
பறவைகள் தற்கொலை செய்யும் ஜாட்டிங்கா கிராமம்
இன்னைக்கு ஜாட்டிங்கானு ஒரு கிராமத்தைப் பத்தி பாக்கலாம்.
இந்த கிராமம் அசாம் மாநிலத்துல, டிமா ஹசாவ்ங்குற மாவட்டத்துல, மலைகளுக்கு நடுவுல பதுங்கி இருக்குற ஒரு குட்டிக் கிராமம். இந்த ஊர் ஃபேமஸ் ஆனதுக்குக் காரணம், இங்க நடக்குற ஒரு பெரிய இயற்கை மர்மம்தான்.
ஒவ்வொரு வருஷமும், மழைக்காலம் முடிஞ்சு செப்டம்பர் மாசத்துல இருந்து நவம்பர் மாசம் வரைக்கும் நைட்ல கரெக்டா 6:30 மணியில இருந்து 9:30 மணிக்குள்ள மூடுபனி இருக்குற இரவுகள்ல உள்ளூர் பறவைகள் வெளிநாட்டுல இருந்து வர்ற பறவைகள்னு பலவிதமான பறவைகள் திடீர்னு கண்ட்ரோல் இல்லாம ரொம்பத் தாழ்வாப் பறந்து வரும். வந்து, கிராமத்துல இருக்குற வீடு, மரம், இல்லன்னா தரையில சடார்னு மோதி விழும். சிலது அடிபட்டுப் போகும், சிலது செத்தே போயிடும்.
இந்த மர்மத்துக்குப் பின்னால என்ன இருக்கு?
அந்தக் காலத்துல, சயின்டிஸ்ட்டுங்க வந்து ரிசர்ச் பண்றதுக்கு முன்னாடி, ஜாட்டிங்காவுல இருந்த நாகா, திமாசா மக்களுக்கு, நம்ம இப்ப பாக்குற மாதிரி சயின்ஸ் கண்ணோட்டம் எல்லாம் கிடையாது. அவங்களுக்குப் புரியாத ஒரு விஷயம் நடந்துச்சுன்னா, "இது ஏதோ பவர்ஃபுல்லான ஆவியோட வேலை, பேய் பிசாசு பண்ணுதுனுதான் நம்புவாங்க.
📜 கதை 1: பயங்கரமான பேயோட சாபம்!
ஜாட்டிங்கா கிராமம் இருக்குற இந்த பள்ளத்தாக்கு, மலை உச்சிகள் எல்லாம் ரொம்பக் கோபமா இருக்குற தீய ஆவிகளோட இருப்பிடம்னு அவங்க ஸ்ட்ராங்கா நம்புனாங்க. நைட்ல மூடுபனி, இருட்டுன்னு கிளைமேட் மோசம் ஆகுறப்போ, அந்தப் பயங்கரமான ஆவிகள் வானத்துல சுத்த ஆரம்பிக்குமாம். அந்த ஆவிகள் வானத்துல பறந்து போற பறவைகளைப் புடிச்சு, அதோட கண்ட்ரோலை இல்லாம பண்ணி, கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தியால கீழே இழுக்குமாம். இழுத்து, வீடு, மரம், கல்லுன்னு எதாவது ஒண்ணுல மோதி சாகடிக்குமாம். இந்த சம்பவம் நடக்குறதால நம்ம ஊருக்கு ஏதோ பெரிய சாபம் வரப்போகுதுன்னு அவங்க பயந்தாங்க.
📜 கதை 2: வானத்துல இருந்து வந்த தூதுவன் தடுமாறுன கதை!
இந்த அடிபட்டு விழுகிற பறவைகள், வேற உலகத்துல இருந்து இல்லன்னா சொர்க்கத்துல இருந்து அனுப்பப்பட்ட சக்தி வாய்ந்த தூதுவர்களா இருக்கலாம்னு நெனைச்சாங்க. இந்தத் தூதுவர்கள், இந்தப் பள்ளத்தாக்குல இருக்குற ஏதோ ஒரு மாய சக்தியோட சுழல்ல (Magic Whirlpool) சிக்கிடுறாங்களாம். அந்த சுழல் தான் அவங்க ரூட்டைக் குழப்பி, அவங்கள அடிபட்டு விழ வைக்குதாம். பறவைகள் மோதி அலறுற சத்தம், அந்த மாயச் சுழல்ல சிக்கி வேதனைப்படுற கூக்குரல்னு அவங்க நினைச்சாங்க.
இந்த விபத்தை ஆவிகளோட வேலையா நம்புனதால, கீழே விழுந்த பறவைகளைப் பாத்து பயந்தாலும், அதைச் சும்மா விடல. சில காலத்துல, அவங்க இதைப் பிடிச்சு, ஆவிகள் நமக்குப் பரிசா கொடுத்திருக்குனு நெனச்சு, அதைச் சமைச்சு சாப்பாட்டுக்காகப் பயன்படுத்திக்கிட்டாங்க.
சைண்டிஸ்ட் என்ன சொல்றாங்க?
பறவை ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் பல வருஷமா பண்ணுன ஆராய்ச்சியில என்ன தெரிய வந்துச்சுனா இந்த நிகழ்வு பறவைகளோட தற்கொலை இல்லையாம். மோசமான காலநிலையால உருவாகுற விபத்தாம். பனியும் காத்தும் அதிகமா இருக்குறப்ப, பறவைகளுக்கு எந்தப் பக்கம் போறதுன்னு தெரியாம திசை மாறிப்போகுது. இந்தத் திசை மாறித் தடுமாறுன பறவைகள், கிராமத்துல மக்கள் போடுற விளக்கு வெளிச்சத்தை (டார்ச் லைட், தெரு விளக்கு) வானத்துல இருந்து வர்ற நிஜ வெளிச்சம்னு நினைச்சு, அதை நோக்கிப் பறந்து வருது. வெளிச்சத்தை நோக்கி வேகமா வர்றப்போ, அங்க இருக்குற மரம், பில்டிங்னு எதாவது ஒண்ணுல மோதி அடிபட்டு விழுது. இதுதான் நடக்குதுனு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சாங்க.
இந்த ஜாட்டிங்கா பறவை விபாரம் உலகத்துக்கே தெரிய வந்ததுக்குக் காரணம், இ. பி. கீ (E. P. Gee) அப்படீங்குற ஒரு இயற்கை ஆர்வலர் தான். அவர் எழுதின 'Wildlife of India' ('இந்தியாவின் வனவிலங்குகள்')ங்குற புத்தகத்துல தான், இந்தப் பறவைகள் இப்படித் திடீர்னு விபத்துக்குள்ளாகுறதைப் பத்தி முதன்முதல்ல எழுதி வெளியிட்டாரு.
பறவை ஆராய்ச்சியாளர்கள் (Ornithologists) இதுவரைக்கும், இந்தச் "தற்கொலை"னு சொல்லப்படுற விபத்துல அடிபடுற பறவைகள்ல, நாற்பத்து நான்கு (44) வகையான இனங்கள் இருக்குறதா கண்டுபிடிச்சிருக்காங்க.
ஜாட்டிங்காவுல அடிக்கடி விபத்துல சிக்கிற சில பறவைகள் இங்க இருக்கு:
புலிப் பக்கி (Tiger Bittern)
கருப்புப் பக்கி (Black Bittern)
சின்னக் கொக்கு (Little Egret)
குளத்துக் கொக்கு (Pond Heron)
மரகதப் புறா (Emerald Dove)
பச்சைப் புறா (Green Pigeon)
இந்தியப் பிட்டா (Indian Pitta)
மீன்கொத்தி வகைகள் (Kingfishers)
🏞️ கிராமத்தோட லொகேஷனும் ஒரு காரணம்
ஜாட்டிங்கா இருக்கிற இடமும் ஒரு காரணம்னு சொல்றாங்க. அது குறுகலான ஒரு பள்ளத் தாக்குல இருக்கு. சுத்தி மலைகள் இருக்கறதால, மோசமான கிளைமேட்ல காத்தும் மூடுபனியும் சேர்ந்து பறவைகளை ரொம்பக் குழப்பலாம்.
இந்த நியூஸ் உலகம் முழுக்கப் பரவுனப்ப, ஆரம்பத்துல மக்கள் இந்த அடிபட்ட பறவைகளை பிடிச்சு சமைச்சு சாப்பிட்டுட்டு இருந்தாங்க. ஆனா, விலங்குகள் மேல அக்கறை உள்ளவங்க வந்து விழிப்புணர்வு கொடுத்தாங்க. அதனால இப்ப பறவைகளைக் கொல்லுறது ரொம்பவே குறைஞ்சிடுச்சு.
இப்ப இந்த ஜாட்டிங்கா, பறவைகளோட இந்த விநோத சம்பவத்தைப் பார்க்க ஒரு சுற்றுலா இடமாகவும், ஆராய்ச்சி பண்ற ஒரு மையமாகவும் மாறிடுச்சு.
🏞️ சுத்திப் பார்க்க வசதிகள்
அஸ்ஸாம் மாநிலச் சுற்றுலாத் துறையும் (Tourism Department) இந்த விசித்திர நிகழ்வைப் பார்க்க வர்றவங்களுக்காக சில ஏற்பாடுகள் செஞ்சிருக்காங்க:
வாட்ச் டவர்: இந்த நிகழ்வை மேல இருந்து நல்லாக் கவனிக்கிறதுக்காக ஒரு கண்காணிப்புக் கோபுரம் (Watchtower) கட்டிருக்காங்க.
மியூசியம்: இந்த அரிய சம்பவத்தைப் பத்தின எல்லாத் தகவல்களும் இருக்குற ஒரு அருங்காட்சியகத்தையும் (Museum) ஜாட்டிங்காவுல இருக்குற முவொல்போங்ங்கிற இடத்துல வெச்சிருக்காங்க.
*********
அடுத்த வாரம் வேற ஊர் பத்திய தகவலோட வர்றேன்,. குட் நைட் மக்களே!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



