
ரோஸ் மலை - ஆரியங்காவுக்குப் பக்கத்துல கொல்லம் மாவட்டத்துல இருக்குற ஒரு சூப்பரான மலை கிராமம் இது. என் தம்பி அடிக்கடி லாங் ட்ரைவ் போற இடத்துல இதுவும் ஒன்னு. எதனால ரோஸ் மலைனு பேர் வந்துச்சுனு தெரியல. இந்த ஊர் பத்தி நிறைய பேருக்கு அவ்ளோவா தெரிஞ்சிருக்காது (தென்காசி திருநெல்வேலி ஆட்கள் தவிர) இது பெரிய டூரிஸ்ட் ஸ்பாட்டும் இல்ல. ஆனா ரொம்ப அழகான மலை கிராமம். போற வழில ரோடு எல்லாம் கொஞ்சம் ஏறக்குறையதான் இருக்கும். ஜீப் அல்லது பைக் சிறந்தது. அடர்ந்த காடுகள்ல போறப்ப கவனமா போகணும். யானை, புலி வர வாய்ப்புண்டுனு என் தம்பி சொன்னாப்ல. அவனும் அவனோட ஃப்ரெண்டும் ஒரு தடவை போறப்ப அங்க உள்ள ஆளுங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி புலி க்ராஸ் பண்ணுச்சுனு சொன்னாங்களாம். போறதா இருந்தா கவனமா போங்க.
எங்க இருக்கு? ஆரியங்காவிலிருந்து ஒரு 12-15 கி.மீ. தூரத்துல, ஷெந்துருணி வனவிலங்கு சரணாலயத்துக்குள்ள அடர்ந்த காட்டுக்குள்ளதான் இந்த ரோஸ்மலை இருக்கு.
எப்படி போகணும்? ரோஸ்மலைக்குப் போற ரோடு ரொம்ப ஏத்தமாவும், வளைஞ்சு நெளிஞ்சும் இருக்கும். காட்டுக்குள்ள போறதுக்கு ஜீப்தான் பெஸ்ட். ஆரியங்காவுல இருந்து ஜீப் கிடைக்கும்.
பாக்க வேண்டிய இடங்கள்:
காடு: அடர்ந்த காடுகள், பச்சை பசேல்னு இருக்குற சூழல், அமைதியான ஓடைகள் எல்லாம் இங்க முக்கியமா பாக்க வேண்டியவை.
கண்காணிப்பு கோபுரம்: ரோஸ்மலை கண்காணிப்பு கோபுரத்துலந் (பரப்பாறு வியூ பாயிண்ட்) இருந்து தென்மலை அணையையும், சுத்தி இருக்குற மலைகளையும் அழகா பாக்கலாம். இங்க சூரியன் உதிக்கும்போதும், மறையும்போதும் ரொம்ப அழகா இருக்கும். பரப்பாறுல குட்டி குட்டியா தீவு கூட்டம் மாதிரி மரங்களோட கூடிய இடங்கள் இருக்கும். அது வியூ பாயிண்டுல பாக்கப்ப அவ்ளோ அழகா இருக்கும்,
- ட்ரெக்கிங்: சாகசம் புடிக்கிறவங்களுக்கு, காட்டுக்குள்ள நடக்க (ட்ரெக்கிங்) நிறைய பாதைகள் இருக்கு.
அருவிகள்: போற வழியில நிறைய அருவிகளையும், ஓடைகளையும் பாக்கலாம். பக்கத்துலயே பாலருவிங்குற பிரபலமான அருவியும் இருக்கு.
கொஞ்சம் கவனமா இருங்க:
இந்த இடம் இன்னும் அவ்வளவா ஃபேமஸ் ஆகாததால, இயற்கையை அப்படியே ரசிக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
காட்டு விலங்குகள் நடமாட்டம் இருக்கும், அதனால வனத்துறை சொல்றபடி ஜாக்கிரதையா போறது நல்லது.
பொதுவா காலைல 9 மணில இருந்து சாயங்காலம் 6 மணி வரைக்கும் பாக்கலாம். ஆனா டிக்கெட் கவுண்டர் சாயங்காலம் 5 மணிக்கே மூடிடுவாங்க.
ஆரியங்காவுல இருந்தோ தென்காசில இருந்தோ ரோஸ்மலைக்குப் போறதுக்கு வனத்துறை வழிகாட்டிகளோட போறது நல்லது.
எப்ப போகலாம்?
ரோஸ்மலை ஜூன்ல இருந்து நவம்பர் மாசம் வரைக்கும் ரொம்ப அழகா இருக்கும். அப்பதான் மழை பெய்ஞ்சு காடு ஃபுல்லா பச்சைப் பசேல்னு இருக்கும். இந்த சமயத்துலதான் ரோட்டை கடக்குற மலை ஓடைகள்ல தண்ணி அதிகமா ஓடும், அத மோட்டார் சைக்கிள்ல கடக்குறது ஒரு அட்வென்ச்சர் மாதிரி இருக்கும்.
தென்மலை அணை மழைக்காலம் முடிஞ்சதுக்கு அப்புறம், அதாவது அக்டோபர்ல இருந்து டிசம்பர் மாசத்துக்குள்ள ஃபுல்லாயிடும்.
ஜனவரி, பிப்ரவரி மாசங்களும் சூப்பரா இருக்கும். அப்போ அதிகாலை, சாயங்காலம் பனிமூட்டம் எல்லாம் பாக்கலாம். இந்த நேரத்துலதான் வருஷத்துலயே ஈரப்பதம் கம்மியா இருக்கும், அதனால தென்மைலா அணையோட அழகை ரொம்ப தெளிவா பாக்க முடியும். மார்ச்ல இருந்து மே மாசம் வரைக்கும் வெயிலும், புழுக்கமாவும் இருக்கும். நிலப்பரப்பு வறண்டு, தூசியா காட்சியளிக்கும்.
திருநெல்வேலி , தென்காசில இருந்து வீக்கெண்ட் ஒரு லாங் ட்ரைவ் போகணும்னா இந்த இடத்துக்குப் போகலாம். தங்குறதுக்குப் பெருசா இடங்கள் இல்ல. ஒரே ஒரு ரிசார்ட் உண்டு. நாலு - ஐந்து பேர் தங்குற மாதிரி இருக்கும்.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
பரப்பாறு வியூ பாயிண்ட்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
பரப்பாறு வியூ பாயிண்ட் - இடம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
ரோஸ் மலை - பொதுவானப் படம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan






