமக்குப் புதுசு இல்ல. எப்பவோ மார்க்கெட்ல அறிமுகம் ஆயாச்சு. அதுல ஒன்னுதான் இந்த ‘ரெடி டூ ஈட் பாவ் பாஜி க்ரேவி’.
அலுமினியம் கவர்ல பதப்படுத்துன பாவ் பாஜி க்ரேவி இருக்கும். அந்தக் கவரோட அதை கொதிக்கிற தண்ணில 3 டூ 4 நிமிசம் வச்சு அடுப்புல வச்சுட்டா க்ரேவி சூடாகிடும். இதுக்கு அவங்க யூஸ் பண்ணுற தொழில்நுட்பத்தை retort technologyனு சொல்லுவாங்க.
வாங்கி சமைச்சு சாப்பிட்டாச்சு. செம டேஸ்ட். இதை வீட்டுல சிம்பிளா செஞ்சும் பாத்தாச்சு,.
தேவையான பொருட்கள்
- வெண்ணெய் – 100 கிராம்
- தக்காளி – 3
- பெரிய வெங்காயம் – 3
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – தேவையான அளவு
- சீரகம் – 2 டீஸ்பூன்
- கேரட் – 3
- உருளைக்கிழங்கு – 3
- பட்டாணி – சிறிதளவு
- மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் (கலர்)
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- கிச்சன் கிங் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
- கொத்துமல்லி தழை – சிறிதளவு
- எலுமிச்சை பழம் - 1
செய்முறை
- தக்காளி மற்றும் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். கேரட், உருளைக்கிழங்கை டைஸ்களாக நறுக்கவும். வேண்டுமென்றால் பீட்ரூட், காலிஃப்ளவரும் சேர்க்கலாம்.
- அடுப்பில் குக்கரை வைத்து சூடானதும் வெண்ணெய்யைப் போட்டு உருகிய பிறகு அதில் சீரகத்தைச் சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- பிறகு இதில் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு பச்சை வாசனை போனதும் தக்காளியைச் சேர்க்கவும். தக்காளி நன்றாக வேகும்வரை வதக்கிவிட்டு மல்லித்தூள், மஞ்சள்தூளைச் சேர்த்து வதக்கவும்.
- வதங்கிய பிற்பாடு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்கும்போது அதில் உப்பு, கிச்சன் கிங் மசாலா, கேரட், உருளைகிழங்கு, பட்டாணியைப் போட்டு, இன்னும் கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக கொதி வந்ததும் மூடி வைக்கவும்.
- ஹை ஃப்ளேமில் ஐந்து விசில்கள், சிம்மில் ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து ப்ரசர் போகும் வரை காத்திருக்கவும்.
- ப்ரசர் போனதும் மத்து அல்லது மாஷரை உபயோகித்து காய்கறிகளை மசித்து விடவும். கலவை நன்றாக வெந்துவிட்டதால் கெட்டியான க்ரேவியாக மாறிவிடும். இதில் வெண்ணெய், கொத்துமல்லி தழை, சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்தால் பாவ் பாஜி க்ரேவி ரெடி.
பாவ் பன் கடைகளில் கிடைக்கும். அதை பாதியாக வெட்டி வெண்ணெய் தடவி தோசைக்கல்லில் போட்டு எடுத்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், மற்றும் எலுமிச்சை துண்டுடன் பாவ் பாஜி க்ரேவியோடு சாப்பிடலாம்.
வேண்டும் என்றால் காலி ஃப்ளவரும் சேர்த்து வேக வைத்துக்கொள்ளலாம். எனக்கு அது பிடிக்காதுங்கிறதால சேர்க்கல. கிச்சன் கிங் மசாலாங்கிறது கடைகள்ல கிடைக்கும். அது ப்ராண்ட் நேம் இல்ல. ஒரு வகையான மசாலா.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
இது அந்த ப்ராடக்ட். நான் இங்க விளம்பரத்துக்காகப் போடல. சோ ப்ராண்ட் நேம் மறைக்கப்பட்டுள்ளது.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
சர்விங்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
நான் செஞ்ச பாவ் பாஜி க்ரேவி (ஷிவானிக்காகச் செஞ்சேன்)
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Yenakku romba pidikkum 😋😋😋
Share your Reaction
@sasikumarmareeswari எனக்கும் அக்கா 😍
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan





