NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

பனி பூத்த சிறகுகள் முன்னோட்டம்

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

“இந்தா கடை வந்துட்டுய்யா! கூடையைக் குடு” பைக்கிலிருந்து இறங்கிய மூதாட்டியிடம், ஹேண்ட்பாரில் மாட்டியிருந்த அவரது கூடையை எடுத்துக் கொடுத்தான் அகரன்.

‘நியாயவிலைக்கடை – தேன்மலை’

ஊதா வண்ணப் பின்னணியில் வெள்ளை எழுத்துகள் பெரிதாய்த் தெரிய, அதன் வெளி வராண்டாவில் அமர்ந்து மேஜை மீது வைத்திருந்த POS மெஷினில் ஸ்மார்ட் கார்டை ஸ்கேன் செய்து கொண்டிருந்தாள் யாழினி.

“இவளா?”

அகரன் திகைக்க, அந்த மூதாட்டி அவனைத் திரும்பிப் பார்த்தார்.

“யாழினி புள்ளைய முன்னாடியே தெரியுமா தம்பி? நீ ஊருக்கு வந்து ரெண்டு நாளு தானே ஆவுது?”

அவரது தலையில் ஆண்டனா மட்டும்தான் இல்லை. ஆனால் அவர் பேசிய தொனியே நடமாடும் ரேடியோப் பெட்டியை நினைவுறுத்தியது அகரனுக்கு.

‘ஆஹா! கிழவி பார்வையே சரியில்ல. எதையாச்சும் பேசிச் சமாளி அகன்.’

“என்ன தம்பி? வைச்ச கண்ணு வாங்காம அந்தப் புள்ளையவே பாக்குற?”

“அதுவா? நான் இந்த ஊருக்கு வந்தப்ப வீடு குப்பையா இருந்துச்சு பாட்டி. அதை க்ளீன் பண்ண அந்தப் பொண்ணுதான் உதவுச்சு” என்று சொல்லிச் சமாளித்தான்.

“எங்க புள்ளை தங்கம்ல.”

பெருமிதமாய்ச் சொன்னவர் சட்டென அவனைக் கூர்ந்து பார்த்துவிட்டு, “என்ன சொன்ன? பாட்டியா? ஒழுங்கா ஆச்சினு கூப்பிடு” என்று அதட்டிவிட்டு மெல்ல மெல்ல அந்த மூதாட்டி நியாயவிலைக்கடையை நோக்கிச் செல்ல, அகரன் பைக்கைக் கிளப்பி அங்கிருந்து செல்லத் தயாரானான்.

“அதுக்குள்ள ஏன் கிளம்புறீங்க? ரெண்டே நிமிசம்! ஆச்சிக்கு அரிசியும் பருப்பும் போட்டுக் குடுத்துடுறேன். பைக்குல கூட்டிட்டுப் போய் விட்டுடுங்க. ஆச்சியால நடக்க முடியாது.”

அமர்ந்திருந்தபடியே கத்தினாள் யாழினி. அகரனுக்கு ‘இது என்னடா தொல்லை’ என்று சலிப்பாக இருந்தது.

“எனக்கு வேலை இருக்கு” என முறுக்கிக்கொண்டான்.

யாழினி சத்தமாய்ச் சிரித்தாள்.

“வேலையா? வேலை போயிடுச்சுனுதானே இங்க வந்திருக்கீங்க? ரெண்டு நிமிசம் காத்திருந்தா அங்க ஏவப் போற ஏவுகணை நின்னுடுமா என்ன?”

அவள் கிண்டல் செய்யவும் அகரனுக்குச் சுறுசுறுவெனக் கோபமேறியது. ஆனால் அதை யாழினி கவனிக்கவேண்டுமே! அவள் கடையில் வேலை செய்யும் ஊழியரிடம் அரிசியும் பருப்பும் அளந்து கொடுக்குமாறு சொல்லிவிட்டாள்.

அகரன் ‘வ்ரூம் வ்ரூம்’ என பைக்கை முறுக்கிக்கொண்டே இருக்கவும் அவன் பக்கம் அவளது கவனம் திரும்பியது.

“எதுக்கு நாய்ஸ் பொல்யூஷன்? அதை ஆஃப் பண்ணிட்டு இப்பிடி வாங்க.”

“ரெண்டு நிமிசம்னு சொன்னீங்க.”

குறை சொன்னபடியே சாவியைப் பைக்கிலிருந்து எடுத்தவன், அவள் அமர்ந்திருந்த கடை வராண்டாவை நோக்கி வந்தான்.

“ரெண்டு நிமிசம்தான் ஆகும். ஆனா ஆச்சியோட கைரேகை மிஷின்ல விழலனா கொஞ்சம் டைம் ஆகும். பொறுத்துக்கோங்க.”

கண்களைச் சிமிட்டி அவள் சொல்லவும் அகரன் முறைத்தான் அவளை.

‘இந்த ஊருக்கு வந்ததிலிருந்து எதுவும் சரியில்லை’ - இரண்டு நாட்களாகச் சொல்லிக்கொள்ளும் அதே வசனம்.

“என்ன ஆச்சி! ரேகை விழலையே?”

அகரனின் பொறுமை பறந்து கொண்டிருந்தது.

“முடிஞ்சுதா முடியலையா?”

இப்போது யாழினிக்குப் பதிலாய் அந்த மூதாட்டி அவனைப் பார்த்தார்.

“ஏன்யா பொண்டாட்டிய பேறுகாலத்துக்கு ஆசுபத்திரில விட்டுட்டு வந்தவன் மாதிரி குதிக்குற? வேலை முடிஞ்சாச்சு. வந்துட்டேன்.”

கூடையைத் தூக்கிக்கொண்டு அவர் இறங்கச் சிரமப்படவும், “இப்பிடி கூடைய குடுங்க பா... ஆச்சி. நான் வச்சுக்குறேன்” என்று வாங்கிக்கொண்டான் அகரன்.

POS மெஷினில் விற்பனை செய்த அரிசி, பருப்பு அளவைப் பதிவு செய்தாள் யாழினி.

அதே நேரம் அந்த மூதாட்டியின் கையிலிருந்த மொபைலில் ‘Bill for Card 33XXXXXXXXXX12 dated 10-01-2026: Rice – 5 KG Total Rs. XX.00 – TNPDS’ என்று செய்தி வந்தது.

யாழினி எட்டிப் பார்த்தாள்.

“மெசேஜ் வந்துச்சா ஆச்சி?”

“வந்துட்டுல! கோதும்பை (கோதுமை) போடுறப்ப சொல்லு. வந்து வாங்கிக்கிறேன்.”

“சரி! பாத்துப் பத்திரமா போயிட்டு வாங்க ஆச்சி.”

அகரனுக்கு இந்த நியாயவிலைக்கடை, அதிலிருந்து வரும் அரிசியும் மண்ணெண்ணெயும் கலந்த நெடி இதெல்லாம் புதிது.

இது மட்டுமா? மொத்த தேன்மலையும் அவனுக்கு இரண்டு நாட்களாக விதவிதமாய், வித்தியாசமாய் எனப் புதுப்புது அனுபவங்களை அள்ளிக்கொடுத்துக் கொண்டிருக்கின்றதே!

அவன் கண்டு அதிசயித்த முதல் அனுபவம் – யாழினி!

திரும்பிப் பார்த்தான் அவளை.

புன்னகையோடு அடுத்து வந்த நபரிடம் ஸ்மார்ட் கார்டை வாங்கிக்கொண்டிருந்தாள் அவள்.

இருபக்கமும் பின் குத்தப்பட்ட காட்டன் சுடிதார், பக்கவாட்டில் போடப்பட்ட பின்னல், கழுத்தில் குட்டியாய் ஒரு செயின், காதுகளில் சின்னதாய் ஜிமிக்கிகள் – மிகவும் சாதாரணமான தோற்றம்.

ஆனால் அதை அலட்சியம் செய்துவிட முடியாதளவுக்கு லட்சணமான முகம்! அது முதல் பார்வையிலேயே மனதில் பதிந்தாலும் வாழ்க்கையில் தோற்று ஓடி வந்தவனுக்கு அழகை ரசிக்கவா அவகாசம் இருக்கும்?

பெருமூச்சுடன் பைக்கில் ஏறி அமர்ந்தவன் மூதாட்டியின் கூடையை முன்னே வாங்கி வைத்துக்கொண்டான்.

****

ஹலோ மக்களே! இது ஒரு டாம் அண்ட் ஜெர்ரி காதல் கதை. ஆப்லைன்ல எழுதிட்டிருக்கேன். மயக்கமென்ன சோலைக்கிளியே கதை கூட இது லிங் ஆகும். காத்திருங்கள்! அகரன் யாழினிக்காக!

1768061683.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : January 10, 2026 9:44 PM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

விரைவில் வரவும் 🥰🥰🥰🥰🥰

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 10, 2026 9:58 PM
(@crvs2797)
Honorable Member Member

Ok, Ok,.. We are waiting.

😀😀😀

CRVS (or) CRVS2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 10, 2026 10:53 PM
 Sona
(@sona)
New Member Member

Waiting...... Sago

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 13, 2026 11:05 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images