NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

அகம் உறைந்தேன் அரனே - Final Teaser

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஆரோமலே படத்தின் கடற்கரை போட்டோஷூட் காட்சி ஈஸ்வரியின் மொபைலில் ஓடிக்கொண்டிருந்தது. அதில் கதாநாயகி ‘வெட்டிங் போட்டோஷூட்டுக்கான’ அலங்கார வளைவுக்குக் கீழே, கடல் அலைகளில் காலை நனைக்க நின்று கொண்டிருக்கும் மணமக்களை இன்னும் நெருக்கமாகப் போஸ் கொடுக்குமாறு கூறினாள்.

அவர்கள் தடுமாறவும் சக பணியாளனான திரைப்பட நாயகனை அந்த அலங்கார மலர் வளைவுக்குள் தன்னருகே நிறுத்தி, அவனது மார்பில் கரம் பதித்து எவ்வாறு போஸ் கொடுக்கவேண்டுமென அவள் விளக்க, கதாநாயகியின் கண்களில் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்க, இக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த ஈஸ்வரியின் விழிகளிலும் அதே பட்டாம்பூச்சிகள்!

பவிதரன் அவள் கண்ணிமைக்காமல் அக்காட்சியைப் பார்ப்பதைக் கண்டு தலையில் தட்டினான்.

“அப்பிடி என்ன இருக்குனு பாக்குற? ஸ்டீரியோடைப்பிக்கல் அண்ட் கிரிஞ்ச் லவ் சீன் இது.”

ஈஸ்வரி அவனை முறைத்தவள், “எப்பிடி இருந்தா என்ன? நல்லா இருக்குல்ல?” என்றாள்.

“ரொம்ப செயற்கையா இருக்கு. சகிக்கல,” என்றபடி அவளருகே அமர்ந்தான்.

ஈஸ்வரி அவனது புஜத்தில் குத்தியவள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள்.

அவளைத் தோளோடு அணைத்தவன், “இந்தச் சீன்ல ரொம்ப செயற்கையான அழகியல் தெரியுதே தவிர, எங்கயும் காதல்ங்கிற உணர்வு இயல்பா தெரியல. நிஜமான காதல்ங்கிறது ஒரு reflex (அனிச்சை செயல்). அதுக்குச் சினிமாத்தனம் இருக்காது,” என்றான் அவளது விழிகளைப் பார்த்தபடி.

“லைஃபை சுவாரசியமாக்கச் சில சினிமாத்தனமும் வேணும் முதலாளி,” நக்கலாகச் சொன்னவளை இன்னும் இறுக அணைத்துக்கொண்டான் அவளது கணவன்.

“காதலையும் இண்டிமசியையும் பத்தி அறியாதவங்களுக்குச் சினிமாத்தனமான காதல் ருசிக்கும். ஆனா அதை தினசரி அனுபவிக்குறவங்களுக்குத்தான் காதல்ங்கிறது எவ்ளோ இயல்பானதுனு புரியும். நீ தலைமுடியெல்லாம் கலைஞ்சு வேர்க்க விறுவிறுக்க கிச்சன்ல சமைச்சிட்டிருப்பியே, அதுகூட எனக்குள்ள பட்டர்ஃப்ளை மொமெண்ட்டை உருவாக்கும். பைக்ல என் பின்னாடி உக்காருறப்ப நான் பிரேக் போட்டா நீ ஷர்ட் காலரோட சேர்த்து இழுத்துப் பிடிச்சு முதுகுல முகம் புதைச்சுப்பியே... இதை விடவா அந்த மூவி சீன்ல காதலும் ரொமான்சும் சொட்டுது? காதலைப் பொறுத்தவரைக்கும் நீ ஒரு ஞானசூனியம்டி சண்டைக்காரி.”

பவிதரன் கிண்டலாய் முடிக்க ஈஸ்வரி அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

“இவ்ளோ பெருசா விளக்கம் குடுக்குறிங்களே! சார்வாளுக்கு நான் எத்தனையாவது காதலி?” கேட்ட விதமே பவித்ரனுக்குள் கிலி பரப்ப சிரித்துச் சமாளித்தான் அவன்.

“சிரிப்பே சரியில்லையே!” என வில்லத்தனமாக அவள் முறைக்க,

“என்னோட முதலும் கடைசியுமான காதல் நீ மட்டும்தான். சத்தியமா,” என்று அவளது தலையில் கை வைக்க வந்தான் பவித்ரன்.

ஈஸ்வரி சட்டென விலகி அமர்ந்தாள்.

“என்னை அல்பாயுசுல மேல அனுப்பி வைக்க ப்ளான் போடுறிங்களோ?” அவள் மிரண்டு சொல்லவும் சத்தமாய் சிரித்துவிட்டான் பவிதரன்.

“உன் உயிர் உனக்கு வெல்லக்கட்டி இல்ல,” என்றவன், “சரி! அந்த ஏர்பாட்ஸ்ல ஒண்ணைக் குடு. நானும் பாக்குறேன் இந்தக் காதல் காவியத்தை,” என்றபடி அவளோடு சேர்ந்து படம் பார்க்க ஆரம்பித்தான்.

எப்படி வந்தாயோ புன்னகை தந்தாயோ

எப்படி வந்தாயோ என்னையும் கொண்டாயோ

கேளாமலே கையில் வந்த கட்டி தங்கம் நீயே

தள்ளாமலே தள்ளாடுறேன் நானே

மீண்டும் மனம் மிஞ்சிடுதே என்னிடத்தில் தானே!

கட்டிலின் தலைமாட்டில் சுவரில் முதுகு சாய்த்து தோளோடு தோளுரச, ஒவ்வொரு காட்சியிலும் அவள் லயிப்பையும் ரசனையையும் சிரிப்பையும் மிக அருகில் காண அவனுக்கும் பிடித்திருந்தது. ஆகப்பெரும் காதலின் க்ஷணம் என்பது இதுதானே!

காதல் சினிமாத்தனமான அழகியலைத் தேடிக்கொண்டிருப்பதில்லை. அற்புதமான தருணங்களுக்காய் காத்திருப்பதில்லை. அந்த நொடியில் நம் இணையோடு நாம் உணரும் இதமும், அரவணைப்பும் இணைந்ததுதான் காதல்!

‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று பிரகடனப்படுத்துவதற்குக் காதல் ஒன்றும் இரு நாட்டுக்கிடையே நடந்தேறும் ஒப்பந்தம் இல்லை.

‘நீ சொல்லாவிட்டாலும் உன் செயல்களில் நீ நேசிப்பவர் உணரும் ஆத்மார்த்தமான உணர்வே காதல்!’

தூரத்து வெளிச்சப்புள்ளிகள் உங்களுக்குக் கவர்ச்சியாகத் தெரிந்தால் சுற்றியிருக்கும் மின்மினிகளின் இயல்பான ஒளியின் அழகை நீங்கள் தவறவிட்டு விடுவீர்கள்!

அப்படித்தான் இணையரின் காதலும்! நீங்கள் செயற்கையான பிரகடனப்படுத்துதல்களிலும், காதல் இதுதான் என்று காட்சிப்படுத்தப்படும் நாடகத்தனமான கவர்ச்சிகளிலும் தொலைவீர்கள் என்றால் எந்நாளும் நிதர்சனத்தின் காதல் கணங்கள் உங்கள் மனதை நிறைக்காது.

பவிதரன் சொல்ல வந்ததும் இதைத்தான். அவனது தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தவளுக்கு இப்போது அதன் சாராம்சம் புரிந்து போனது.

“இப்பிடி போன்ல படம் பாத்தா கண்ணெரிச்சல், ட்ரை ஐ எல்லாம் வரும்டி.”

“ஆனா எனக்கு இப்பிடி உங்ககூட உக்காந்து பாக்க பிடிச்சிருக்கே.”

சொன்னதோடு தனது நாசியை அவனது கன்னத்து ரோமங்களில் உரசியவளின் நெற்றியில் ஈரத்தோடு படிந்தன பவிதரனின் இதழ்கள்.

இருப்பினும் மனதோரம் சிறுகுறை அவனுக்கு. மொபைலில் பார்ப்பதை விட பெரிய திரையில் பார்த்தால் ஈஸ்வரி இன்னும் மகிழ்வாளே! அதை விட கண்களுக்குக் கேடில்லை. தொலைக்காட்சி ஒன்று வாங்க வேண்டுமென அந்நொடியில் மனதில் குறித்துவைத்துக்கொண்டான் அவன்.

இணையின் தேவை இதுவென அவர்கள் சொல்லாமல் அறிந்துகொள்வதும் நிதர்சனக் காதலின் ஒரு பகுதிதான்!

 

********

ஹலோ மக்களே!

இந்தக் கதையோட கடைசி டீசர் இதுதான். இன்னும் 9 எபிகள்ல கதை முடியும். முடிந்து இரு தினங்கள் மட்டுமே தளத்திலிருக்கும் என்பதால் இப்பவே படிக்க ஆரம்பிச்சிருங்க. ரீரன் டீசர் வந்துட்டே இருக்கு. காத்திருங்கள்!

 
1768747967-InShot_20260118_193303022.jpg

 

Share your Reaction

Loading spinner

This topic was modified 2 months ago by Admin - NM Tamil Novel World

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : January 18, 2026 7:38 PM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

காதல்.... இந்த ஒரு வார்த்தை பல பேரை ஆட்டுவிக்குது...நீ சொன்னது அத்தனையும் மணியான வார்த்தைகள் 👌👌👌👌👌

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 18, 2026 7:55 PM
(@kothai-suresh)
Honorable Member Member

காதல் 💞💞💞💞💞

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 18, 2026 8:18 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@sasikumarmareeswari நன்றிக்கா😍😍😍

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : January 18, 2026 8:23 PM
(@nithyamariappankngmail-com)
Member Admin

@kothai-suresh தேங்க்யூ ஆன்ட்டி 😍

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

ReplyQuote
Topic starter Posted : January 18, 2026 8:24 PM
(@crvs2797)
Honorable Member Member

சினிமாட்டிக் காதலை விட

நீங்க சொன்ன ரியாலிட்டிக் காதலும், காதலை பத்தின விளக்கமும் மிகவும் அருமை.

 

😀😀😀

CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 18, 2026 8:33 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 19, 2026 1:54 AM
(@thani)
Trusted Member Member

Super

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 19, 2026 4:09 AM

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images