“ஹனிபி! இந்தப் பையன் கெட்டப்லயும் நீ செமயா இருக்க” என்று ரித்திமா நேரம் புரியாமல் கலாய்த்து வைத்தாள்.
“ரெண்டு பேரும் ரொம்பச் சிரிக்காதீங்க! பல்லு எல்லாம் கொட்டிடப் போகுது!” என்று தலையைச் சிலுப்ப அவர்களுக்கு இன்னும் சிரிப்புதான் வந்தது.
உள்ளே வந்த கிஷோரும் “நீங்க யாரு? அண்ணியோட தம்பியா?” என்று கேட்டுவிட்டு ராகவிடம் ஹை-ஃபை கொடுக்க அவந்திகாவுக்குக் காதிலிருந்து புகை வராத குறைதான்.
“இல்லடா! நான்தான் அவளோட தாத்தா! உங்க குடும்பம் மொத்தத்துக்கும் எதுல ஒத்துப்போதோ இல்லையோ இந்தக் குசும்புல நல்லா ஒத்துப்போகும்! வாட் எவர்” என்று சொல்லித் தோளைக் குலுக்கியவள் நர்ஸ் வீல் சேருடன் வரவும் அதில் அமருவதற்காக மெதுவாகக் காலை எடுத்துத் தரையில் வைத்தாள்.
ராகவ் அவளைக் கைகாட்டி நிறுத்திவிட்டு வீல் சேரைக் காரில் கொண்டு வைக்கச் சொல்லிவிட்டு அவள் அருகில் வந்தான். குனிந்து அவளைத் தூக்க முயல அவந்திகா “வேண்டாம் ராகவ்! எல்லாரும் பாப்பாங்க” என்று தயங்கினாள்.
“பாத்தா என்ன? என்னோட வைஃப், நான் தூக்கிட்டுப் போறேன்! இதுல மத்தவங்களுக்கு என்ன பிரச்சனை” என்று மறுமொழி கொடுத்துவிட்டு அவளைத் தன் கைகளில் தூக்கிக்கொண்டான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
வெளியே வந்ததும் காரில் உட்கார வைத்துச் சீட் பெல்ட்டை மாட்டிவிட்டு “போலாமா?” என்று புன்னகையுடன் கேட்கத் தலையாட்டினாள் அவந்திகா.
சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்து இறங்கியவன் மீண்டும் அவளைத் தூக்கக் குனிய அவள் இன்னும் தயக்கத்துடன் பார்த்தாள். அதற்கு ஒரு முறைப்பைப் பதிலாக அளித்துவிட்டு அவளைக் கையில் ஏந்திக்கொண்டே சென்றான்.
வெளியே வந்து நின்ற மோகன் “மை சன்! நாட் பேட் டா! எல்லாரும் பொண்டாட்டியக் கைல வச்சுத் தாங்குவேன்னு வார்த்தையால சொல்லுவாங்க! நீ செஞ்சே காமிச்சிட்ட” என்று அவனைக் கேலி செய்தார்.
“ஹலோ அங்கிள்! அது உள்ளங்கைல வச்சுத் தாங்குறதுனு சொல்லுவாங்க! பட் என்னோட வெயிட்டை அவரோட உள்ளங்கை தாங்காது” என்று பதிலுக்குக் கேலி செய்தாள் அவள்.
“மருமகளே! இப்பிடிலாம் பேச ஆள் இல்லாம நாங்க ரெண்டு பேரும் ரொம்பக் கஷ்டப்பட்டுட்டோம்மா!” என்று உண்மை வருத்தத்துடன் கூறினார் குணால்.
“உங்க கதைய அப்புறமாப் பேசுங்க! ஃபர்ஸ்ட் அவங்களை உள்ள கூட்டிட்டுப் போங்க” என்று சொல்லியபடியே உள்ளே கூட்டிச் சென்றார் சுமித்ரா.
சிறிது நேரம் ஹாலில் அனைவருடன் பேசிக் கொண்டிருந்தவள் களைப்பாக இருப்பதாகக் கூற ராகவ் அவளைத் தங்களின் அறைக்குத் தூக்கிச் சென்றான்.
கௌசல்யா அவர்களைப் புன்னகையுடன் பார்த்துவிட்டுப் பிரியாவுடனும் ராதிகாவுடனும் பேச ஆரம்பித்தார். ரித்திமாவோ இனி அவந்திகாவை ராகவ் பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதியுடன் உஷாவை அவளது அறைக்கு அனுப்பிவிட்டு அவளுக்கு ஜூஸ் எடுத்துச் சென்றாள்.
ராகவ் தங்கள் அறையில் அவந்திகாவை விட்டவன் “உனக்கு எது வேணும்னாலும் என்னைக் கூப்பிடு” என்று சொல்லிவிட்டு அலுவலக அறைக்குச் செல்ல முயல அவந்திகா அவனது கையைப் பிடித்தாள்.
“எனக்கு இப்போ உன்கூட இருக்கணும் போல இருக்கு! நீ இங்கேயே என் பக்கத்துலேயே இருக்கியா?” என்று ஆர்வமாகக் கேட்டவளைப் பார்த்துப் புன்னகைத்தவன் அவள் அருகிலேயே அமர்ந்தான்.
சிறிது நேரம் அமைதியில் கழிய அவந்திகாவால் பேசாமல் இருக்க முடியவில்லை. உடனே ராகவின் தோளில் தட்டியவள் “என்கூட இருனு சொன்னேன்! இப்பிடி சைலண்டா இருன்னு சொல்லவேயில்ல! ஏதாச்சும் பேசு ராகவ்! எனக்குப் போர் அடிக்குது” என்று சொல்ல அதற்கும் சிரித்தவனைப் பார்த்துச் சலித்துக்கொண்டாள்.
“சரி நீ பேச வேண்டாம்! நானே பேசுறேன்!” என்று சொல்லிவிட்டு அவன் கரத்தைப் பிடித்தபடி பேச ஆரம்பித்தாள்.
“ராகவ்! உனக்கு உன்னோட வைஃப் பத்தி ஒரு இமேஜினேஷன் இருந்திருக்கும்ல! அவங்க எப்பிடி நடந்துக்கணும், எப்பிடி இருக்கணும்! இந்த மாதிரி. அதைக் கொஞ்சம் சொல்லு, கேப்போம்”
“ம்ம்ம்… பெருசா ஒன்னும் இல்ல! என்னோட வொர்க்ல தலையிடக் கூடாது. ரொம்பக் கேள்வி கேக்கக் கூடாது, தென் எதுக்கெடுத்தாலும் என்னை எதிர்ப்பார்க்கக் கூடாது! அவ்ளோதான்”
“ஐயோ பாவம்ல நீ! ஐ ரியலி ஃபீல் பிட்டி ஃபார் யூ” என்று அவனது தோளில் தட்டி ஆறுதல் கூறியவளைக் கேலியாகப் பார்த்தான் ராகவ்.
“சரி நீ சொல்லு!”
“நான்தான் ஆல்ரெடி என் ட்ரீம் பாய் பத்தி சொல்லிட்டேனே! அதுல ஸ்டார்ட்டிங்க்லயே நீ டிஸ்குவாலிஃபைட்! எல்லாம் என் நேரம்!! பட் நீ எனக்காக இரக்கப்பட வேண்டாம். பிகாஸ் என் ட்ரீம் பாயோட குவாலிட்டிஸ் சிலது உன்கிட்டயும் இருக்கு! இல்லாத விஷயத்தை நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்”
“இன்னும் என்ன எக்ஸ்பெக்டேஷன் வச்சிருந்த நீ” என்று கேட்டுவிட்டு ராகவ் ஆர்வத்துடன் அவளின் பதிலுக்காகக் காத்திருந்தான்.
அவள் தாடையில் விரலால் தட்டி யோசித்தவள் “ஹா! இருந்துச்சு! சொல்றேன்!” என்று அவன்புறம் திரும்பி அமர்ந்து சொல்லத் தொடங்கினாள்.
“ரொம்பப் பெரிய ஆசைலாம் எனக்குக் கெடையாது. என்னோட ட்ரீம் பாய் மாதிரி ஒருத்தனோட ஒரு கியூட்டான லைஃபை வாழணும், அவ்ளோதான். எங்களுக்குனு ஒரு அழகான குட்டி வீடு, சுத்தி மரம் செடி கொடினு ஒரு ரம்மியமான இடத்தில அது இருக்கும். அதோட வராண்டால நின்னு ஒரு கைல காபி கப், இன்னொரு கையை என்னோட ஹப்பி கூடக் கைகோர்த்துட்டு மார்னிங் சன் ரைஸை ரசிக்கணும்! அப்புறம் ரெண்டு பேருமா ஜாலியாப் பேசிட்டே குக் பண்ணணும்! ஈவ்னிங் டைம் ஒன்னா உக்காந்து டிவி பாக்கணும்! வீக்கெண்ட்ல எங்கயாச்சும் போய்க் கால் வலிக்கச் சுத்தணும்! மொத்தத்துல வாழுற ஒவ்வொரு செகன்ட்டையும் ரசிச்சு வாழணும்! அவ்ளோதான்!”
அவள் தன்னுடைய கனவுகளை விவரித்த அழகில் அவன் தொலைந்து போனான்.
அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்தியவன் “உன்னோட எல்லாக் கனவும் நெஜமாகும்! இன்னும் கொஞ்ச நாள்ல நீ பழையபடி ஆனதும் ஃபர்ஸ்ட் வேலையா உன்னோட ட்ரீம் சீன்ஸ் எல்லாமே நம்ம என்ஜாய் பண்றோம்! ஓகேவா?” என்று கேட்க அவந்திகா மகிழ்ச்சியுடன் தலையாட்டினாள்.
“சரி! அதுக்கு அட்வான்ஸா எதாச்சும் குடுக்கிறது!” என்று அவளைக் குறும்பாகக் கேட்க அவந்திகா திருதிருவென்று விழித்தாள் எதுவும் புரியாமல்!
“ஜானு! கண்ணை உருட்டுறத விட்டுட்டுக் குடுக்க வேண்டியதக் குடுத்தா நானும் கொஞ்சம் பிரிஸ்கா ஃபீல் பண்ணுவேன்” என்றவனின் விரல்கள் அவளின் இதழ்களை வருட அவந்திகாவுக்கு விஷயம் புரிந்துவிட்டது.
அவன் விரலைத் தட்டிவிட்டவள் “போடா! என் கனவு கனவாவே இருக்கட்டும்” என்று கிண்டலாகக் கூற ராகவ் “மேடம் அன்னைக்கு மட்டும் நீங்களாவே கிஸ் பண்ணுனீங்க! இப்போ நானே கேட்டும் ஆட்டிட்டியூடா காமிக்கிற?” என்று பதிலுக்குக் கேலி செய்தான்.
அவந்திகா பதில் சொல்லத் தெரியாமல் தடுமாற அவளின் மௌனத்தைச் சம்மதமாக ஏற்றவன் அவளின் இதழில் தன்னுடைய இதழால் முத்தமென்னும் அடையாளத்தைப் பதித்தான்.
இதழ் வழி உயிர் தீண்டிய அந்த உணர்வில் கண் மூடி இருந்தாள் அவந்திகா. அவன் விலகிய நொடி கண்ணைத் திறந்தவள் அவனை வெட்கத்துடன் பார்த்துவிட்டு அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.
“ஓகே உஷா! நான் கெளம்புறேன்டி! டுமாரோ மார்னிங் நான் இங்கேயே வந்துடுறேன்! அப்பப்போ ஹனிபியப் பாத்துக்கோ!” என்று சொல்லியபடியே கிளம்பினாள் ரித்திமா.
உஷாவின் அறையை விட்டு வெளியே வந்தவள் கீழே தாதியிடமும் பிரியாவிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
வெளியே வந்தவள் நடக்கும் பாதையின் குறுக்கே வந்து நின்றவனைப் பார்த்து இவனா என்று சலித்துக்கொண்டாள்.
பின்னர் “நீ இப்போ என்கிட்ட பேசுறதப் பாத்தா உன்னோட மாம்க்கு ஹார்ட் அட்டாக் வந்துடப் போகுது கிஷோர்! வழிய விடு” என்று சொல்லி அவன் தோளைப் பிடித்து விலக்கிவிட்டு நடந்தாள்.
“சோ அவங்களை நெனச்சுத்தான் நீ என்கூடச் சரியாவே பேச மாட்ற? அம் ஐ ரைட்?” என்று கேட்டபடி அவன் பின்னாலே வரவும் அவள் நின்றாள்.
அவன்புறம் திரும்பியவள் “லுக்! நீ என்னைப் பத்தி வீட்ல என்னைச் சொல்லி வச்சிருக்கன்னு எனக்குத் தெரியல, பட் பிந்துவும் நேஹாவும் இன்னொரு தடவை என்னைப் பாபினு கூப்பிட்டாங்கன்னா நான் வீடு தேடி வந்து உன்னை உதைக்க வேண்டியிருக்கும்! பீ கேர்ஃபுல்!” என்று சொல்லிவிட்டு அவள் செல்ல முயன்றாள்.
அவளை நகர விடாமல் அவள் கையைப் பிடித்தவன் “அப்பிடியாச்சும் நீ என்னைத் தேடி வந்தா எனக்குச் சந்தோஷம்தான்” என்று சொல்லியபடி புன்னகை சிந்த நின்றவனை எப்படித் தவிர்ப்பது என்று சத்தியமாக ரித்திமாவுக்குப் புரியவில்லை.
அவனது பிடியிலிருந்து தன் கையை விடுவிக்க அவள் போராடவும் அவனே அவள் கையை விட்டான். பின்னர் “பட் ஒன் கண்டிஷன்! என்னைத் தேடி வந்த எதையும் நான் திருப்பி அனுப்ப மாட்டேன்! சோ உன்னோட மாம் டாட் பெர்மிஷனோட வா! நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று சொல்லிக் கண்சிமிட்டிச் சென்றவனைப் பார்த்துத் திகைத்து நின்றாள் அவள்!
கிஷோரோ மனதில் உள்ள அனைத்தையும் ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டுச் சந்தோஷத்துடன் விசில் அடித்தபடி வீட்டினுள் சென்றான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


