NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
நினைவில் உறைந்த நீர...
 
Share:
Notifications
Clear all

நினைவில் உறைந்த நீராம்பலே முன்னோட்டம்

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

மியூசிக் சிஸ்டம் ஒலிக்க கார் நெடுஞ்சாலையில் வேகமெடுத்தது.

காரை ஓட்டியவன் ஹர்ஷா. அவனருகே முன்னிருக்கையில் அமர்ந்திருந்தான் இஷான்.

கார் சாலையில் சென்று கொண்டிருந்த போது தான் இஷான் தங்களை முந்திய ஸ்கூட்டியைக் கவனித்தான்.

குடித்திருந்த மதுவின் போதையும், சாண்ட்ராவை மடக்கிவிட்ட வெற்றி கொடுத்த போதையும் சேர்ந்து இரு பெண்கள் தங்களை முந்தி செல்வதா என்ற ஆணவத்தை அவனுக்குள் ஊற்றெடுக்க வைத்தது.

“காரை ஸ்பீடா ட்ரைவ் பண்ணு ஹர்ஷா... அந்த ஸ்கூட்டிய முந்தணும்”

ஹர்ஷாவும் வேகமாகக் காரை ஓட்டினான்.

சாலையில் வாகனம் ஓட்டும் போது முன்பின் தெரியாத பெண்கள் தங்களை முந்தி சென்றால் சில ஆண்களுக்கு அர்த்தமின்றி ஈகோ காயப்பட்டுவிடும். இஷானின் ஈகோவும் இப்போது காயப்பட்டது.

அவர்களைச் சற்று பயமுறுத்தினால் என்ன என்று விபரீதமாக அவனது மூளை யோசித்தது.

 “ஸ்கூட்டிக்குப் பின்னாடி லைட்டா தட்டி விடு” என்றான் டாஷ்போர்டின் மீது கால்களைத் தூக்கி வைத்தபடி.

ஹர்ஷாவும் மதுவின் பிடியில் தானே இருந்தான். இஷான் கூறியதை தட்டாமல் செய்தான். இக்காரியத்திற்கு ஜாதவ், ஆண்டனி, நேத்ரன் மூவரும் கரகோசம் எழுப்பி பாராட்ட வேறு செய்ய அவர்களுக்குத் தாங்கள் செய்வது மடத்தனம் என்பது புத்தியில் உறைக்கவில்லை.

ஃபோர்ட் மஸ்டங் ஸ்கூட்டியை உராயவும் பின்னே அமர்ந்திருந்த நுபூர் திரும்பி காரை முறைத்தாள்.

அதில் ஹர்ஷா சீண்டப்பட்டான்.

“ஏய்! முறைக்கிறாடா... இரு இதுங்களுக்கு ஒரு பாடம் கத்துக் குடுக்குறேன்”

ஸ்கூட்டியின் இடப்பக்கம் சென்றவன் ஸ்டீயரிங் வீலை ஒடித்து ஸ்கூட்டியை இடித்துவிட்டு வேகமெடுத்து அவர்களைத் தாண்டி செல்ல இரு பெண்களும் ஸ்கூட்டியோடு சாலையில் சரிந்தார்கள்.

“ஏய் ஹர்ஷா! என்னடா பண்ணுற? யூ இடியட்” என அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த மித்ரன் வெகுண்டெழுந்தான்.

“குரு...”

இஷான் சமாதானம் செய்ய வந்தான்.

“ஷட்டப்” என சீறிய மித்ரன் பேட்ரோல் வாகனம் குறுக்கே வரவும் காரை நிறுத்தச் சொன்னான்.

அதிலிருந்து இறங்கிய காவல் ஆய்வாளர் கார்க்கண்ணாடியைத் தட்டி விசாரிக்க அவருடன் இருந்த காவலர் காருக்குள் அமர்ந்திருந்த அறுவரையும் நன்றாகப் பார்த்துவிட்டார்.

மித்ரன் காவல் ஆய்வாளரிடம் நிலமையை விளக்கும் போதே அந்தக் காவலருக்கு அடுத்து நடக்கப்போவது தெரிந்திருக்க வேண்டும். அவர்களை விட்டுவிட்டு அந்தப் பெண்களை நோக்கி ஓடினார்.

மித்ரன் ஆய்வாளரிடம் இனி இப்படிப்பட்ட தவறு நடக்காதென உறுதி கொடுத்தான்.

“பட் அந்தப் பொண்ணுங்களுக்கு இஞ்சுரி ஆகிருக்கும் சார்... அவங்க ஹிட் அண்ட் ரன் கேஸ் குடுத்துட்டா கஷ்டம்” என்றார் ஆய்வாளர்.

இஷானோ டாஷ்போர்டுக்குள் கையை விட்டு எதையோ தேடினான். 

சில நொடிகளில் கைக்கடங்காமல் புத்தம்புது ஐநூறு ரூபாய் நோட்டுக்கட்டை எடுத்தவன் அலட்சியமாக நீட்டினான்.

“இதை குடுத்து அவங்க வாயை அடைச்சிடுங்க... ஆஃப்டர் ஆல் பொண்ணுங்க தானே”

மித்ரனின் அதிருப்திப்பார்வை அவனைக் குத்தியது. ஆனால் கண்டுகொள்ளவில்லை.

“சார் சில பொண்ணுங்க பணத்துக்கு மசிய மாட்டாங்க... நீதி நேர்மைனு க்ளாஸ் எடுப்பாங்க... புரிஞ்சிக்கோங்க”

ஆய்வாளர் சங்கடமாகக் கூறினார்.

“ஓ! அப்பிடி கூட பொண்ணுங்க இருக்காங்களா?”

எள்ளல் தொனியில் கேட்டவனுக்கு அவனது மூளை  சாத்வியின் முகத்தை ரீவைண்ட் செய்து காட்டியது.

“அப்பிடிப்பட்ட பொண்ணுங்களா இருந்தா உங்க பாணில மிரட்டி அனுப்பி வைங்க... இந்தப் பணத்தை நீங்களே வச்சுக்கோங்க” என்றான்.

காவல் ஆய்வாளரின் கண்கள் ஐநூறு ரூபாய் தாள்களை காதலுடன் நோக்கியதை அவனும் கவனித்திருந்தானே!

காவல் ஆய்வாளர் முகமெங்கும் பூரிப்போடு “நீங்க கிளம்புங்க சார்... அவங்களை நான் க்ளியர் பண்ணிடுறேன்” என்று சொல்லிவிட்டுச் செல்லவும் மித்ரன் இஷானை முறைத்தான்.

“முறைக்காதிங்க குரு... ப்ராப்ளம் சால்வ் ஆச்சுல்ல... அது போதும்... இப்ப தான் சாண்ட்ரா ப்ராப்ளமுக்கு சொல்யூசன் கிடைச்சிருக்கு... மறுபடியும் மீடியாவோட அட்டென்சன் நம்ம பக்கம் திரும்பக்கூடாது... அதுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்”

இலகுவாக கூறியவனை “ஓரளவுக்குத் தான் பொறுமையா இருப்பேன் சிஷ்யா” என விரல் நீட்டி மிரட்டினான் மித்ரன்.

“குருவோட பொறுமை பறக்குறதுக்குள்ள காரை விரட்டு மச்சி”

பின்னிருக்கையிலிருந்து நேத்ரன் கூறவும் ஹர்ஷா கார்ச்சாவியை முறுக்கினான்.

காரின் மியூசிக் சிஸ்டம் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது.

காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்னை படுத்துதுடா

தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா
தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா

❤️❤️❤️❤️❤️

“என்னை வரச் சொல்லிட்டு ஜாலியா பீர் அடிக்குறான்... இவனை நான் எதால அடிக்கலாம்னு சொல்லு... ஏன் உங்க ஊர்ல மதுவிலக்கு கொண்டுவரக்கூடாது சாத்வி?”

அவளது சொந்தப் பிரச்சனைக்காக கோடிக்கணக்கான மதுப்பிரியர்களின் மகிழ்ச்சிக்கு உலை வைக்கப் பார்த்தவளை எண்ணி சாத்விக்குச் சிரிப்பு வந்தது.

“அவன் பப்புக்கு வரச் சொன்னப்பவே நீ சுதாரிச்சிருக்கணும்... இப்ப புலம்புனா என்ன அர்த்தம்? சில் கேர்ள்... நாளைக்கு மானிங் அவன் செல்லமே தங்கமேனு கொஞ்சுனா நீ அகெய்ன் லவ் மோடுக்குப் போயிடுவ... இந்த இடைப்பட்ட நேரத்துல ஏன் வன்மத்தைக் கக்குற? ரிலாக்ஸ்”

தோழியைச் சமாதானம் செய்தபடி ஸ்கூட்டியை விரட்டியவள் பனையூரை அடைந்த போது பின்னால் வந்த காப்பர் நீலவண்ண ஃபோர்ட் மஸ்டங்கை கவனிக்கத் தவறினாள்.

பழைய வேகத்தில் ஸ்கூட்டியை விரட்டியவளின் கவனம் முழுவதுமாகச் சாலையில் பதியவில்லை. தோழியில் பேச்சைக் கேட்டபடியே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தவள் திடீரென ஸ்கூட்டியின் பின்னே எதுவோ இடிக்கவும் பதறி திரும்பிப் பார்த்தாள்.

அந்த க்ஷணப்பொழுதில் அவளது ஸ்கூட்டியின் இடப்பக்கம் வந்து தட்டிவிட்டு முன்னே விரைந்தது ப்ளூ ஃபோர்ட் மஸ்டங்.

எதிர்பாரா தாக்குதலில் நிலைகுலைந்த சாத்வி ஸ்கூட்டியின் பிடிமானத்தை நழுவவிட அவளும் நுபூரும் ஸ்கூட்டியோடு சேர்ந்து சரிந்து தார்ச்சாலையில் விழுந்தனர்.

ஹைவே பேட்ரோல் வாகனம் ஒன்று இக்காட்சியைப் பார்த்ததும் அந்த ஃபோர்ட் மஸ்டங்கை மடக்கிப் பிடித்து நிறுத்தி அதிலிருந்தவர்களை விசாரிக்க, அங்கிருந்த இருவரில் ஒரு காவலர் மட்டும் வந்து சாலையில் கிடந்த சாத்வியையும் நுபூரையும் கைத்தாங்கலாக எழுப்பி விட்டார்.

இரு பெண்களுக்கும் கை கால்களில் நல்ல சிராய்ப்பு. மிதவேகத்தில் ஸ்கூட்டியில் பயணித்ததால் எலும்பு முறிவின்றி வெறும் சிராய்ப்போடு தப்பித்தனர். சிராய்ப்பில் இரத்தம் துளிர்த்து எரிச்சல் எடுத்தது. நுபூர் விழுந்த அதிர்ச்சியில் அரண்டு போயிருந்தாள்.

“ஒன்னுமில்லைம்மா... கை காலை நல்லா உதறுங்க”

ஆதுரத்துடன் கூறினார் அந்தக் காவலர்.

சாத்வி எப்படியோ சமாளித்துக்கொண்டு இயல்புக்குத் திரும்பினாள். நுபூர் அவர் சொல்வது போல கை கால்களை உதறிக்கொண்டாள். கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது.

சாத்வி சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த ஃபோர்ட் மஸ்டங்கை காட்டினாள்.

“அவங்க தான் சார் எங்க ஸ்கூட்டிய இடிச்சாங்க... இல்லனா நாங்க விழுந்திருக்க மாட்டோம்”

“இன்ஸ்பெக்டர் சார் விசாரிச்சிட்டிருக்குறார்மா... நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்க” என்றார் அவர் ஆறுதலாக.

ஆனால் திரும்பி வந்த காவல் ஆய்வாளரோ சாத்வியிடமும் நுபூரிடமும் ப்ரீத் ஆல்கஹால் அனலைசரை நீட்டினார்.

“நீங்க ரெண்டு பேரும் குடிச்சிருக்கிங்களோனு சந்தேகமா இருக்கு... ஊதுங்க”

அதட்டலோடு ஒலித்த அவரது குரலில் இரு பெண்களும் அதிர்ந்தனர்.

“சார்...” என்று அந்த இன்னொரு காவலர் இழுக்க

“என்னய்யா சார் மோர்னு இழுக்குற?” என எகிறினார் அந்த ஆய்வாளர்.

“வயசுப்பொண்ணுங்க சார்” என்றார் தயங்கியபடி.

“வயசுப்பொண்ணுங்க குடிக்க மாட்டாங்களா? என்னய்யா பேசுற நீ? ஒரு நாள்ல இதே மாதிரி குடிச்சிட்டு டூவிலர்ல போய் விழுந்து எழுந்திருக்குற எத்தனை கேஸை பாக்குறோம்?”

ஆய்வாளர் கோணலாகச் சிரித்த போதே சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த ஃபோர்ட் மஸ்டங் கிளம்பியது.

சாத்வி பதறியவளாக “சார் அவங்க போறாங்க” என்றாள்.

“போகட்டுமே... நீங்க தான் குடிச்சிட்டு அவங்க கார்ல இடிச்சு விழுந்திருக்கிங்க... ஊதுங்கம்மா” என்றார் அவர் மீண்டும்.

நுபூருக்கு இருந்த அதிர்ச்சியோடு காவல் ஆய்வாளர் வேறு இவ்வாறு கூறவும் பயத்தில் அழுகை வந்துவிட்டது.

“சார் நாங்க அப்பிடிப்பட்ட பொண்ணுங்க இல்ல” என்றாள் அவள்.

“அப்ப ஏன்மா ஊதுறதுக்குத் தயங்குறிங்க? ஊதுங்க”

அருகே நின்ற காவலர் இரு பெண்களையும் தயக்கத்தோடு பார்த்தார். மேலதிகாரியை மீறி அவரால் மட்டும் என்ன செய்துவிடமுடியும்?

சாத்விக்கு வந்த கோபத்திற்கு அளவேயில்லை.

“நாங்க ஏன் சார் ஊதணும்? அவங்க தான் எங்களை இடிச்சு தள்ளிவிட்டாங்க... ஃபோர்ட் காரை பாத்ததும் எங்க மேல தப்பு சொல்லுறிங்களா? நான் அவங்க கார் நம்பரை நோட் பண்ணிருக்கேன்... நியாயப்படி அவங்க மேல ஹிட் அண்ட் ரன் கேஸ் போடணும் நீங்க”

“என் கிட்டவே சட்டம் பேசுறியா? உங்க ரெண்டு பேர் மேலயும் ட்ரங்க் அண்ட் டிரைவிங் கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவேன் பாத்துக்க”

ஆய்வாளர் எகிற, சாத்வி தனது மொபைலை எடுத்து கேமராவை ஆன் செய்தாள்.

உடனே ஆய்வாளர் அமைதியாகிவிட்டார்.

“இந்த இன்ஸ்பெக்டர் எங்களை இடிச்ச காரை அனுப்பி வச்சிட்டு நாங்க குடிச்சிட்டு வண்டி ஓட்டுனோம்னு பொய் சொல்லுறார்... குடிக்கலனு சொன்னாலும் நம்பாம ஆல்கஹால் அனலைசர்ல ஊதச் சொல்லுறார்... இவங்க மன்த் எண்ட்ல கேஸ் கணக்கு காட்டுறதுக்கு நாங்க தான் கிடைச்சோமா?”

படபடத்தபடி வீடியோ எடுக்க ஆரம்பித்தாள் சாத்வி.

“ஏய் என்ன மிரட்டுறியா?” என்று ஆய்வாளர் கத்தவும்

“சார்! இந்த வீடியோ வைரல் ஆச்சுனா நம்ம பாடு திண்டாட்டாம் ஆகிடும்” என அவரை எச்சரித்தார் அந்தக் காவலர்.

உடனே ஆஃப் ஆனார் ஆய்வாளர்.

“சரி சரி! கிளம்பி தொலைங்க... இனிமே ரோடோட ஸ்பீட் லிமிட் தெரிஞ்சு வண்டி ஓட்டுங்க”

கத்திவிட்டுப் பேட்ரோல் வண்டியை நோக்கி அவர் செல்ல அந்தக் காவலரோ அவர் சென்றுவிட்டாரா என பார்த்துவிட்டு

“பத்திரமா வீட்டுக்குப் போங்கம்மா... அந்தக் கார்ல வந்தவங்க செலிப்ரிட்டிங்க... அவங்களை தப்பிக்க வைக்க எங்க இன்ஸ்பெக்டர் உங்க கிட்ட இப்பிடி நடந்துக்கிட்டார்... மனசுல வச்சுக்காதிங்கம்மா” என்றார்.

சாத்வியோ சீற்றத்துடன் “அப்பிடி யாருங்க வந்தாங்க?” என்று வினவினாள்.

அந்தக் காவலர் குரலைத் தணித்துவிட்டு “மியூசிக் டைரக்டர் இஷானும் அவரோட சொந்தக்காரர் ஆக்டர் மித்ரனும் தான்... கூடவே அவரோட மாமா மகன் ஹர்ஷா, டைரக்டர் ஜாதவ்னு ஒரு பட்டாளமே அந்தக் கார்ல இருந்துச்சு... இன்ஸ்பெக்டர் விசாரிச்சப்ப நான் எட்டிப் பாத்தேன்” என்றார்.

சாத்விக்குக் கையோடு சேர்ந்து மனமும் எரிந்தது.

“நீங்க கிளம்புங்கம்மா”

அந்தக் காவலர் சென்றுவிட நுபூரும் சாத்வியும் விழுந்து கிடந்த ஸ்கூட்டியை எழுப்பி நிறுத்தினர்.

சாத்வியின் மனம் எரிமலை போல கொதித்தது.

சும்மாவே இஷான் என்ற பெயரைக் கேட்டால் பொங்குபவள் அன்றைய சம்பவத்தில் அவனை முழுவதுமாக வெறுக்க ஆரம்பித்தாள்.

“பாஸ்டர்ட்” என்று அவள் திட்டவும்

“ஏய்! ஏன்டி இப்பிடி?” என நுபூர் அவளை அதட்டினாள்.

சாத்வி இவ்வளவு மோசமான கெட்டவார்த்தையை இதுவரை உதிர்த்ததில்லை. அந்த ஆச்சரியம் அவளுக்கு.

“செலிப்ரிட்டிங்கிற திமிருடி... நான் மட்டும் அவனை நேர்ல பாத்திருந்தேன்னா பளார்னு ஒன்னு விட்டுருப்பேன்”

பற்களைக் கடித்தபடி காயங்கள் கொடுத்த வலியைப் பொறுத்துக்கொண்டு ஸ்கூட்டியைக் கிளப்பினாள் சாத்வி.

💣💣💣💣

ஹலோ மக்களே

இஷான் ரவீந்திரன் - தென்னிந்திய சினிமாவில் கோலோச்சும் பிரபல இசையமைப்பாளன்

சாத்வி - எழுத்தில் ஆர்வம் கொண்ட கல்லூரி மாணவி

இவங்களோட மோதலும் காதலும் கலந்த கதை இது. அருணோதயம்ல புத்தகமா வந்ததால வேற எங்கயும் இந்தக் கதை இருக்காது. சைட்ல இந்தக் கதைய நான் போட்டதுமில்ல. அமேசான்ல படிச்சிருக்கலாம் சிலர். படிக்காதவங்களுக்காக ரீரன் பண்ணப்போறேன். டெய்லி ரெண்டு எபி. தவறாம படிங்க. குட் நைட்!

 

 

1755443444-WhatsApp-Image-2025-06-28-at-094201_6f601298.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : August 17, 2025 8:40 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images
Index