
“கல்யாணம் நாளைக்குத்தானே? காலையில அப்பா கூட வந்தா போதாதா?”
கார்க்கதவைத் திறந்துவிட்டபடி சிவகாமியிடம் கேட்டான் புவனேந்திரன்.
“ஸ்வேதாவோட தம்பி கல்யாணம் ஆச்சே! அவ நேத்தே வரச் சொன்னா. இதுவே லேட்னு மூஞ்சிய தூக்குவா புவன்”
சிரிப்போடு சொன்ன சிவகாமி மகன் தனது உடைமைகள் அடங்கிய பேக்கை எடுத்துக்கொண்டு தன்னோடு வரவும் “நாளைக்கு முகூர்த்தத்துக்கு வந்துடு. சும்மா பழசையே யோசிச்சிட்டிருக்காத” என்று சொல்ல
“நானும் மாறனும் வர்றது கஷ்டம். அப்பா வருவார்” என்றான் அவன்.
“வர வர நீ முசுட்டுப்பையனா மாறிட்டு வர்ற புவன்.”
அன்னையும் மகனும் பேசியபடி மண்டபத்தினுள் வர ஸ்வேதா ஓடோடி வந்தாள்.
“வாங்கத்தை! வாங்க புவன்! ஏன் அத்தை உங்களை நான் எப்ப வரச் சொன்னேன்? இன்னும் லேட்டா வந்திருக்கக் கூடாது?” என்று உரிமையாய்க் கோபப்பட்டபடி அவரது உடைமைகள் அடங்கிய பேக்கைப் புவனேந்திரனிடமிருந்து வாங்கிக்கொண்டாள்.
“சரிம்மா! நான் கிளம்புறேன்” எனக் கிளம்ப எத்தனித்தான் புவனேந்திரன்.
திருமண மண்டபம், உறவுக்காரர்கள் கூட்டம் என்றாலே இப்போது அவனுக்கு ஒவ்வாமை! ஒருத்தி செய்த அனர்த்தத்தின் விளைவு அவனை இன்னும் ஆட்கொண்டு ஆட்டி வைக்கிறது.
“என்ன அதுக்குள்ள போகப் பாக்குறிங்க புவன்? வாங்க! கவின் உங்களைப் பாக்கணும்னு சொன்னார்”
“இல்ல ஸ்வேதா கொஞ்சம் வேலை…” என்று புவனேந்திரன் மறுக்கும்போதே அவனுக்குப் பின்னே ஒரு குரல் கேட்டது.
“வந்துட்டிங்களாத்தை? அம்மா உங்களுக்காக வெயிட்டிங்”
குரலால் கவனம் கலைந்து திரும்பிப் பார்த்தான் புவனேந்திரன்.
மெரூன் வண்ணத்தில் மகேஸ்வரி காட்டன் சில்கில் சுடிதார் அணிந்து நின்று கொண்டிருந்தாள் ஒரு பெண். திருத்தமான அவளது முகத்தை எப்போதோ பார்த்த ஞாபகம்.
க்ளட்சில் பாதி அடங்கியிருந்த கூந்தலில் மீதி தோளை மறைத்திருந்தது. மல்லிகைச்சரம் அதை இன்னும் அழகாக்கியிருக்க புவனேந்திரனைப் பார்த்ததும் அவளது இதழ்களில் பளீர் புன்னகை மின்னியது.
“நீங்களா? எப்பிடி இருக்கிங்க?” என்று அவள் விசாரிக்க குழம்பி நின்றவன் புவனேந்திரன் மட்டுமே!
“யாருனு தெரியலையா? ஸ்வேதாவோட தங்கச்சி ஆதிரா”
புவனேந்திரன் புருவம் சுருக்கியவன் “ஹலோ” என்றான்.
“இப்பவும் உங்களுக்கு என்னை ஞாபகம் வரலையா?” தலையைச் சரித்துக் கேட்டவளைச் சிறுவயதில் பார்த்த ஞாபகம் புவனேந்திரனின் மூளையில் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்திருந்து கண் சிமிட்டியது.
“பாத்து வருசக்கணக்காதுல்ல” என்றவன் “அம்மா கல்யாணம் மறுவீடு முடியுற வரைக்கும் இங்க இருப்பாங்க. நான் போயாகணும்” என்றவனிடம்
“நாளைக்கு வருவிங்கல்ல?” என்று கேட்டாள் அவள்.
“அப்பா வருவாங்க. நானும் மாறனும் வர்றது சிரமம்”
“அதெல்லாம் வரலாம். வரணும்னு நினைப்பு இருந்தா”
அழுத்தமாகச் சொல்லி புன்னகைத்தவள் “சரி நீங்க கிளம்புங்க! இதுக்கு மேல உங்களைச் சோதிக்க விரும்பல” என்றதும் புவனேந்திரனின் உதடுகளும் புன்னகையாய் வளைந்தன.
“வர்றேன்மா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
மறுநாள் ஸ்வேதாவின் தம்பி கர்ணனின் திருமணத்துக்கு வந்தே ஆகவேண்டுமா? மனதின் ஒரு ஓரமாகத் தனது திருமணம் நின்ற சமயத்தின் நினைவுகள் கிளர்ந்தெழவும் வேண்டாமெனத் தலையை உலுக்கிக்கொண்டான்.
கார்க்கதவைத் திறந்து அமர்ந்தவன் மீண்டும் ஒரு முறை திருமண மண்டபத்தைப் பார்த்தான். ஓராண்டு கடந்தும் உடைந்த கண்ணாடியின் சில்லுகளாய் அவனை அறுக்கிற சில நினைவுகளைக் கடக்க முடிவதில்லை அத்துணை எளிதாக.
அவன் மறக்க வேண்டிய தருணங்களை நினைவுபடுத்தும் திருமண வைபவத்தில் கலந்துகொள்ள இவ்வளவு தவிப்பவன் எப்படி தனக்கான திருமண வாழ்க்கையை அமைத்துக்கொள்வான்? மிகப்பெரிய கேள்விக்குறி!
“எல்லாத்துக்கும் மனசுதான் காரணம். அதை நம்ம கண்ட்ரோல்ல வச்சுக்கிட்டா பிரச்சனையே இல்ல. பழசை மட்டுமே யோசிக்குறது மனசைப் பாழடைய வைக்குறதுக்குச் சமம். அது நமக்கு நாமளே செஞ்சுக்குற அநியாயம். எல்லாத்தையும் மறந்துட்டுச் சுத்தியிருக்குற அற்புதமான மனுசங்களைப் பாரு. ஒரு நிமிசம் அவங்க எல்லாரும் எப்பிடி வாழ்க்கைய வாழுறாங்கனு யோசி. பழசை நினைச்சு ஒதுங்கி நிக்குறது எவ்ளோ பெரிய முட்டாள்தனம்னு உனக்கே புரியும்”
கண்டிக்கும் குரலில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்த ஆதிராவின் பேச்சு அவனது செவியில் விழுந்தது. எட்டிப் பார்த்தவன் அவள் மொபைலில் யாருக்கோ அறிவுரை சொல்லிக்கொண்டிருப்பதைக் கவனித்தான்.
வார்த்தையின் தெளிவும் அழுத்தமும் அவளது முகத்திலும் பிரதிபலித்தன. காரைக் கிளப்புவதை நிறுத்திவிட்டு அவளை ஊன்றி கவனிக்கத் தோன்றியது புவனேந்திரனுக்கு.
தன்னை ஒருவன் கூர்ந்து நோக்குவதை அறியாமல் காற்றிலாடிய சுடிதாரின் துப்பட்டாவைக் கட்டுக்குள் கொண்டு வரப் போராடியபடியே மொபைலில் உரையாடிக்கொண்டிருந்தாள் ஆதிரா.
காற்றின் தயவால் கூந்தல் கற்றைகள் கன்னத்தை முத்தமிடுவதும், அவற்றை அவள் விலக்குவதும், ஏதோ ஒரு அழகியல் காட்சி போல தோன்றியது புவனேந்திரனுக்கு.
அவனது மனதின் ஒரு ஓரத்தில் ‘நாளை திருமணத்துக்கு வந்தால் தான் என்ன?’ என்ற கேள்வி உதயமானது அந்நொடியில்! கிட்டத்தட்ட பதினான்கு மாதங்களாகத் தன்னை வாட்டிய மாபெரும் ‘ட்ராமாவிலிருந்து’ வெளிவரும் எண்ணம் துளிர்த்தெழுந்தது புவனேந்திரனின் மனதில்!
******
ஹலோ மக்களே
மாயப்பூவே வாசம் எங்கே? கதைக்கு அப்புறம் இந்தக் கதை சைட்ல வரும் மக்களே. பிரதிலிபிலயும் அதே டைம்ல வரும். கண்டிப்பா ஈஸ்வரி – பவிதரனுக்கும் கதை உண்டு. மாயப்பூவே வாசம் எங்கே முடிஞ்சதும் அந்தக் கதைக்கான டைட்டில், டீசர் அனவுன்ஸ் பண்ணுவேன். மது கிட்ட இருந்து புவனைக் காப்பாத்திருக்கேன். அதனால டீசர் எப்பிடி இருக்குனு சொல்லிட்டுப் போங்க!
நாளைக்கு மரம் தேடும் மழைத்துளி முடிஞ்சிடும். புதன்கிழமை கதை முடிவுற்ற நாவல்களுக்குப் போயிடும். சைட்ல இருக்குற முடிவுற்ற நாவல்களை யாரும் படிக்க விரும்புனா லாகின் பண்ணிக்கோங்க. ரொம்ப ஆர்வமா இருந்தா சொல்லுங்க. ஒரு வீக்கெண்ட் மட்டும் லாகின் தூக்கிவிடுறேன். யாருமே சொல்லலைனா எனக்கும் எத்தனை பேர் படிக்கிறாங்கனு தெரியாதுல்ல.
சைட்ல நியூஸ் லெட்டர் சப்ஸ்கிரைப் பண்ணுனவங்க அது ரெகுலரா மெயிலுக்கு வருதானு செக் பண்ணுறிங்களா? உங்க மெயில்ல ‘ப்ரமோசன்’ ‘அப்டேட்’னு இரண்டு பகுதிகள் இருக்கும். அதுல தான் நியூஸ் லெட்டர் வரும். சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க இன்னைக்குப் பண்ணிக்கோங்க. நன்றி!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
வாவ்...! டீசரே ரொம்ப அருமையான இருக்கு. முதல்ல இந்த கதையை கேட்காம போயிட்டோமேன்னு இப்ப ஃபீல் பண்றேன்.
மகிழ் மாமா ஒரு விதம்ன்னா, இந்த புவன் வேற விதம்.
அதாவது தொட்டா சுருங்கி மாதிரி. ஆனா, இந்த தொட்டா சுருங்கிக்குஆதிரா நல்ல காம்பினேஷன் தான். தவிர, நல்ல பாசிடீவ் வைப் உள்ள பொண்ணு. புவன் மாதிரி ஆளுங்களுக்கெல்லாம்...ஆதிரா மாதிரி பொண்ணுங்கத்தான்
பெஸ்ட் பார்ட்னர்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
Bhuvan ah oru incident indha alavu ku mathi iruku and athira pola oru positive ah person avan patner ah irundha rombhavae nalla irukum
Share your Reaction
👌👌👌👌👌👌 eagerly waiting 😍
Share your Reaction
டீசர் செமடா
Share your Reaction
Teaser pattaya kelapputhey 💕💕💕💕💕adi dhool 👏 👏 👏 👏
Share your Reaction
@crvs2797 தேங்க்யூ சிஸ்... வெரைட்டீஸ் ஆப் ஃபீமேல் லீட் வச்சு எழுதணும்னு ஆசை... ஆதிரா கொஞ்சம் வித்தியாசம், கண்டிப்பா மலர் மாதிரி இருக்கமாட்டா 😍
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@kavibharathi கண்டிப்பா 🤩 🤩 🤩
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@priyarajan தேங்க்யூ 🤩 🤩 🤩
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@s-sivananalakshni தேங்க்யூ சிஸ் 😘 😘 😘
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
@sasikumarmareeswari தேங்க்யூ அக்கா 😘 😘 😘
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
டீசர் அசத்துதே 👌👌👌👌
இன்னிக்கு ஸ்வேதா, மகிழ் கான்வோ படிக்கிறச்சே ஆதிரை பேரை பார்த்ததும் புவன் ஜோடியா இவ இருக்கலாமேன்னு ஒரு நினைப்பு வந்தது,
Share your Reaction
teaser asathala irukku
Share your Reaction
super 😍
bhuvanku eththa jodi......
waiting...........
Share your Reaction
@malaram thank you 😍
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



