NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

சித்திரமே! செந்தேன் மலரே! - டீசர்

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

மெத்தை மீது கிடந்த ஈரமான டவலை எரிச்சலுடன் பார்த்தாள் மிருணாளினி. தனிக்குடித்தனம் வைத்துவிட்டு இருவீட்டுப் பெரியவர்களும் கிளம்பிவிட்டார்கள்.

நான்கு நாட்களாக அவளுக்கு எரிச்சலையூட்டும் எல்லா வேலைகளையும் நோட்டில் குறித்துவைத்துச் செய்பவனைப் போல வரிசைகிரமமாகச் செய்துவந்தான் கர்ணன்.

காலையில் குளித்துவிட்டு டவலை மெத்தையில் வீசுவது, காதைச் சுத்தம் செய்யும் ஏர்பட்சை தரையில் வீசுவது, பற்பசையை ஸ்டாண்டிலிருந்து எடுக்கிறேன் பேர்வழியாக அவளது டங்க் – க்ளீனரைத் தள்ளிவிட்டு அவளைத் தேடவிடுவது இவையெல்லாம் அவனது தினசரி எரிச்சலூட்டும் பட்டியலில் அடக்கம்.

ஒரு நாள் இரண்டு நாள் என்றால் இதெல்லாம் எல்லா வீட்டிலும் நடப்பதுதானே என்று தோன்றும்! தினசரி இதுவே வாடிக்கையாகவும் வேண்டுமென்றே செய்கிறான் என்றே எண்ணிவிட்டாள் மிருணாளினி.

எப்போதும் அவன் ஈர டவலை வீசிய இடத்தை ஹேர் ட்ரையர் மூலம் உலர்த்துபவளுக்கு அன்று பொறுமைவிட்டுப் போனது.

கண்ணாடி முன்னே நின்று சட்டைடை டக்-இன் செய்துகொண்டிருந்தவனின் அருகில் போய் நின்றாள்.

கண்ணாடியில் அவளது பிம்பத்தைப் பார்த்தும் பார்க்காதவனைப் போல விசிலடித்தபடியே ஸ்லீவை முழங்கைக்கு ஏற்றிவிட்டவன் தனது மோவாயில் அடர்ந்திருந்த தாடியை வருடிவிட்டுக் கொண்டான்.

மனதுக்குள் மெல்லிய சந்தோசம். ஒருவழியாக மிருணாளினியைக் கோபப்படுத்திவிட்டோமென்ற திருப்தி.

‘கம் ஆன்! வாயைத் திறந்து கத்துடி. இதை வச்சே உன்னைத் துரத்திவிடுறேன்’

மனதுக்குள்  பேசிக்கொண்டவன் எதிர்பார்ப்புடன் காத்திருக்க அவனுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்காமல் சூடாக உரையாடலை ஆரம்பித்தாள் மிருணாளினியும்.

“எதுக்கு ஈர டவலை டெய்லியும் பெட்ல வீசிட்டுப் போறிங்க?”

“சாரி! இனிமே உன் தலை மேல வீசிட்டுப் போறேன்”

மிருணாளினி பற்களைக் கடித்தாள். செய்தது உதவாக்கரை வேலை! இதில் அமர்த்தலாகப் பதிலடி வேறு!

“நீங்க இதெல்லாம் வேணும்னுதானே செய்யுறிங்க? அப்பிடியென்ன விரோதம் உங்களுக்கு என் மேல?”

“ஏன் உனக்குத் தெரியாது?” கிடுக்குப்பிடியாய் அவனும் கேட்கவும் இப்போது அவள் வாயை மூட வேண்டியதாயிற்று!

“என்னாச்சு? போஸ்ட் பாக்ஸ் வாய்க்குப் பூட்டு போட்டுட்ட போல? இங்க பாரு, நான் இப்பிடித்தான் இருப்பேன். பேச்சிலர் லைஃப்ல எப்பிடி இருந்தேனோ அதுல இருந்து ஒரு துளி கூட மாறமாட்டேன். உனக்கு இஷ்டம்னா இங்க இரு. இல்லயா உனக்கு ஏத்த மாதிரி ஏதோ ஒரு பி.ஜில போய் தங்கிக்க. சும்மா குரலை உசத்துறது, கண்ணை உருட்டுறதுனு என்னை மிரட்டுற வேலை வச்சுக்காத.”

“இது உங்களுக்கே ஓவரா தெரியலையா? இப்ப நான் ஒர்க் பண்ணல. ஆனா நான் ஒர்க்ல ஜாயின் பண்ணுனேன்னா நீங்க இழுத்துப் போடுற வேலையையும் செஞ்சிட்டு நான் எப்பிடி ஆபிசுக்குப் போறது?”

“அது உன் பிரச்சனை. மேரேஜ் லைஃப்னா இதெல்லாம் கலந்ததுதான்”

அலட்சியமாகத் தோளைக் குலுக்கியவனின் கன்னத்தில் பளாரென ஒன்று வைக்குமளவுக்கு ஆத்திரம் பெருகியது மிருணாளினிக்கு. அதை அவளது கண்கள் பிரதிபலித்தனவோ என்னவோ!

“கோவம் வருதுல்ல? நான் சொன்னதை மீறி கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னல்ல, அப்ப எனக்கும் இப்பிடித்தான் ஆத்திரம் வந்துச்சு. கையைக் காலைக் கட்டி மணமேடைல உக்கார வச்ச ஃபீல். நீ நினைச்சிருந்தா இந்தக் கல்யாணத்தை நிறுத்தியிருக்கலாம். ஆனா நீ என்ன பண்ணுன? பணக்காரவீட்டுப்பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுச் சொகுசா வாழணும்னு ஆசைப்பட்டல்ல. இதுதான் உனக்கான சொகுசுவாழ்க்கை. என்ஜாய் பண்ணு”

“ஏன் உங்க வாய்ல மோமோஸ் இருந்துச்சா? நீங்க வேண்டாம்னு சொல்லிட்டுப் போயிருக்கலாம்ல” என்று மிருணாளினி சீறவும்

“எங்க வீட்டுக் கிழவி அழுதுடும். அதோட பிடிவாதத்துக்கு முன்னாடி என்னால ஒன்னும் பண்ண முடியல. நீ பண்ணியிருக்கலாம். வேணும்னே நீ அமுக்குணியா இருந்தல்ல. அதுக்கு அனுபவி. எனக்கு டைம் ஆகுது. பை”

மிருணாளினிக்குப் பற்றிக்கொண்டு வந்தது. இவனை எதை வைத்து அடிப்பதென்று தெரியவில்லை. அவள் பார்த்த உம்மணாமூஞ்சி கர்ணனுக்குள் இப்படியொரு வன்மம் பிடித்த ஆசாமி இருப்பான் எனக் கனவிலும் அவள் நினைத்ததில்லை.

கடுப்பில் கையைப் பிசைந்தபடி நின்றவளின் தோற்றம் திறந்திருந்த கதவின் வழியே ஹாலில் இருந்த கர்ணனுக்குத் தெரிந்தது.

கோபத்தில் சிவந்த கன்னங்களில் மெல்லிய பளபளப்பு! அவனை மனதுக்குள் அர்ச்சித்துக்கொண்டிருந்தவளின் இதழ்கள் அசைந்ததில் கொஞ்சம் தலையில் கிர்ரென்ற உணர்வு!

சட்டெனத் தலையை உலுக்கிக்கொண்டான் கர்ணன்.

‘இவளைக் கண்டு மயங்காதே! அத்துணை தூரம் சொல்லியும் அமைதியாய் இருந்து உன் வாழ்க்கையின் போக்கை மாற்றியவள் இவள்’

மனதுக்குள் வைரியாய் அவளை வரித்துக்கொண்டு கிளம்பினான் கர்ணன்.

********

ஹலோ மக்களே

கர்ணனும் மிருணாளினியும் இனிமே ‘கொஞ்சும் மஞ்சள் பூக்கள்’ கதைல வரமாட்டாங்க. அவங்களுக்குத் தனியா கதை வரப்போகுது. பவிதரன் – ஈஸ்வரி கதைக்கு அப்புறம் இந்தக் கதை சைட்ல வரும்.

சித்திரமே! செந்தேன் மலரே!  - டிசம்பர் மாதத்தில் தளத்தில் வரும்! காத்திருங்கள்!

1759755946-WhatsApp-Image-2025-10-06-at-183436_5b27f412.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : October 6, 2025 6:35 PM
(@crvs2797)
Reputable Member Member

அடப்பாவி...! ஊமை குசும்பனா இருந்துக்கிட்டே டபுள்கேம் ஆடறான் பாருங்களேன். இதுல கல்யாணத்துக்கு முன்னாடியே அவளைப் பார்த்து கமுக்கமா கல்யாணத்தை நிறுத்தச் சொல்லி ஆர்டர் வேற போட்டிருக்கான். ஊமை ஊரை கெடுக்குமாம், ஆமை வீட்டை கெடுக்குமாம். நான் சொன்ன ஆமை,  பொறாமை, வெகுளாமை, அறியாமை இப்படி. இந்த கர்ணனும் மிருணாளினியும் இதுல எந்த கேட்டகரியில வராங்கன்னு தெரியலையே ? டைட்டில் சூப்பர்.

எனக்கு பிடிச்ச பாட்டும் கூட.

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : October 6, 2025 7:23 PM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

Athiradiyaa erukkum polaye 😝😝😝😝adi dhool 👏 👏 😘 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : October 6, 2025 7:39 PM
(@kothai-suresh)
Honorable Member Member

சரியான ஊமை குசும்பன் போலயே

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : October 6, 2025 11:31 PM
 Para
(@para)
Trusted Member Member
  • 👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : October 7, 2025 3:28 AM
(@kavibharathi)
Estimable Member Member

Adapavi karna ne silent killer ah ipadi ellam design design ah aval ah verupu yethuriyae da nalla apt ah irukaga sis tom and jerry mathiri 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : November 12, 2025 3:27 PM
(@s-sivananalakshni)
Trusted Member Member

கர்ணன் ஓவர். மிருணாளினி செம. 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : November 12, 2025 9:15 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images