
“எங்க போற?”
இதென்ன கேள்வி என்பது போலப் பார்த்தவள் “எங்க ஆபிசுக்கு” என்றாள்.
“அக்கவுண்டண்டுக்கு ஃபைலிங் பத்தி டீடெய்ல்டா சொல்லிக் குடுக்குற வரைக்கும் நீ இங்க தான் இருக்கப்போறனு ஆடிட்டர் சார் சொன்னாரே”
சங்கவியின் பொறுமை தூள் தூளாகப் பறந்தது.
“அப்பிடி டீடெய்ல்டா பாடம் நடத்தணும்னா மினிமம் ஒன் வீக் தேவைப்படும் சார்... அதுவரைக்கும் நான் இங்க இருக்கணும்னா ஆபிஸ்ல என் வேலைய யார் பாப்பாங்க?”
“ஆடிட்டர் சார் கிட்ட நான் பேசிக்கிறேன்”
உடனே ஆடிட்டர் முரளி மனோகரை அழைத்துப் பேசினான். அவரது சம்மதத்தையும் வாங்கினான்.
கல்லுளிமங்கன்! பற்களைக் கடித்தாள் சங்கவி.
“உங்க ஸ்டாஃப் கிட்ட நீங்களே சொல்லிடுங்க சார்” என்றபடி மொபைலை நீட்டினான்.
சங்கவி வாங்கிக்கொண்டதும் மறுமுனையில் பேசிய முரளி மனோகர் ஒரு வாரம் திருப்பதி மைன்ஸ் அலுவலகத்துக்குச் சென்று ஜூனியர் அக்கவுண்டண்டுக்கு வரி தாக்கல் பற்றி கற்றுக்கொடுத்துவிட்டு வரும்படி கூறிவிட்டார்.
சங்கவியும் சரியென்றாள். அழைப்பு துண்டிக்கப்பட்டதும் மொபைலைக் காதிலிருந்து எடுத்தவள் தொடுதிரையில் தெரிந்த வால்பேப்பரைப் பார்த்துவிட்டாள்.
பிங் வண்ண பின்னணியில் ‘INFINITE LOVE – I will love you endlessly’ என்று எழுதப்பட்டு ஒரு ஆணும் பெண்ணும் தங்களது விரல்களை இன்ஃபினிட்டிவ் சிம்பலைப் போல் வைத்திருக்கும் படம் அது.
இன்னும் வால்பேப்பரை மாற்றாமல் வைத்திருக்கிறான்.
மனதில் மெல்லிய கிலேசம் எழுந்தது. எதையும் வெளிக்காட்டாமல் அவனிடம் மொபைலைக் கொடுத்தாள்.
“நீ போய் வேலைய கவனிக்கலாம்... ஆபிஸ் பாய் உனக்கு லஞ்ச் வாங்கிட்டு வந்துடுவார்... ஜானகிராம்ல சாம்பார் சாதம் வாங்க சொல்லிருக்கேன்”
அவள் மறக்க நினைப்பதை நினைவுபடுத்தியே தீருவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறான் போல!
“வேண்டாம்... எங்க ஆபிஸ்ல இருந்து என் ஹேண்ட் பேக்கை எடுத்துட்டு வரச் சொல்லிருங்க... நான் லஞ்ச் கொண்டு வந்துட்டேன்... இப்ப நான் கிளம்பட்டுமா?”
“உங்கப்பா தவறிட்டார்னு கேள்விப்பட்டேன்... சாரி, அப்ப நான் கோயம்புத்தூர்ல இருந்ததால வர முடியல”
அவனது வருத்தம் சங்கவியின் மனதைத் தொடவில்லை. மாறாகக் கோபம் தான் வந்தது அவளுக்கு.
“இங்க இருந்திருந்தா மட்டும் வந்திருப்பிங்களா? உங்களை வரத் தான் விட்டிருப்பாங்களா? எங்கப்பா, ,எங்கம்மா என் குடும்பம் இது எதுலயும் நீங்க தலையிடாதிங்க... நீங்க எப்பவுமே எங்களுக்கு மூனாவது நபர் தான்... ஒரே ஆபிஸ்ல இருபத்து நாலு மணிநேரமும் உங்க மூஞ்சிய பாத்துக்கிட்டிருந்தா ஏழு நாள்ல உங்க கிட்ட மயங்கிடுவேன்னு தப்புக்கணக்கு போட்டுட்டிங்க போல... நான் எதையும் மறக்கல சரபன்... மறக்கவும் மாட்டேன்... தேவையில்லாம பழசை ஞாபகப்படுத்தி வாங்கி கட்டிக்காதிங்க... இப்ப நான் கிளம்பலாமா?”
பெருமூச்சை வெளியிட்டவன் சங்கவியைச் செல்லும்படி கூற அவளும் ஜூனியர் அக்கவுண்டண்டின் இடத்துக்குப் போய்விட்டாள்.
கேபினின் கதவு மூடியதும் கண் மூடித் தனது இருக்கையில் சாய்ந்துகொண்டான் சரபேஸ்வரன்.
****
ஒரு காதலும் சில கவிதைகளும் - சரபேஸ்வரன் சங்கவி கதை. நாளை முதல் சைட்ல டெய்லி எபி வரும். முடிஞ்சதும் ரெண்டு நாள் கழிச்சு தளத்தில இருந்து நீக்கப்படும்.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
வெயிட்டிங் 👍👍👍👍
Share your Reaction
Pongal mannan thaana 😉😉
Share your Reaction
@kothai-suresh தேங்க்யூ ஆன்ட்டி 😍
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@sasikumarmareeswari ஆமாக்கா 😆 😆 😆
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



