கஷ்டப்பட்டு உதடுகளை இழுத்து புன்னகைத்தபடி "ஹலோ சார்! ஐயாம் ஸ்ராவணி சுப்பிரமணியம்" என்று அவனுக்கு கை கொடுக்க அபிமன்யூ கிண்டலாக "இதாச்சும் உண்மையான பேரா? இல்ல இதுவும் டூப்ளிகேட் நேமா?" என்றதும் அவள் கொடுத்த கையை இழுக்க முயல அதற்குள் அவன் அவளின் கையைப் பற்றிக் கொண்டான்.
"ஜஸ்ட் கிட்டிங்! உடனே கோவம் வந்துடுச்சு மேடத்துக்கு!" என்று சொல்லி கையை குலுக்கியவன் அவள் கையை விட மறந்தவனாக பேச ஆரம்பிக்க ஸ்ராவணி கையை உருவ முயன்றாள்.
அவளின் முயற்சியை கள்ளச்சிரிப்புடன் பார்த்தபடியே "உங்களுக்கு எதாச்சும் கிஃப்ட் குடுக்கணுமே" என்று சொல்ல ஸ்ராவணி பல்லை கடித்தபடி "அதுக்கு ஒரு அவசியமும் இல்ல" என்று சொன்னவள் அவன் கையில் பட்டென்று ஒரு அடி வைக்க அவன் திகைத்தவனாய் அவளின் கையை விடுவித்தான்.
ஸ்ராவணி தன்னுடைய கையை தடவி கொடுத்தபடியே "வெல்கம் டு அவர் சேனல்" என்றாள் முறைத்தபடி.
அவளின் வாழ்த்தை தலையசைத்து ஏற்றுக்கொண்டவன் சட்டை பாக்கெட்டில் கைவைத்து எதையோ எடுக்க முயல மேனகா குழப்பத்துடன் ஸ்ராவணியின் காதில் "அடியே இவன் கிட்ட இருந்து எதையும் வாங்காதடி. அப்புறம் அதை வச்சு எதாச்சும் சீன் கிரியேட் பண்ணப்போறான்" என்று தோழிக்கு அறிவுறுத்தினாள்.
ஸ்ராவணி அவனை பார்த்து கொண்டிருக்கும் போதே பாக்கெட்டிலிருந்து அவளின் செயினை எடுத்தவன் அதை கையில் வைத்து ஆட்டிக் காட்ட இரு பெண்களும் கண்ணை விரித்துச் செயினை பார்த்தனர். ஸ்ராவணிக்கு ஒரு வழியாக தந்தை பரிசளித்த செயின் கிடைத்த சந்தோசத்தில் அவனிடம் இருந்து வாங்க முயல அவன் அதை மீண்டும் பாக்கெட்டில் போட்டு கொண்டான்.
ஸ்ராவணி அதை கண்டு கடுப்புடன் "எக்ஸ்யூஸ்மீ! அது என்னோட செயின். எதுக்கு உங்க பாக்கெட்ல போட்டுக்கிட்டிங்க சார்?" என்று கேட்க
அபிமன்யூ பொய்யான ஆச்சரியத்துடன் "உங்களை இப்போ தான் ஃபர்ஸ்ட் டைமா பாக்குறேன் நானு" என்றபடி அருகிலிருந்த அஸ்வினிடம் "அச்சு! இவங்களை நம்ம முன்ன பின்ன பாத்திருக்கோம்?" என்று கேட்டு வைக்க
அவன் "எனக்கு தெரிஞ்சு ஸ்ராவணிங்கிற பேருல கடந்தகாலத்துலயோ, நிகழ்காலத்துலயோ உனக்கு எந்த கேர்ள் ஃப்ரெண்டும் இல்லடா. பட் வருங்காலத்துல வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு" என்று கேலி பேசி ஸ்ராவணியின் பொறுமையை சோதித்தான்.
ஸ்ராவணி கோபத்தை அடக்கியவளாய் "இப்போ என்னோட செயினை குடுக்க முடியுமா? முடியாதா?" என்று கேட்க
அபிமன்யூ "இது உங்க செயின் தான்னு எதாச்சும் ப்ருஃப் காட்டுங்க. அதுக்கு அப்புறமா நான் இத குடுக்கலாமா வேண்டாமானு முடிவு பண்ணுறேன்" என்றான் அமர்த்தலாக.
"இங்க பாருங்க! அன்னைக்கு நைட் டான்ஸ் பண்ணுறப்போ என்னோட செயின் கழண்டு எப்படியோ உங்க டிரஸ்ல விழுந்துருக்கு. அதை குடுத்துடுங்க" என்றாள் அமைதியான குரலில். அவளின் எந்த பொருளும் அவனிடம் இருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை என்பது அவளின் அந்த கசந்த குரலில் தெளிவாக தெரிய அபிமன்யூ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.
சாதாரணமாக "யூஸ்வலா எனக்கு நைட் மீட் பண்ணுன பொண்ணோட ஃபேஸ் மார்னிங் நியாபகம் இருக்காது மேடம். நீங்க என்னைக்கு என்னை பார்த்திங்கன்னு உங்களுக்கு நியாபகம் இருக்கா? இல்ல உங்களுக்கும் என்னை மாதிரியே நைட் மீட் பண்ணுனவங்களை மறந்து போற பழக்கம் இருக்கா?" என்று கேட்க அவன் கேட்ட அர்த்தத்தில் ஸ்ராவணி கோபத்தின் உச்சிக்கு சென்று விட்டாள்.
கடுப்புடன் "அட சீ! எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க, நம்ம எப்பிடி இருக்கோமோ அதை வச்சு தான் மத்தவங்களை நம்ம கெஸ் பண்ணுவோம்னு. அது சரியா தான் இருக்கு. என்னை பார்த்தா உனக்கு எப்பிடி தெரியுதுடா?" என்று அவள் ஒருமைக்குத் தாவ அபிமன்யூவுக்கு அந்த கோபம் மனதுக்கு இதமாக இருக்கவே அவன் சிரித்துக் கொண்டே சோஃபாவில் அமர்ந்தான்.
*********
இது ரொம்ப ஜாலியானக் கதை மக்களே. நான் ட்ரஸ்ட்ல ஒர்க் பண்ணுனப்ப அங்க வந்த க்ளையண்ட் ஒருத்தர் சொன்ன ஒன் லைனை வச்சு டெவலப் பண்ணுன கதை இது. 2019ல நான் எழுத வந்த புதுசுல எழுதுன மூனாவது கதை. ஒற்றுப்பிழை பற்றிய அறிவு அப்ப இல்ல. விளையாட்டுப்போக்குல ஜாலிக்காக எழுதுன கதை. தினமும் நைட் பத்து மணிக்கு இந்தக் கதை தளத்தில் வரும்.