NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்

.

.

மாயப்பூவே வாசம் எங்...
 
Share:
Notifications
Clear all

மாயப்பூவே வாசம் எங்கே

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

“நீங்க பெரிய புரொடியூசர். நாலு வருசமா நீங்க மத்த ஹீரோக்களை வச்சே படம் எடுக்குறிங்க. உங்க மகன் நாலு வருசத்துக்கு முன்னாடி கோலிவுட்ல டயர் ஏ ஹீரோ. திருஷ்டி பட்ட மாதிரி டிவோர்ஸ் ஆகிடுச்சு. சினிமா ஃபீல்டை விட்டே ஒதுங்கிட்டார். அதுக்குனு அப்பிடியே விட்டுடுவிங்களா? கொஞ்சம் யோசிங்க. இந்தக் கதையை எழுதுன கபிலன் என்னோட ஃப்ரெண்ட். இது நிறைய அவார்ட் எல்லாம் வாங்கிருக்கு. இதுல பார்த்திபன் சார் மாதிரி திறமையான ஆக்டர் நடிச்சா எழுத்துல இருந்த மேஜிக்கை என்னால திரையில கொண்டு வர முடியும். இந்தக் கதைய ஸ்க்ரிப்டா எழுதுறப்ப கபிலனே பார்த்திபன் தான் இந்தக் கதையோட ஹீரோக்குப் பொருத்தமா இருப்பார்னு சொன்னார்”

இப்போதைய சென்சேஷனல் இயக்குனரான மாதேஷ் சொல்ல யோசனைக்குத் தாவினார் அமர்நாத்.

“படத்துல ஒரு முக்கியமான கெஸ்ட் ரோல் இருக்கு. அதைக் கூட ஆக்டர் விக்ரமாதித்யாவ பண்ண வைக்கலாம் சார். நீங்க சொன்னா அவர் மறுக்கமாட்டார். உங்க பேனர்ல அவர் பண்ணுன படமெல்லாம் சூப்பர் ஹிட். போதாக்குறைக்கு அவரும் பார்த்திபன் சாரும் நெருங்கிய நண்பர்கள் வேற. பார்த்திபன் சார் படத்துல சின்ன சின்ன ரோல்ல நடிச்சுதானே இன்னைக்குத் தமிழ் சினிமால நல்ல இடத்துக்கு வந்திருக்கார் விக்ரமாதித்யா. அவர் நம்ம படத்துல இணைஞ்சா இன்னும் படத்துக்கு எதிர்பார்ப்பு கூடும்”

இன்னும் பார்த்திபனின் கருத்தையே கேட்கவில்லை. அதற்குள் இவன் விக்ரமாதித்யாவைப் படத்தில் கெஸ்ட் ரோலுக்கு அழைக்கலாம் என்கிறான்.

துடிப்பான இளைஞனான மாதேஷுக்கு தெலுங்கு, இந்தியில் படம் இயக்க வருமாறு அத்துணை அழைப்புகள் இருந்தாலும் அவன் தமிழில் இயக்குவதையே விரும்பினான். அவனைத் தனது தயாரிப்பில் உருவான படத்தில் இயக்குனராக அறிமுகப்படுத்தியவர் அமர்நாத் என்பதால் அவரிடம் எப்போதுமே அவனுக்கு நன்றியுணர்ச்சி உண்டு.

இளைஞர்களைக் கவரும் வண்ணம் அதே நேரத்தில் நிறைய நாஸ்டாலஜியா தருணங்கள் வைத்து படம் எடுப்பவன் என்பதால் மாதேஷின் படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட்.

அவனையொத்த இயக்குனர்கள் இரண்டு படங்கள் ஹிட் அடித்தாலே பான் இந்தியா பைத்தியம் பிடித்து ஓடுவார்கள். ஆனால் அவன் நிதானமாகத் தமிழ் திரையுலகத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறான். தீர்மானித்த தொகைக்குள் படத்தை எடுத்து முடிப்பவனும் கூட.

அமர்நாத்துக்கு அவனது பேச்சில் சம்மதமே! ஆனால் பார்த்திபன்?

திரையுலகத்தை வெறுத்து வெளியேறியவன் மீண்டும் எப்படி அதற்குள் நுழைய விரும்புவான்? சின்ன அலைக்கழிப்பு அவருக்குள்.

அவரது அலைக்கழிப்புக்குக் காரணமான பார்த்திபன், முன்னாள் திரை நட்சத்திரம், தனது அறைக்குள் அடைபட்டுக் கிடந்தான். அவனது விழிகள் எதிரே இருந்த சுவரை வெறித்தவண்ணம் இருந்தன.

சுவரில் அழகாய்ப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள் ஒரு இளம்பெண். அவளது கையில் குட்டிப் பூங்கொத்தாக ஒரு குழந்தை.

பழைய நினைவுகளுக்குள் புகுந்து அதில் இனிமையானதை மட்டும் தேடித் தேடி அனுபவித்துக்கொண்டிருந்தவனுக்கு நினைவுகளின் இறுதிக்கட்டம் கசப்பினும் கொடிய விஷம் என்பது தெரிந்ததலோ என்னவோ அதைத் தவிர்த்துவிட்டான்.

நினைவுகளைத் தவிர்க்க முடியும்! ஆனால் மறக்க முடியாதே!

“நீயும் பூர்வாவும் போனதுக்கு அப்புறம் எனக்குள்ள உருவான வெற்றிடத்தை எது நிரப்பப்போகுதுனு தெரியாம நாலு வருசத்தைக் கடத்திட்டேன் விஷ்மி. நான் வாழுறதுக்குக் காரணம்னு ஒன்னு இருக்குதா என்ன?”

புகைப்படத்தில் இருப்பவளிடம் கேட்டவனின் இதழில் விரக்திப்புன்னகை.

கொஞ்சம் நிதானித்திருக்கலாம்!

“அந்தப் பொண்ணு உன் லைஃப் பார்ட்னரா வந்தா நீ சினிமால இன்னும் உச்சத்துக்குப் போயிடுவியாம். அவ ஜாதகம் ரொம்ப ராசியானதாம். நம்ம குடும்ப ஜோசியர் சொன்னார் பார்த்தி” என்று அன்னை எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்து தொலைத்தது.

ராசியானவள் மனைவியானதும் நினைவிலாடியது! இளமையின் வேகத்தில் பொறுமையின்றி எடுத்த முடிவுகளின் விளைவாக இரு மரணங்கள்! மரணங்கள் கொடுத்த ரணங்கள் அவனது இறுதி மூச்சு வரை ஆறாது போலவே!

பொதுவாகப் பழைய நினைவுகளை அடிக்கடி யோசிக்காதவண்ணம் தனது மனதைப் பழக்கியிருந்த பார்த்திபனுக்கு அன்று சுயக்கட்டுப்பாடு போன நிலை. ஏனெனில் அன்றைய தினம் அவனை உலுக்கிய இரண்டு மரணங்கள் நிகழ்ந்த நாள்!

ஒன்று விஸ்மயாவின் மரணம்! இன்னொன்று அவள்  தூக்கி வைத்திருக்கிறாளே பூர்வா – பார்த்திபனின் ஆறு மாத செல்ல மகள், அவளது மரணம்.

இரண்டு அற்புதமான ஜீவன்களைத் துள்ளத் துடிக்க இழந்தவனுக்கு மாதேஷின் யோசனைகள் தெரிவிக்கப்பட்டால் அவன் என்ன முடிவெடுப்பான்?

***

“இந்த வேலையையும்  தொலைச்சிட்டியா? படிப்பு, அறிவு இருந்து என்ன பிரயோஜனம்? ராசி நல்லா இருக்கணுமே! பிறந்ததும் என் புருசனை முழுங்கிட்ட! உன் ராசியால தோளுக்கு மேல உசந்த ஆம்பளைப்புள்ள இருந்தும் இல்லாத மாதிரி ஆகிடுச்சு. சுகன்யா மட்டும் போக வர இருக்கா. அந்த உறவும் அத்துப் போயிடுமோனு அடிமடில தீயைக் கட்டிக்கிட்டு நடமாடுறேன். என்ன பாவத்தைப் பண்ணுனேனோ ராசி சரியில்லாத கழுதைய புள்ளையா குடுத்துட்டான் அந்த ஆண்டவன்”

மூச்சு விடாமல் கத்தித் தீர்த்தார் கலைவாணி. அவர் எதிரே தலையைக் குனிந்தவண்ணம் நின்று கொண்டிருந்த சுபத்ராவின் விழிகளில் கண்ணீர் குளம்.

மற்ற அனைவரிடமும் தைரியமாக எதிர்த்து வாதிடும் பெண்ணுக்கு அன்னையின் பேச்சில் கண்கள் கலங்கிவிடும்.

யாரேனும் நோகடித்தால் அன்னை மடியைத் தேடி ஓடும் நாம், அந்த அன்னையே நம்மை நோகடிக்கையில் கலங்கித் தவிப்போம்தானே! அதே நிலைதான் சுபத்ராவுக்கு.

இன்றல்ல, நேற்றல்ல! விபரம் தெரிந்த நாளிலிருந்து அவள் கேட்டுப் பழகிய வார்த்தை ‘ராசியில்லாதவள்’.

அவள் பிறந்த நேரம் தகப்பனுக்கு ஆகாதென யாரோ ஒருவர் சொல்லிவிட குழந்தைக்கு மொட்டை போட்டுக் காது குத்தும் நாளில் லாரி மோதி காலமான சிவனணைந்த பெருமாளின் மரணத்துக்கு பிஞ்சு குழந்தையே காரணமெனக் கலைவாணியின் மனதில் பதிந்தேபோனது.

காதலித்து மணந்த கணவனின் அகால மரணம் அவரது மனதை அந்தளவுக்குப் பாதித்துவிட்டது. அந்தப் பாதிப்பு காலப்போக்கில் நீர்த்துப்போய்விடுமென அனைவரும் நினைத்திருக்க, கலைவாணியோ நாட்கள் போக போக சுபத்ராவின் மீதான பிடித்தமின்மையை இன்னும் இன்னும் அதிகரித்துக்கொண்டே இருந்துவிட்டார்.

அதற்காக படிப்பில், சாப்பாட்டில் எல்லாம் குறை கிடையாது. அவளுடன் பிறந்த மூத்தவர்களான சுகன்யாவுக்கும் ஆதர்சனுக்கும் என்னவெல்லாம் கிடைக்குமோ அதெல்லாம் சுபத்ராவுக்கும் கிடைத்தது, அன்னையின் அன்பைத் தவிர!

அன்னையின் தோளுக்காக ஏங்கி ஏங்கி ஒரு கட்டத்தில் அது கிட்டாதெனத் தெரிந்த பிறகு சுபத்ராவும் எதிர்பார்ப்பைக் குறைந்துகொண்டாள். அன்னையின் அன்பை இழந்தவளுக்குத் தமக்கை அன்னையானாள். தமையன் வழிகாட்டியானான்.

இப்போது இருவரும் மணமாகி அவரவர் துணையோடு வெளியூர்களில் இருந்தாலும் அன்புக்கும் அரவணைப்புக்கும் குறைவில்லை.

அதே நேரம் பெற்ற அன்னையே தேளாய்க் கொட்டுவதும் தொடர்கதை ஆகிவிட்டது.

“என் கண்ணு முன்னாடி நின்னு அழாத. விளக்கேத்துற நேரத்துல கண்ணீர் வடிச்சா வீட்டுக்கு ஆகாது. சீக்கிரமா ஒரு வேலைய தேடு. முடிஞ்சா என் கண்ணுக்கு மறைவா எங்கயாச்சும் போயிடு. பெத்தவளே பிள்ளைய கரிச்சுக் கொட்டுறாளேனு இந்த ஊர் பேசுறதாச்சும் குறையும்”

கத்தித் தீர்த்துவிட்டுப் போய்விட்டார் கலைவாணி.

சுபத்ரா வலித்த மனதோடு திண்ணைக்குப் போய்விட்டாள்.

மகாராஜநகர் அருகே இருக்கும் இண்டர்நேஷனல் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியையாக அன்று காலை வரை பணியாற்றியவளுக்கு உடன் பணிபுரியும் ஆசிரியர் ஒருவரின் தொல்லை எல்லை கடந்து போய்விட வேலையை விடும் முடிவுக்கு வந்துவிட்டாள்.

அந்த ஆசிரியர் பள்ளி மேலாண்மைக்கு நெருங்கிய உறவு என்பதால் தவறு அனைத்துமே சுபத்ராவின் மீதுதான் என்று கதை புனைய வாய்ப்பாக அமைந்து போனது.

வீட்டில் இந்த விசயத்தைச் சொன்னாலோ அன்னையின் வசைபாடல் மனதை வதைத்துவிட்டது.

திண்ணையில் இருக்கும் தூணில் சாய்ந்தபடி எப்படி அமையப்போகிறதெனத் தெரியாத எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தாள் சுபத்ரா.

********

ஹலோ மக்களே

பார்த்திபன் – சுபத்ராவோட கதை மறுமணம் சார்ந்த கதைக்களம்தான். ஆனா இதுல கொஞ்சம் ட்விஸ்ட் உண்டு. அந்த ட்விஸ்ட் தான் கதைய க்ரைம் த்ரில்லரா மாத்தும். ஆகஸ்ட் 16ல நானும் ஷிவானியும் பெங்களூர் கிளம்புறோம். அதுக்குள்ள மகிழ் மலர் கதை முடிச்சிடுவேன். ஆகஸ்ட் 18 பால் காய்ச்சுவோம். சோ அன்னைக்குக் கதை ஆரம்பிக்க வாய்ப்பில்ல. 19 அல்லது 20ல் இந்தக் கதை சைட்ல வரும். டெய்லி எபி  உண்டு.

ரீரன் கதை ‘மரம் தேடும் மழைத்துளி’ முடியப்போகுது. அதை படிக்குறவங்க சைட்ல ரிஜிஸ்டர் பண்ணிக்கோங்க. முடிஞ்சதும் லாக் பண்ணிடுவேன். நன்றி!

1754214157-WhatsApp-Image-2025-08-03-at-142805_456e76ea.jpg

 

Share your Reaction

Loading spinner
This topic was modified 3 days ago by Admin - NM Tamil Novel World
Quote
Topic starter Posted : August 3, 2025 2:31 PM
Priyarajan reacted
(@crvs2797)
Estimable Member Member

ஸோ.. சுபத்ராவையும்

பார்த்திபனையும் இணைச்சு வைச்சு அவங்களுக்கு லைஃப் 

எங்களுக்கு  நல்லவொரு

கதையையும் கொடுக்கப் போறிங்க அப்படித்தானே..?

அப்படின்னா, நாங்க வெயிட்டிங்.

😀😀😀

CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 3, 2025 3:45 PM
(@kothai-suresh)
Estimable Member Member

சோ பார்த்திபன், சுபத்ராவை ஜோடியாக்கப் போற, சூப்பர்👌👌👌👌, பெங்களுர் வாசியாகப் போவதற்கு வாழ்த்துகள்💐💐💐💐💐💐

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 3, 2025 4:50 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@crvs2797 சுபத்ரா தான் பார்த்திக்கு வாழ்க்கை குடுக்கணும் 🙈🙈

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : August 3, 2025 6:19 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kothai-suresh ஆமா ஆன்ட்டி🙈 இவங்க கதை கொஞ்சம் த்ரில்லர் கலந்து வரும்

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : August 3, 2025 6:20 PM
(@sasikumarmareeswari)
Trusted Member Member

யாருக்கு யார் வாழ்க்கை கொடுக்க போறாங்கன்னு பார்க்க வெய்ட்டிங் டா 🫰🫰🫰🫰👍💕💕💕

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 3, 2025 7:40 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@sasikumarmareeswari 😍 😍 😍 😍

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : August 3, 2025 10:19 PM
(@kavibharathi)
Trusted Member Member

Subathra parthi iva ga rendu per oda marumaran koodavae kadhal and crime thriller ah yum.pakka eagerly waiting 

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 3, 2025 10:30 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kavibharathi சீக்கிரம் கூட்டிட்டு வந்துடுவோம் 😍 😍 😍 🤩 🤩 🤩

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : August 4, 2025 9:57 AM
(@priyarajan)
Active Member Member

👌👌👌👌 waiting 😍

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Posted : August 4, 2025 8:09 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@priyarajan தேங்க்யூ 😍 😍 😍

 

Share your Reaction

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : August 4, 2025 10:04 PM

.

.