
வீட்டுக்கு வரவே விருப்பமில்லை கர்ணனுக்கு. ஆனால் வேறு வழியுமில்லையே!
‘நான் உழைத்து வாங்கிய வீட்டில் அவள் மட்டும் சொகுசாக இருப்பாளா? அதுவும் என்னிடம் பிரச்சனை செய்துகொண்டே’
கறுவிக்கொண்டே காரைத் தரிப்பிடத்தில் நிறுத்தினான் அவன்.
அந்த கேட்டட் கம்யூனிட்டியின் பிரம்மாண்ட டவர் நான்கு விங்குகளுடன் எண்ணற்ற வீடுகளோடு விளக்கொளியில் மிளிர்ந்தது. கண்ணை உறுத்தாத ‘வார்ம் ஒயிட்’ நிறத்தில் மெல்லிய மஞ்சள் ஒளியைப் பரப்பின விளக்குகள்.
எதுவுமே கர்ணனின் கருத்தைக் கவரவில்லை.
லிப்டில் ஏறி தனது வீடு இருக்கும் தளத்தை அடைந்தவன் வீட்டின் வெளியே பக்கவாட்டுச் சுவரில் இருக்கும் பெயர்ப்பலகையில் விளக்கு எரியவில்லை என்றதும் கொஞ்சம் பதறினான்.
மரத்தில் நீலவண்ண பின்னணியில் அழகான மலர்கள் அக்ரிலிக் ஓவியங்களாகத் தீட்டப்பட்டு மேல்பகுதியில் இரண்டு குருவிகள் கொஞ்சிக்கொள்ளும் மரச்சிற்பத்தின் கீழே ஒரு பூஜாடியில் பலவண்ண செயற்கை மலர்களோடு கூடிய கண்ணாடி குடுவை அதிலேயே பதிக்கப்பட்டிக்கும். அந்தக் குடுவைக்குள் இருக்கும் எல்.ஈ.டி லைட் சரங்களை தினமும் மாலையில் ஒளிரவிடுவாள் மிருணாளினி.
இன்று அந்த விளக்கு எரியவில்லை என்றதும் சின்னதாய் அவனுக்குள் ஒரு பயம்!
வீட்டின் பாஸ் கோட் போட்டு உள்ளே சென்றவன் வீடு முழுவதும் இருளில் மூழ்கியிருப்பதைக் கண்டதும் பயம் நீங்கி ஆத்திரத்தில் தத்தளித்தான்.
விளக்குகளை ஒளிரச் செய்தவன் கடுங்கோபத்துடன் “இருட்டுன அப்புறம் லைட்டைக் கூட போடமாட்டியாடி?” என்று கத்திக்கொண்டே அவர்களது அறைக்கு வந்தான்.
அங்கே வெறும் அறையும் வார்ட்ரோபும் காற்றிலாடிய திரைச்சீலைகளும் மட்டுமே அவனை வரவேற்றன.
‘எங்கே போயிருப்பாள்?’
அவள் எப்போதும் உலாவும் பால்கனியை நோக்கி ஓடினான். அங்கேயும் மிருணாளினி இல்லை.
மெதுவாக அவனுக்குள் இருந்த கோபம் அடங்கி மீண்டும் பயம் தலைகாட்டியது.
யோசிக்காமல் அவளது மொபைல் எண்ணுக்கு அழைக்க அதுவோ ஜீவனற்ற ஒலியோடு கட் ஆனது.
மீண்டும் மீண்டும் அழைத்துச் சோர்ந்தவனுக்குப் பத்தாவது முறை அழைத்தபோது மிருணாளினி தனது மொபைல் எண்ணை முடக்கிவிட்டாள் என்பது புத்தியில் உறைத்தது.
“ஏன்டி என் மூளைய திங்குற?” என்று கடுப்பாய்க் கத்தியவன் மீண்டும் படுக்கையறைக்குள் வந்து தொப்பென மெத்தையில் அமர்ந்தான்.
இரு கரங்களால் தலையைத் தாங்கி அமர்ந்திருந்தவனின் பார்வை மெதுவாக படுக்கைக்கு அருகே இருந்த டீபாய் பக்கம் போனது.
அதில் பளபளவென மின்னிக்கொண்டு கிடந்தது அவன் மிருணாளினியின் கழுத்தில் கட்டிய தாலி.
தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு எழுந்தவன் வேகமாக வார்ட்ரோபைத் திறந்து பார்க்க அங்கே அவளது உடைகள், உடமைகள் என எதுவுமில்லை.
‘எங்கே போயிருப்பாள்?’ படபடத்த இதயத்தோடு யோசித்தவனின் தலைக்குள் காலையில் அரங்கேறிய சண்டை காட்சி படமாய் ஓடியது.
இருவருமே வார்த்தைகளைச் சிதறடித்தாலும் யார் பக்கம் அதிகத் தவறு என்று பார்த்தால் தராசு சரிந்தது என்னவோ கர்ணனின் பக்கமே!
இன்னும் சிறிது நேரத்தில் வீட்டிலிருந்து மொபைல் அழைப்பு வரும். ஒவ்வொரு ஞாயிறும் மாலையில் வீடியோ காலில் அழைத்து மகனையும் மருமகளையும் நலம் விசாரிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார் எழிலரசி.
அவர் மிருணாளினியிடம் பேசவேண்டுமெனச் சொன்னால்?
கர்ணனின் தலை வெடித்துச் சிதறுவதைப் போல வலித்தது.
மிருணாளினியின் திடீர் மறைவு அவனை ஹைட்ரஜன் குண்டாகத் தாக்கி ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது.
இதெல்லாம் அவன் எதிர்பார்க்கவில்லை. சின்ன பூசல்தானே, சரியாகிவிடுமென மிதப்பாய் இருந்தவனுக்கு மிருணாளினி இப்போது எங்கே இருக்கிறாள் என்பது பற்றி எந்த ஐடியாவும் இல்லை.
‘ரிலாக்ஸ்! யோசி கர்ணா! அவ எங்க போயிருப்பானு கொஞ்சம் நிதானமா யோசி. அவளோட ட்ரஸ் எதுவுமில்ல. தாலிய கழட்டி வச்சிட்டுப் போயிருக்கானா….’
யோசனையின் முடிவில் மிருணாளினி அடிக்கடி உதிர்க்கும் பெயர் ஒன்று நினைவுக்கு வந்தது.
‘உஷா அக்கா, கமல் மாமா’
‘ஒருவேளை அங்கே போயிருப்பாளோ? அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? தாலியைக் கழற்றிவிட்டு மனைவியைத் துரத்திவிட்டக் கொடூரன் என்றல்லவா நினைப்பார்கள்?’
மனம் அமையிழந்து என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்தது. மூளையும் மனமும் ஒருசேர சோர்வடையும் முன்னர் தெம்பூட்ட அவனுக்குக் காபி வேண்டும்.
நேரே சமையலறைக்குச் சென்றவன் காலையில் தான் கோபத்தில் வீசியெறிந்த பால் காய்ச்சும் எவர்சில்வர் சாஸ்பேன் தரையில் கிடப்பதைப் பார்த்தான்.
தரையில் பிசுபிசுவெனக் காபி கறை!
குளித்துத் தலை உலர்த்திய ஈர டவலைக் கூட சரியான இடத்தில் காயப் போடாதவன் முதல் முறையாக தரையில் கிடந்த காபி கறையைச் சுத்தம் செய்ய மாப் எடுத்தான்.
சுத்தம் செய்யும்போதே தரையில் கிடந்தது கொலுசின் மணி போன்ற குட்டியான மணி ஒன்று!
“இதுக்கு மேல என்ன இருக்கு? என்னால இங்க இருக்க முடியாது. நீங்க வர்றிங்களா? இல்ல நானே கிளம்பிவரட்டுமா?”
காலையில் இதே இடத்தில் அழுகையும் கோபமுமாய் யாரிடமோ போனில் பேசியவள் சுடிதார் துப்பட்டாவின் நுனியைத் திருகிக்கொண்டே நின்ற காட்சி மனதில் வந்து போனது.
எதையோ தீர்மானித்தவனாய் காபி கறையோடு இருந்த சமையலறையைச் சுத்தம் செய்தான். பின்னர் சாஸ்பேனைக் கழுவிக் கவிழ்த்துவிட்டுத் தாமதிக்காமல் உஷாவின் எண்ணுக்கு அழைத்தான்.
இந்த வீட்டில் பால் காய்ச்சியபோது உஷாவும் அவரது கணவர் கமலும் வந்திருந்தார்கள் அல்லவா! அப்போதே மொபைல் எண்ணை அவர்களிடமிருந்து வாங்கியிருந்தான்.
இரண்டு மூன்று ரிங்குகளுக்குப் பிறகு அழைப்பு ஏற்கப்பட்டது.
“சொல்லுங்க கர்ணன்! எப்பிடி இருக்குறிங்க?”
“மிருணா அங்க இருக்குறாளா அண்ணி?”
மறுமுனையில் கனத்த மௌனம். கர்ணனின் மனதுக்குள்ளோ ஒரு போரே நடந்துகொண்டிருந்தது.
“அண்ணி!”
“ஹான்! என்ன கேட்டிங்க?”
“மிருணா அங்க இருக்குறாளானு கேட்டேன் அண்ணி”
“மிருணாவா? அவ ஏன் இங்க வரப்போறா?” இம்முறை உஷாவின் குரலில் தெளிவு!
“அது… காலையில ஒரு ஃபைட்….”
அவன் தயங்கியபோதே மொபைல் உஷாவிடமிருந்து இன்னொருத்திக்குக் கை மாறியது.
உடனே ஏதோ மாற்றமாய் உணர்ந்தவன் “அவ அங்கதானே இருக்குறா? மிருணா! பேசுடி” என்று தவிப்பாய் கேட்க
“என்ன பேசணும்?” என வெகு கம்பீரமாய் ஒலித்தது மிருணாளினியின் குரல்.
இவ்வளவு நேரம் அவளைக் காணாததால் உண்டான பயம், பதற்றம், ஆத்திரம் அனைத்தும் வடிந்து போனது கர்ணனிடமிருந்து. தொண்டையைச் செருமிக்கொண்டான்.
“ஏன்? உனக்குத் தெரியாதா?” என்று அவன் கேட்க
“நமக்குள்ள பேச எதுவுமில்லனு உன் மண்டைல உறைக்கட்டும்னுதான் தாலிய கழட்டி வச்சிட்டு வந்தேன். இனி நீ என்ன பேசுனாலும் எனக்குக் காது கேக்காது” என்றவளின் குரலில் கம்பீரத்தோடு சீற்றமும்!
மனதின் கொதிப்பை அடக்க முடியாமல் அவளும் தவிக்கிறாள் என்பது கர்ணனுக்கும் புரிந்தது.
“ஐ அ…”
“எதுவும் தேவையில்ல. இனிமே உஷாக்காவுக்குக் கால் பண்ணாத. எனக்கு உன் குரலைக் கேக்கவே எரிச்சலா இருக்கு. என்னை என்ன செஞ்சாலும் கேள்வி கேக்க நாதியில்லனு சொன்னல்ல. இப்ப எதுக்குக் கால் பண்ணி நீ கேள்வி மேல கேள்வி கேக்குற? உன் வீடு, நீ கட்டுன தாலி, உன் கார்னு எல்லாத்தையும் நீயே வச்சு அழு. யாரையும் நம்பி நான் சென்னைக்கு வரல. என்னை மட்டும்தான் நம்பி வந்தேன். என்னால இங்க தனியா சர்வைவ் ஆக முடியும்”
“டி புரியாம பேசாத! இந்தச் சிட்டி உன்னை முழுங்கிடும்.”
“உன்னை விட வேற எதுவும் எனக்கு ஆபத்து இல்லனு தோணுது.”
“மிருணா! இன்னும் கொஞ்சநேரத்துல ஊர்ல இருந்து கால் வரும். புரிஞ்சிக்க”
“காலையில என் கிட்ட எகத்தாளமா கத்துனப்ப இந்த அறிவு எங்க போச்சு? அது உன் கவலை. நீதான் சமாளிக்கணும். இன்னொரு தடவை கால் பண்ணுன, உன் நம்பரை உஷாக்கா போன்லயும் ப்ளாக் பண்ணிடுவேன்”
“மிருணாளினி சின்னப்புள்ளை மாதிரி பண்ணாதடி”
“அதை யார் சொல்லுறது? எப்பா! உன் சங்காத்தமே வேண்டாம்னுதான் ஒதுங்கி வந்துட்டேன். விட்டுடு என்னை”
கடுப்பும் சலிப்புமாய் அழைப்பைத் துண்டித்தவள் உஷாவிடம் மொபைலைக் கொடுத்தபோது உஷாவின் விழிகளிலும் தவிப்பு.
“கொஞ்சம் நிதானமா இருடி மிரு”
“என் கிட்ட இருந்த நிதானத்தையும் பொறுமையும் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சியெடுத்துட்டான் அவன். இதுக்கு மேலயும் நான்தான் பொறுமையா போகணுமாக்கா? அவனை விட்டா எனக்கு நாதியே இல்லங்கிற மாதிரி எவ்ளோ திமிரா பேசுனான் தெரியுமா?”
“ப்ச்! இதெல்லாம் எல்லா புருசன் பொண்டாட்டிக்குள்ளவும் வர்ற சண்டை தான். அதுக்குனு தாலிய கழட்டிவச்சிட்டு வருவாங்களா?”
“அவனுக்கே மரியாதை இல்லையாம். இதுல அவன் கட்டுன தாலிக்கு என்ன மரியாதை? அது வேற கழுத்துக்குப் பாரமா இருந்து அவன் மூஞ்சிய ஞாபகப்படுத்திட்டே இருக்கும். அதான் கழட்டி வச்சிட்டு வந்தேன். அவன் இவ்ளோ உதாசீனமா பேசுற இடத்துல நான் என்னைப் பொருத்திக்க தயாரா இல்லக்கா. எதுக்கும் ஒரு எல்லை இருக்கு. இன்னைக்கு எல்லா எல்லையையும் உடைச்சிட்டான் அவன்.”
சொல்லும்போதே மிருணாளினியின் குரல் உடைந்து கண்கள் கலங்கி போயின. இதே நிலையில்தான் அவர்களின் வீட்டில் கர்ணனும் இருந்தான்.
அவன் கலங்கியபோதே வீடியோ அழைப்பு எழிலரசியிடமிருந்து வர கொஞ்சம் கொஞ்சமாய் நிதர்சனத்தின் நிழல் அவனை விழுங்க ஆரம்பித்தது.
*******
ஹலோ மக்களே!
நாளை முதல் கர்ணனும் மிருணாளினியும் வருவாங்க. டெய்லி எபி உண்டு. சன்டே டீசர் மட்டும் வரும். மாறன் - மலர், புவன் - ஆதிராவுக்குக் குடுத்த சப்போர்ட்டை கர்ணன் - மிருணாளினிக்கும் குடுப்பிங்கனு நம்புறேன். புவன் கதை நாளை காலையில் தளத்திலிருந்து நீக்கப்படும். நன்றி!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
வெயிட்டிங்👍👍👍👍👍
Share your Reaction
அய்யய்யோ..! இவங்களுக்குள்ளயே இம்புட்டு ரணகளமா? ஆனாலும் பரவாயில்லை, எங்களுக்கு குதுகலமாத்தான் இருக்குது
போங்க. செமை என்டர்டெயின்மென்ட்.
CRVS (or) CRVS2797
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍👍
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



