NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

மயக்கமென்ன சோலைக்கிளியே டீசர்

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

தயக்கத்துடன் நின்றவளை ஆற அமர தலை முதல் கால் வரை பார்த்தவன் “நீதான் சித்ரலேகாவா?” என்று கேட்க, ஆமாம் என்று தலையாட்டப் போனவள் கூந்தலை எதுவோ பிடித்து இழுப்பது போல உணர்ந்து வலியில் திரும்பிப் பார்த்தாள்.

அவள் பின்னே நிற்பது யாரெனப் பார்க்க திரும்பிய வேகத்தில் கூந்தலானது அங்கிருந்த ஜூலியட் ரோஸ் செடியின் தண்டில் சிக்கிக்கொண்டது. அதிலிருந்த கூரிய முட்களுக்குள் அவளது கூந்தல் மாட்டியிருக்க தலையை அசைக்க முயன்றபோது வலியெடுத்திருக்கிறது.

புதியவனின் ஆராய்ச்சிப் பார்வை கொடுத்த பதற்றத்தோடு அவனது செடியில் தனது கூந்தல் மாட்டிவிட்டதே என்ற பரபரப்பும் சேர்ந்துகொள்ள, சித்ரலேகா அவசரமாக முடியை இழுக்க ஆரம்பித்தாள்.

“நோ நோ! அது ரொம்ப காஸ்ட்லியான செடி. சின்னதா தண்டு உடைஞ்சா கூட எனக்குப் பிடிக்காது”

அழுத்தமானக் குரலில் கட்டளையிட்டவன் அவளை நோக்கி முன்னேறி வரவும் சித்ரலேகாவின் சின்ன இதயம் ரேஸ் காராய் ஓடத் துவங்கியது.

அவளது ஸ்லிப்பரைத் தொட்டுக்கொண்டு நின்றன அவன் அணிந்திருந்த பிரபல ப்ராண்டின் பென்னி லோஃபர்ஸ் ஷூக்கள்.

சித்ரலேகாவின் பார்வை உயரும் முன்னர் அவளது கூந்தலை வலிக்காமல் செடியிலிருந்து பிரித்தெடுத்தான் அமரேந்திரன். அதையும் மீறி ஒரு முறை வலித்தபோது “ஷ்ஷ்” என்று அவள் முகம் சுருக்க, அவனது பார்வையிலோ அழுத்தம்.

“இதெல்லாம் என் செடி கிட்ட வர்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்”

கடைசி இழை கூந்தலும் விடுபட்ட பிறகு அவனிடமிருந்து சில அடிகள் பின்னோக்கித் தள்ளி நின்றாள் சித்ரலேகா.

அமரேந்திரன் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு தலையைச் சரித்து அவளைப் பார்த்தான். ஏனோ அந்தப் பார்வை முதுகுத்தண்டைச் சில்லிட வைத்தது அவளுக்கு.

“என்ன சொல்லி என் அப்பாவோட மனசுல நீ இங்க வந்தேயாகணும்ங்கிற எண்ணத்தை விதைச்ச?”

நிதானமாக ஒலிப்பது போலத் தோன்றினாலும் அவனது குரலில் இருந்த குற்றம் சாட்டும் தொனியைக் கண்டுகொண்டு அதிர்ந்தாள் சித்ரலேகா.

அதிர்ந்து போய் “இல்லங்க. நான் மாமா கூட…” என்று அவசரமாய் ஏதோ சொல்ல வர

“ம்ம்! போதும்! நீ என்ன ப்ளான் போட்ட, உன் அம்மா என்ன ப்ளான் போட்டாங்கனு எனக்குத் தெரியாது. இந்த மாளிகைக்கு நீ விருந்தாளியா வந்திருக்க. உறவுக்காரியா இல்ல. விருந்தாளிங்க வருவாங்க. பத்து நாள் இருப்பாங்க. அப்புறம் கிளம்பிடுவாங்க. இதை நான் உனக்குச் சொல்லணும்னு அவசியமில்ல. இருக்குற பத்து நாள்ல என் குடும்பப் பெயருக்கு எந்தக் குந்தகமும் வராம பாத்துக்க” என்றான் அமரேந்திரன் கட்டளையிடும் தொனியில்.

சித்ரலேகாவுக்குச் சுறுசுறுவெனக் கோபம் மூண்டது. என்ன ஏதென்று சொல்லும் முன்னரே குற்றம் சாட்டுவது போல பேசினால் யாருக்கும் கோபம் வரும். அதை அவள் மறைக்க விரும்பவில்லை.

“இங்க பாருங்க, நான் ஒன்னும் ‘ஐய் மாமா நம்மளைக் கூப்பிட்டுட்டார், இனி காலம் முழுக்க அங்க ஓசி சாப்பாடு சாப்பிடலாம்’னு ஓடி வரல. இங்க வர்றதுக்கு முன்னாடி நான் அவரை ஒரே ஒரு தடவை தான் பாத்திருக்கேன். எங்கப்பா இறந்த சமயத்துல எங்களுக்குத் துணையா இருந்து அம்மாக்குக் கௌரவமான வேலை ஒன்னை வாங்கி குடுத்தது மாமா தான். அந்த நன்றிக்கடனுக்காக மட்டும்தான் நான் இங்க வந்திருக்கேன். எனக்கு வேற எந்த எண்ணமும் இல்ல. நீங்க எனக்குப் பத்து நாள் குடுத்திங்கல்ல. நான் ஏழு நாளுக்கு மேல இங்க தங்கப்போறதில்ல. நான் படிச்சிருக்கேன் சார். எனக்கேத்த வேலை எதாச்சும் கிடைக்கும். உங்க மாளிகையும், அதோட பிரம்மாண்டமும் எனக்கு ஆசைய குடுக்கல. அசௌகரியத்தையும் பயத்தையும் தான் குடுக்குது. நீங்களே சொன்னாலும் இங்க அதிகநாள் நான் இருக்கமாட்டேன்”

மனதின் கோபத்தை மறைக்காமல் அவள் காட்டியவிதம் அமரேந்திரனையும் சினங்கொள்ளவைத்தது. சினமென்றால் முகம் அஷ்டகோணலாகி, தொண்டை நரம்புகள் புடைக்க கத்தும் அவலட்சணமானக் கோபமில்லை. மாறாய் கண்கள் இடுங்க, தாடை இறுக, இதழ்களில் கோபப்புன்னகை மிளிர்ந்தது.

சிரிக்கும்போதே அவனது ஆடம்ஸ் ஆப்பிள் ஏறியிறங்கியதில் சித்ரலேகாவுக்கு இங்கிருந்து போனால் போதுமென்ற எண்ணம்.

அவள் விலகப்போகையில் அமரேந்திரனின் கரம் ஜூலியட் ரோசுக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த தோட்ட உபகரணப் பெட்டியிலிருந்து சிறிய கத்தரிக்கோல் ஒன்றை எடுத்தான்.

அழகாய் பீச்சும் ஆப்ரிக்காட்டும் கலந்த வண்ணத்தில் சிரித்த ஜூலியட் ரோஸ் பூ ஒன்றின் கீழிருக்கும் காம்பினை ‘பட் ஐ’ எனப்படும் தளிர்கள் வரும் இடத்தில் சரியாகச் சாய்வான கோணத்தில் வெட்டினான்.

‘பூவின் தண்டினை நாற்பத்தைந்து டிகிரி கோணத்தில் வெட்டினால் வெட்டிய இடத்தில் தண்ணீர் தேங்காது. அதனால் பூஞ்சை, பாக்டீரியா தொற்று தவிர்க்கப்படும்’ – படித்த பாடம் நினைவுக்கு வந்தது சித்ரலேகாவுக்கு.

இவ்வளவு நேரம் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் செடியில் நின்ற பூ இப்போது அவனது கரத்தில். ஏனோ பூவின் மீது பரிதாபம் பிறந்தது அவளுக்கு. பூக்களைச் செடியிலிருந்து பறிப்பதை வெறுப்பவள் அவள். செடிகளில் பிறந்து செடிகளில் மடிவதே பூக்களுக்கும் விருப்பம் என்பாள் அன்னையிடம்.

அமரேந்திரன் பூவை அழுத்தி உள்ளங்கைக்குள் பிடிக்கவும் “ஏன்ங்க இப்பிடி அழுத்துறிங்க? இதுக்காகவா பறிச்சிங்க? பூவோட அழகு செடியில இருக்குறப்பதான் பரிபூரணமா இருக்கும்” என்று சொல்ல

“அந்தச் செடியை விலை குடுத்து வாங்கி, இங்க வச்சு பராமரிக்குற எனக்கு இந்தப் பூவை அழுத்திப் பிடிக்கவும், ஒவ்வொரு இதழா பிய்ச்சுப் போடவும் கூட உரிமை இருக்கு.” என அமர்த்தலாகச் சொன்னவன் ஜூலியட் ரோஸின் இதழ்களைப் பிய்க்கத் தொடங்கினான்.

“சைகோ” என்று வாய்க்குள் திட்டியவள் விடைத்த மூக்குடன் அவனைக் கடந்து சென்று அந்த க்ளாஸ் ஹவுசை விட்டே வெளியேறினாள்.

*******

போன நவம்பர்ல எழுத ஆரம்பிச்ச கதை இது. நேத்துதான் முடிச்சேன். இது ஒரு குறுநாவல். சீக்கிரமே தளத்தில் வரும்னு நம்புறேன். இந்தக் கதைல வர்ற லொகேசன்களை மட்டும் ஞாபகம் வச்சுக்கோங்க மக்களே. ஏன்னா அந்திநேரத்து அட்சரங்கள்ல ஆரம்பிச்சு இனி வரப்போற 4 கதைகள் ஒன்னொட ஒன்னு கனெக்ட் ஆகி இந்த லொகேசனை அடிப்படையா வச்சுதான் வரப்போகுது. 

1767759793.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : January 7, 2026 9:53 AM
(@crvs2797)
Honorable Member Member

ஓ மை காட்! அப்படின்னா உங்க மூளைக்கு வேலை கொடுத்தது இல்லாமல், எங்க மூளைக்கும் வேலை கொடுக்கப் போறிங்கன்னு நினைக்கிறேன். கரெக்ட்டா ?

😀😀😀

CRVS (or) CRVA2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 7, 2026 11:37 AM
(@kothai-suresh)
Honorable Member Member
  • சூப்பர்👌👌👌👌

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 7, 2026 12:17 PM
(@s-sivananalakshni)
Estimable Member Member
  1. அமர் ரக்டு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 7, 2026 4:09 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images