
அருள்மொழி கிளம்ப எழுந்தவன் “ஆல் த பெஸ்ட் ஃபார் யுவர் டீம்” என்று ஏ.கேவிடம் கூற அவரும் வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார். அவனைத் தொடர்ந்து வெளியேறிய வானதி கதவைச் சாத்திவிட்டுத் திரும்பிய போது அருள்மொழி மீது இடித்துக் கொண்டாள்.
“இன்னும் கவனமில்லாம இடிக்குற பழக்கம் மாறல போல”
சுதாரித்து விலகியவள் கேட்டவனை வெட்டுவது போல முறைத்தாள். அவனது கேள்வியிலிருந்தது ஏளனமா? எகத்தாளமா? இரண்டும் இல்லையென்றது அவளது மனம்.
“திமிரு... பணத்திமிரு... பான் வித் சில்வர் ஸ்பூன்னு மார் தட்டிக்கிட்டு எகனாமிக்கலா கீழ இருக்குறவங்கள கேலி செய்யுற எலைட் கிளாஸ் மெண்டாலிட்டி... எதுவுமே இன்னும் மாறல போல” என்று அவனிடம் கேள்வியைத் திருப்பினாள் வானதி.
அருள்மொழியின் விழிகளில் சுவாரசியம் ஏறியது.
“நாட் பேட்... பேச்சு, நடை, ட்ரஸ்சிங் சென்ஸ், ஹேர்ஸ்டைல்னு எல்லாத்துலயும் பயங்கரமான சேஞ்ச் ஓவர்... பட் எங்க பார்ட்டிய நினைச்சா தான் கவலையா இருக்கு... உன்னை மாதிரி ஒரு காலேஜ் ட்ராப் அவுட் போடப்போற எலெக்சன் ஸ்ட்ராடஜிய நம்பி களத்துல இறங்க போறாங்க பாரேன்”
வானதி அவன் கூறிய ‘காலேஜ் ட்ராப் அவுட்’ என்ற வார்த்தையில் சவுக்கால் அடித்தது போல நிமிர்ந்தாள். அருள்மொழிக்கு அவளது இந்த முகமாற்றம் வித்தியாசமாகத் தோற்றமளித்தாலும் சிக்கிய எலியை நகத்தால் பிராண்டி விளையாடும் பூனையின் நிலையில் இருந்தவனுக்கு அவளது உணர்வுகள் பற்றியெல்லாம் கவலை இல்லை.
வானதி அவன் முன்னே உணர்ச்சிவசப்படக்கூடாது என உருப்போட்டுக் கொண்டவள் நிமிர்ந்து சற்றே கர்வத்துடன் அவனை நோக்கினாள்.
“இந்த காலேஜ் ட்ராப்-அவுட் தான் ஹரியானா எலெக்சனுக்கு டிராப்ட் கேம்பெய்ன் ப்ளான் போட்டுக் குடுத்தது சார்... இதே காலேஜ் ட்ராப்-அவுட் ஆட்டி வைக்கிற மாதிரி தான் இனிமே உங்க மொத்த பார்ட்டியும் ஆடப்போகுது... அதை மறந்துடாதீங்க... பை த வே, இது பாலிடிக்ஸ் சம்பந்தப்பட்ட வேலை... இதுல உங்களை மாதிரி பிசினஸ்மேனுக்குப் புரியாத நிறைய சூட்சுமங்கள் இருக்கும்... அது எல்லாத்தையும் ஃபோர் இயர்ஸ் கத்துக்கிட்டுத் தான் இன்னைக்கு உங்க முன்னாடி கேம்பெய்ன் மேனேஜரா நிக்கிறேன்... பட் உங்களுக்குத் தான் யாரையும் மதிச்சு பழக்கம் இல்லையே... சோ உங்க கிட்ட என் புரொபசனுக்கான மரியாதைய நான் எதிர்பாக்கல... அண்ட் ஒன் மோர் திங், தலையில இருக்குற வெயிட்டை அப்பப்போ இறக்கி வைங்க... இல்லனா கழுத்துக்கு பெல்ட் போட்டுட்டு நடமாடுற நிலமை வந்துடப் போகுது” என்று எள்ளலுடன் கூறிவிட்டு அவனது பதிலுக்குக் காத்திராமல் இடத்தைக் காலி செய்தாள்.
தன்னை தலைக்கனம் பிடித்தவன் என மறைமுகமாகக் குத்திவிட்டுச் செல்பவளை கடுஞ்சினத்துடன் ஏறிட்டான் அவன்.
****
அருள்மொழியும் வானதியும் நாளைல இருந்து வருவாங்க மக்களே! இது அரசியல் சார்ந்த கதைக்களம். காதல் கதை கிடையாது. எல்லா கதையும் காதல், குடும்ப அரசியல்னு இருந்தா போரடிக்கும்ல. இந்தக் கதை உங்களுக்கு வித்தியாசமான ஃபீல் குடுக்கும்.
இன்னொரு கதையும் இது கூடவே ரீரன் பண்ணப்போறேன். வந்தாயே மழையென நீயும் பாகம் 1, 2ல வந்த அபிமன்யூ ஷ்ராவணியோட கதைதான் அது. அதுல அரசியல் கொஞ்சம் போல இருக்கும். மத்தபடி அது எதிரும் புதிருமான ரெண்டு கேரக்டர்சோட காதல் கதை மட்டுமே! அந்தக் கதையோட டீசர் நைட் 10 மணிக்கு வரும்.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@kothai-suresh தேங்க்யூ ஆன்ட்டி 🤩
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



