# NM Tamil Novel World > Online community for Tamil novels ## Posts - [கனா 4](https://nmtamilnovelworld.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%be-4/): “கனவு காண்பவர்கள் நிலவொளியை வைத்தே தங்களது பாதையை அடையாளம் காண்கிறார்கள். அதற்கான தண்டனையாக அனைவருக்கும் முன்னர் விடியலைக் காணும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள்”                                                             -ஆஸ்கார் வைல்ட் டெக்கான் பதிப்பாலயத்தின் போர்ட் ரூம்… பதிப்பாலயத்தின் முக்கியமான நபர்கள் மட்டுமே கூடியிருந்த அந்த அறையில் புதிதாக ஒரு பெண்மணி அமர்ந்திருப்பதை யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் வசுப்ரதா. வயலட் நிற மங்கலகிரி காட்டன் புடவை, காது கழுத்தில் டெரகோட்டா அணிகலன்கள், தோளைத் தொட்டுப் பளபளத்த கூந்தல், கண்களை அழகாக எடுத்துக் காட்டிய காஜல்! வயது ஐம்பதுகளில் இருக்கலாம்! அந்த வயதிலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர் மீது பிரமிப்பு உண்டானது அவளுக்கு. மேலாண்மை இயக்குனர் விஷ்வேஸ்வரன் அந்தப் பெண்மணியுடன் இத்தனை தீவிரமாக உரையாடுகிறார் என்றால் கட்டாயம் முக்கியமான நபராகவே இருக்கவேண்டுமென ஊகித்துக்கொண்டாள். வசுப்ரதாவை அந்த மீட்டிங்குக்கு அழைத்தது தேவையற்றது என பொது மேலாளர் சதீஷிடம் கூறிக்கொண்டிருந்தாள் நிவாஷிணி. “ஷீ இஸ் ஜஸ்ட் அ ஸ்டாஃப்… இதுக்கு நம்மளை மாதிரி […] - [கனா 3](https://nmtamilnovelworld.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%be-3/): “எல்லா மனிதர்களும் கனவு காண்கிறார்கள். தங்களது ஆழ்மனதில் பதிந்துபோன தூசி படிந்த நினைவுகளைக் கனவுகளாக இரவுகளில் காண்பவர்கள், காலையில் விழித்ததும் அது வெறும் மாயையென்று உதறிவிட்டு அடுத்த வேலையைக் கவனிக்கச் சென்றுவிடுவார்கள். மிகவும் ஆபத்தானவர்கள் பகற்கனவு காண்பவர்களே! கண்களைத் திறந்துகொண்டு தங்களது கனவுகளைக் காணும் இவர்கள், அந்தக் கனவுகளைச் சாத்தியப்படுத்தும் வல்லமை கொண்டவர்கள்”                                               – டி.இ.லாரன்ஸ் “ரூபாளிக்குத் தமிழ்நாடுதானே பிடிச்சிருக்கு… அதனாலதான் ஆசுவோட பிசினஸை சென்னைல ஸ்டார்ட் பண்ணலாம்னு முடிவு செஞ்சோம்… வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு, என் மகனோட பிசினஸையும் வாழ வைக்கும்னு நம்புறேன்” கம்பீரமாகச் சொல்லியபடியே தாரணி கொடுத்த தேநீரை அருந்தினார் நீல்காந்த். அவரருகே அமர்ந்திருந்த ரூபாளியும் அதை ஆமோதித்தார். “ஆக்சுவலி நாங்க முன்னாடியே சென்னைக்கு வர வேண்டியது தாரு… இவரோட பிசினஸ் பார்ட்னர் பண்ணுன குளறுபடியால ஆறு வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டோம்… நாதன் குடுத்த ரிஸ்க் மேனேஜ்மெண்ட் டெக்னிக்காலதான் இன்னைக்கு எங்களோட ‘நீல் கன்ஸ்ட்ரக்சன் ப்ரைவேட் […] - [கனா 2](https://nmtamilnovelworld.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%be-2/): “எதிர்காலமானது தங்களது கனவுகளின் அழகை நம்புபவர்களுக்கே சொந்தமாகிறது” -எலேனோர் ரூஸ்வெல்ட் டெக்கான் பதிப்பாலயம்… நிவாஷிணி தன்னருகே அமர்ந்திருப்பதை அசவுகரியமாக உணர்ந்தபடி கணினியின் திரையில் அரைகுறையாகக் கவனத்தைப் பதித்திருந்தாள் வசுப்ரதா. “இவ்ளோ ஸ்லோவா வேலை செஞ்சா எப்ப நீ இந்தக் கவரை டிசைன் பண்ணுவ?” என தொணதொணத்தவளை அவளால் எதுவும் செய்ய முடியாத நிலை வேறு. வசுப்ரதாவுக்குக் கொடுக்கப்பட்ட முதல் வேலை டெக்கான் பதிப்பாலயத்தின் மாதாந்திர நாவல் ஒன்றின் அட்டைப்படத்தை வடிவமைக்கும் பணி. அவளுக்கு முன்னர் பணியாற்றிய ஓவியர் ஊதிய உயர்வு கேட்டதால் அவராகவே பணியிலிருந்து விலகும் சூழலை உருவாக்கி வெளியேற்றியிருந்தார்கள். கூடவே அவர் ஒரு அட்டைப்படத்துக்கான ஓவியத்தை வரைய எடுத்துக்கொள்ளும் கால அவகாசமும் அதிகம். இந்நிலையில் தான் சிமேரா என்ற செயற்கை நுண்ணறிவு வரைகலை மென்பொருளானது சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஓவியக்கலையில் அரிச்சுவடி கூட பயிலாதவர்கள் அந்த மென்பொருளை உபயோகித்து பல்விதமான ஓவியங்களைக் கணினியில் வடிவமைக்க முடியும். நாம் எந்த விதமான உடலமைப்பு, […] - [கனா 1](https://nmtamilnovelworld.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%be-1/): “உங்கள் கனவுகளை இறுக்கமாகப் பற்றிக்கொள்ளுங்கள்! ஒருவேளை உங்கள் கனவுகள் ஜீவனிழந்து போகுமாயின், உங்களின் நிஜவாழ்க்கை பறக்கும் சக்தியிழந்த சிறகு முறிந்த பறவையாகிப் போகும்” -லாங்ஸ்டன் ஹியூஸ் அழகான நீண்ட மலைத்தொடர்! அதன் முகடுகளில் தகதகவென ஆரஞ்சு வண்ணத்தில் எட்டிப் பார்க்கும் கதிரவன்! மெதுமெதுவாகக் கதிரவனின் கதிர்கள் முகடுகளை முத்தமிட ஆரம்பிக்கையில் அவனது அணைப்பில் கட்டுண்டு இருந்தவள் விழித்துக்கொண்டாள். சுற்றி முற்றிப் பார்த்தாள்! எங்கு நோக்கினும் மரங்கள் நிறைந்த கானகங்கள் அடங்கிய மலையின் கம்பீரத்தோற்றம்! செம்மலை! அதுதான் அவள் தற்போதிருக்கும் மலைவாசஸ்தலத்தின் பெயர். இந்தப் பகுதியிலுள்ள மலைக்காடுகளில் செம்மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்ததால் பிரிட்டிஷ் அதிகாரிகளால் சூட்டப்பட்ட பெயரை விடுதலைக்குப் பிறகு தமிழாக்கி ‘செம்மலை’ என்று வைத்துவிட்டார்கள். அழகு கொஞ்சும் மலைக்காட்டிற்குள் சுற்றுலா என்ற பெயரில் மனிதர்களை அரசாங்கம் இன்னும் அனுமதிக்கவில்லை. அதனால் அதன் அழகு பாலிதீனாலும், ப்ளாஸ்டிக்காலும் சீரழிக்கப்படாமல் இருந்தது. வீசும் காற்றில் கூட அத்துணை புத்துணர்ச்சி! கண் விழித்தவள் சூரியக்கதிரின் வெம்மை […] - [அகம் 10](https://nmtamilnovelworld.com/agam-urainthen-arane-10/): “அதிகாரத்தால ஒருத்தரை எரிக்க முடியும். ஆனா அன்பால மட்டும்தான் அவங்களை உருக வைக்க முடியும். அன்பால உண்டாகுற ஆதிக்கம் கூட அழகு. அதே நேரம் அதிகாரத்தால வளைக்க நினைக்குற ஆதிக்கம் ரொம்ப ஆபத்தானது. அந்த ஆதிக்கத்தை ஏத்துக்குறப்ப கிடைக்கிற அமைதியை விட நிமிர்ந்து நின்னு போராடுறப்ப கிடைக்குற பதற்றமும், கோவமும் ரொம்ப அற்புதமா இருக்கும் தெரியுமா?”       -ஈஸ்வரி “பொண்ணா மலர்? இன்னைக்கு வெள்ளிக்கிழமை. மகாலெட்சுமியே ஆதிராவுக்கு மகளா பிறந்திருக்கா” மொபைலில் மலர்விழியோடு பேசிக்கொண்டிருந்த அன்னையைப் பார்த்தபடியே சுடிதார் துப்பட்டாவுக்குப் பின் குத்திக்கொண்டாள் ஈஸ்வரி. “அப்பிடியா? ஈஸ்வரி அப்பா அவளை அங்க போகச் சொல்லிட்டாவ. அவளுக்கும் பிள்ளைய பாக்கணும்னு இருக்குதாம். அதான் பவி தம்பி கிட்ட அனுமதி வாங்கிட்டு மதியமே அம்பாசமுத்திரத்துக்குக் கிளம்பணும்னு சொல்லிட்டிருந்தா” ஆதிராவுக்கு அன்று காலையில் பெண் குழந்தை பிறந்திருப்பதாக மலர்விழியிடமிருந்து ஈஸ்வரிக்குச் செய்தி வந்திருந்தது. அவளுக்குக் குழந்தையைப் பார்க்கும் ஆர்வம். ஆனால் மகளைத் தனியே அம்பாசமுத்திரம் வரை […] - [அகம் 9](https://nmtamilnovelworld.com/agam-urainthen-arane-9/): “அவ என்னைத் தள்ளி நிறுத்துறதா நினைக்குறா. ஆனா அவளால என்னை அலட்சியப்படுத்த முடியல. என்னைப் பத்தி ரொம்ப அதிகமா யோசிக்குறா. அந்த யோசனை தான் அவளோட சண்டைக்காரி இயல்பை மீறி அவளைத் தடுமாற வைக்குது. ஒருத்தர் நம்மளைத் தவிர்க்க நினைக்குறது கூட பேரன்போட அடையாளமா தெரியும்னு இன்னைக்குத்தான் நான் புரிஞ்சிக்கிட்டேன். என் மேல அவளுக்கு இருக்குற ஃபீலிங்சைக் கையாளத் தெரியாம       அவ என்னைத் தள்ளி நிறுத்துறா. எத்தனை நாள் இந்தப்  போராட்டம்னு பாக்கலாம்”      -பவிதரன் மனதில் ஊற்றெடுக்கும் உற்சாகத்தோடு நதியூரிலிருந்து கிளம்பி மேரு பில்டர்ஸ் அலுவலகத்துக்கு தர்ஷனை அழைத்து வந்தாள் மதுமதி. அலுவலகத்தை வெளியே நின்று பார்த்தவனின் விழிகளில் சின்னதாய் ஒரு அதிருப்தி. சில பல இலட்சங்கள்தான் டர்ன் ஓவர் என்று சொல்லியிருந்தாள் அவள். அவனால் அதை நம்ப முடியவில்லை. கட்டாயம் கோடிகளில் இருக்கும் என்றே அனுமானித்திருந்தான். அப்படிப்பட்ட நிறுவனம் இன்னும் கொஞ்சம் நவீனமாய், இன்னும் கொஞ்சம் பெரிதாய் […] - [அகம் 8](https://nmtamilnovelworld.com/agam-urainthen-arane-8/): “வயசுக்கோளாறுல எல்லாரோட மனசுலயும் சின்ன சலனம் வரலாம். ஏதோ ஒரு ஈர்ப்பு யாரை நோக்கியோ நம்மளை ஈர்க்க பார்க்கலாம். ஆனா, அந்த இடத்துல நம்மளோட சுயமரியாதை கொஞ்சமா குறைஞ்சிடும்னு தெரிஞ்சாலும், அந்த ஈர்ப்பை நான் வேரோட கிள்ளி எறிஞ்சிடுவேன். வசதிகளும் வெளிச்சங்களும் ஒருத்தரை அழகா காட்டலாம். ஆனா அந்த வெளிச்சம் என் கௌரவத்தைச் சுட்டெரிக்குற அளவுக்குப்  போக நான் எப்பவுமே அனுமதிக்கமாட்டேன்.” -ஈஸ்வரி மதுமதியின் திருமணத்தை எளிமையாக வைத்துக்கொள்ளலாமென மாணிக்கவேலுவும் தர்ஷனின் அன்னையும் முடிவெடுத்திருந்தார்கள். பெரிய மண்டபம், சடங்கு சம்பிரதாயம், ஆடம்பர வரவேற்பு இதெல்லாம் தேவையில்லை என்று மணமுடிக்கப் போகிற இருவரும் சொல்லிவிட்டதால் இந்த ஏற்பாடு. நதியூர் முத்தாரம்மன் கோவிலில் திருமணம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கடந்த இரு மாதங்களில் செய்து முடித்தார் மாணிக்கவேலு. திருமணப்பத்திரிகை எல்லாம் குறைவான எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்டு வந்தாயிற்று. கோவிலில் முதல் பத்திரிக்கையை வைத்து அம்மனுக்குப் பூஜைக்குக் கொடுக்க நதியூருக்குச் சம்பந்தியம்மாள், மகள், வருங்கால மருமகன் சகிதம் […] - [அகம் 7](https://nmtamilnovelworld.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-7/): “ஒரு சின்ன பற்றுதலுக்காக ஏங்கி நிக்குற மனசு கிடைச்ச துணை பிடிச்சுக்கத் துடிக்கும். அந்தத் துணை ரொம்ப ஜாக்கிரதையோட விலகி நின்னா என்ன செய்யுறது? ஒரு கோவிலோட ராஜகோபுரத்தை தூரமா நின்னு ரசிக்குற ஒருத்தனா விலகி நின்னுடட்டுமா? இல்லனா அழகான நதியோட குளுமையை அதுல படகா மாறி நீந்தி அனுபவிக்கட்டுமா? ரொம்ப குழப்பம் எனக்குள்ள. யார் ஒருத்தியோட விலகல்ல என் தேடலுக்கான விடை இருக்குதோ அவளை நான் எப்பிடி அணுகுறதுங்கிறதுதான் இப்ப எனக்குள்ள இருக்குற பெரிய குழப்பம்”     -பவிதரன் ஈஸ்வரிக்கு முதல் மாதச் சம்பளம் வந்துவிட்டது. மொபைலில் வங்கி அனுப்பியிருந்த பணம் வரவு வைக்கப்பட்டச் செய்தியைப் படித்ததும் அவளுக்குள் அத்துணை உற்சாகம். முதல் வேலையாக மலர்விழியிடம் இந்த நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டாள். “எனக்கு ட்ரீட் கிடையாதா ஈசு?” அவள் ஒரு பக்கம் உரிமையாய்க் கேட்டாள். “உனக்கு இல்லாத ட்ரீட்டா? நாளைக்கு ஞாயிறு தானே? நீ உன் மவனோட ஊருக்கு வந்துடு. அம்மைக்கும் […] - [அகம் 6](https://nmtamilnovelworld.com/agam-urainthen-arane-6/): “ஒருத்தரோட பிரசன்னமும், மௌனமும் கூட மனசை ஆட்டுவிச்சிடும்னு சமீபநாட்கள்ல எனக்குப் புரியுது. நான் நினைச்சா இதெல்லாம் தேவையில்லனு அவங்க கிட்ட பேசிட முடியும். ஏன் நான் இதையெல்லாம் ஒரு தவிப்போட ரசிக்குறேன்? ஒருத்தரோட ஆர்வமான பார்வையும் பேச்சும் என் நிதானத்தோட வேர் வரைக்கும் ஊடுருவுதுனு தெரிஞ்ச அப்புறமும் நான் எதுவும் செய்யாம அமைதியா இருக்குறேன். இதுக்கெல்லாம் அர்த்தம் எனக்கும் அவங்க மேல ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்குங்கிறதுதானே? ஆனா ஒன்னு, இந்த ஈர்ப்பை நானும் என் மனசும் அங்கீகரிக்கப்போறதே இல்ல. அதுல நான் தெளிவா இருக்குறேன்” -ஈஸ்வரி மருத்துவமனையிலிருந்து பவிதரனது காரை வீடு வரை ஓட்டி வந்து அவனது சிரமத்தைக் குறைத்துவிட்டார் ராமசாமி. “நான் வாரேன் தம்பி. கை பத்திரம். புண்ணு ஆறுற வரைக்கும் கையில தண்ணி படாம பாத்துக்கோங்க. நான் வரட்டுமா?” “போயிட்டு வாங்கண்ணே! தேங்க்ஸ்” நன்றி சொல்லி அவரை வழியனுப்பிவைத்தவன் படியேறியபோதே செருப்புகள் கிடப்பதைப் பார்த்தபடி வீட்டுக்குள் வந்தான். […] - [அகம் 5](https://nmtamilnovelworld.com/agam-urainthen-arane-5/): “வாய்ப்புகள் நம்மளைத் தேடி வரட்டும்னு காத்திருப்பாங்க சில பேர். ஜன்னல் கதவை மூடி வச்சுட்டுச் சூரிய வெளிச்சம் வரலனு சொல்லுறதுல எப்பிடி அர்த்தமில்லயோ அப்பிடித்தான் வாய்ப்புகள் வரட்டும்னு காத்திருக்குறதுலயும் அர்த்தமில்ல. நமக்கான வாய்ப்பு வரலனா நம்மளே முன்வந்து ஒரு பாதைய உருவாக்கி நடக்க ஆரம்பிச்சிடனும். இல்லனா நம்ம கனவு காலம் முழுக்க கற்பனையாவே முடிஞ்சிடும்”      -பவிதரன் மேரு பில்டர்சில் ஈஸ்வரி நன்றாகப் பொருந்திக்கொண்டாள். சுமதியிடம் வேலையைக் கற்றுக்கொள்வது அவளுக்குச் சிரமமாக இல்லை. வணிகவியலில் பட்டப்படிப்பு படித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் சேர்ந்ததும் கணினியைக் கொடுத்து கணக்குவழக்கைப் பார்க்குமாறு சொல்லிவிடுவார்கள் என்று அவளுக்கு இருந்த மாயை உடைந்தது. தன்னைக் கற்றுக்குட்டி என்று பவிதரன் விளித்ததில் உண்டானச் சுணக்கம் அங்கிருக்கும் வேலையின் தன்மையை அறிந்த பிற்பாடு முற்றிலும் நீங்கியது. பணம் புழங்குமிடம், பணத்தை வைத்து எழுதப்படும் கணக்குவழக்கு இதெல்லாம் அனுபவமில்லாத ஒருத்தியிடம் கொடுக்கவேண்டுமென எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனமெனப் புரிந்துகொண்டாள் அவள். அதே நேரம் அவ்வபோது தன்னைக் […] - [அகம் 4](https://nmtamilnovelworld.com/agam-urainthen-arane-4/): “கடலுக்கு அடியில இருக்குறப்ப அலைகளோட வலிமை யாரோட கண்ணுக்கும் தெரியாது. அது கரையை மோதுறப்பதான் அதோட ஆவேசமும் வலிமையும் உலகத்துக்குத் தெரிய வரும். அதே மாதிரிதான் மனவுறுதியும். நமக்குள்ளவே அதை மறைச்சு வச்சிருக்குறப்ப உலகத்தோட பார்வைக்கு அது தெரியாது. ஏதோ ஒரு சோதனையான சூழல்ல அதை நாம வெளிப்படுத்துறப்பதான் அந்த மனவுறுதியை இந்த உலகம் பாக்கும். பாராட்டும்” -ஈஸ்வரி ஓல்ட் காபி ஹவுஸ், வல்லக்கடவு, திருவனந்தபுரம்… கேரளா பாணி கூரையோடு கூடிய பெரிய வீட்டின் வராண்டா போல அமைந்திருந்த அந்தக் கபேயின் வராண்டாவில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கபேயிலிருந்து தொலைவில் தெரியும் கடற்கரையையும் அங்கே மணல் துகள்களின் எண்ணிக்கைக்கு ஈடாய் தெரிந்த மனிதத் தலைகளையும் பார்த்துக்கொண்டிருந்தாள் மதுமதி. அவள் முன்னே இருந்த மேஜையில் இரண்டு கண்ணாடி தம்ளர்களில் தேநீர் ஆவி பறக்க அமர்ந்திருந்தது. பக்கத்தில் ஒரு தட்டில் தக்காளி சாஸினால் ஸ்மைலி வரையப்பட்டு இதயவடிவில் இரண்டு சிக்கன் கட்லெட்கள் மொறுமொறுப்புடன் சுவைக்கப்படுவதற்காகக் […] - [அகம் 3](https://nmtamilnovelworld.com/agam-urainthen-arane-3/): “எனக்கு என்னைப் பத்தி யோசிக்கவே நேரம் கிடைச்சதில்ல. எனக்குள்ள எப்பவும் ஒரு குரல் கேக்கும். அது என்ன சொல்லும் தெரியுமா? ‘நீ ஓடிக்கிட்டே இருடா. ஒரு நொடி நீ நின்னாலும் உன்னைச் சுத்தி இருக்குற பிரச்சனைகளோட அழுத்தம் உன்னை இறுக்கமா மாத்திடும். நீ மனுசத்தன்மைய இழந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல. நீ ஓடனும் பவி’. உஃப்! அந்தக் குரலை நான் எப்பவும் அலட்சியப்படுத்துறதில்ல. ஒரு நாள் எனக்கும் இந்த ஓட்டம் சலிச்சுப் போகும். அப்ப நான் என்ன செய்யுறது?’      -பவிதரன் மேரு பில்டர்ஸ் பிரைவேட் லிமிட்டட் – பாளை பேருந்து நிலையம் அருகே செயிண்ட் தாமஸ் சாலையில் அமைந்திருக்கும் கமர்ஷியல் காம்ப்ளக்ஸ் ஒன்றின் மேல்தளத்தில் அமைந்திருந்தது அந்தக் கட்டுமான நிறுவனம். கீழே தேசிய வங்கி ஒன்றும், அதன் ஏ.டி.எம்மும் கூடவே அந்தக் காம்ப்ளக்சில் இயங்கி வரும் அலுவலகங்களுக்கான வாகனத்தரிப்பிடமும் இருந்தன. வழிகாட்டியாய் பாதுகாப்புக்காக ஒரு காவலாளியும். பாளை பேருந்து நிலையத்திலிருந்து கால்நடையாகவே […] - [அகம் 2](https://nmtamilnovelworld.com/agam-urainthen-arane-2/): “அன்புங்கிறது மனசுக்குள்ள பூட்டி வைக்க வேண்டிய இரகசியமில்ல. அதை மௌனமா வெளிப்படுத்துனா யாருக்குப் புரியும்? ஒருத்தரோட அன்பு கூண்டுப்பறவையா மனசுக்குள்ள பதுங்கியிருக்குறதைவிட சிறகடிச்சு வானத்துல பறக்குற சுதந்திரப் பறவையா வெளிப்படையா தெரியுறப்ப தான் அதுக்கான வலிமை அதிகமாகுது” -ஈஸ்வரி முற்பகல் பதினோரு மணி வெயில், அந்தப் பழைய ஓட்டு வீட்டின் திண்ணையில் தங்கத்தைப் பூசியது போலப் படர்ந்திருந்தது. மக்கள் எல்லம் அவரவர் அலுவலைக்  கவனித்துக்கொண்டிருந்த நேரத்தில் ஊரே நிசப்தத்தில் ஆழ்ந்திருக்க, அந்த வீட்டின் பின்வாசலில் இருந்த கொய்யா மரத்திலிருந்து ஒரு சிட்டுக்குருவி கத்தவும் அழகான அமைதி கலைந்து போனது. குருவியின் சத்தம் கேட்டதுமே பதறியடித்துக்கொண்டு வீட்டு அடுக்களையிலிருந்து பின்வாயிலுக்கு வந்தார் இளவரசி. அந்த இல்லத்தின் அரசிக்குப் பொருத்தமானப் பெயர்தானே! ஒரு வெண்ணிற  பருத்தி வேஷ்டியில் கொள்ளு பருப்பைக் காயப்போட்டிருந்தவர் அதைத்தான் குருவி தின்று தீர்த்துவிட்டதோ எனப் பதறியடித்து ஓடிவந்திருந்தார். இதைக் காவல் காத்துக் கொண்டிருந்தால் மதிய சாப்பாடு சமைப்பது சிக்கலாகிவிடும். அங்கே […] - [அகம் 1.2](https://nmtamilnovelworld.com/agam-urainthen-arane-1-2/): எப்படியாவது வருங்கால மருமகனை வீட்டோடு மாப்பிள்ளையாக்கி மதுமதியையும் தன் பார்வைக்குள் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் வைராக்கியமாகவே உருப்பெற்றுவிட்டது மாணிக்கவேலுவின் மனதில். தந்தையின் பிடிவாதப் பேச்சைக் கேட்ட பவிதரனுக்கு அதற்கு மேல் வீட்டிலிருக்க பிடிக்கவில்லை. இவ்வளவு நடந்தும் தந்தை மாறவில்லை என்பது அவரது பேச்சிலேயே தெரிகிறது. அவர் மாறுவார் என்று அவன் எதிர்பார்க்கவும் இல்லை.  சில காரணங்கள்! சில பிடிவாதங்கள்! சில தவறான புரிதல்கள்! இவைதான் தங்கள் குடும்பத்தினரின் நடுவே கண்ணுக்குத் தெரியாத வேலியை அமைத்திருப்பதைப் பவிதரன் அறிந்திருந்தான். செல்வந்தக் குடும்பங்களில் வளரும் பிள்ளைகளுக்கு அவர்களது பெற்றோரின் கௌரவத்தையும், செல்வப்பெருமையையும் தூக்கிச் சுமக்கும் கடமை பிறக்கும்போதே வந்துவிடுகிறது. இங்கே திருமணங்கள் வருங்கால தொழில் வளர்ச்சிக்கான முதலீடுகள் மட்டுமே. அதற்காக அன்புக்கும் பாசத்துக்கும் பஞ்சமெனச் சொல்லிவிடமுடியாது. இப்படி பாடுபட்டுச் சொத்து சேர்ப்பது கூட பிள்ளைகள் நல்லபடியாக வாழவேண்டுமென்ற அன்பின் அடிப்படையில்தான். ஆனால் பணம் சேர சேர அதைக் கட்டிக் காப்பாற்றுவது மட்டுமே முன்னுரிமை  பெற்றுவிட, […] - [அகம் 1.1](https://nmtamilnovelworld.com/agam-urainthen-arane-1-1/): “தனிமைங்கிறது ஆளுங்கள் யாரும் நம்ம கூட இல்லாம தனியா இருக்குற நிலை இல்ல. உண்மையான தனிமை என்ன தெரியுமா? அன்பு நிறைய இருந்தும் சம்பந்தவங்க கிட்ட பேச முடியாத மௌனம்தான்”      -பவிதரன் அந்தி வானத்தின் இளஞ்சிவப்பு கொஞ்சம் கொஞ்சமாய் விடைபெற்று கொண்டிருந்த நேரம் அது. தோட்டத்தில் இருக்கும் வேப்பமரம் ஒன்றின் கீழ் நின்று கொண்டிருந்தான் அவன். நல்ல உயரமும் அதற்கேற்ற உடற்கட்டுமாய் முப்பதைத் தொடப் போகிறான். அடர்சிகையானது தோட்டத்து விருட்சங்களின் தயவால் வீசிய காற்றினால் கொஞ்சம் கலைந்து நெற்றியைத் தொட்டு உறவாடிக்கொண்டிருந்தது. பிஸ்தா நிற டீசர்ட்டும், அடர்பழுப்புவண்ண காட்டன் பேண்டும் அணிந்திருந்தவனின் தோற்றத்திலிருந்த இலகுத்தன்மை அவனது மனதில் இல்லை. இன்று நேற்றல்ல, எப்போது அவனுக்கு உலகம் தெரிந்ததோ அன்றிலிருந்து ஏதோ ஒரு காரணத்தால் அவனுக்கு ஒவ்வொரு நாளும் ஒருவிதமான இறுக்கம் மனதில் வந்து அமர்ந்துகொள்ளும். இறுகிய கண்களோடு மரத்தடியில் நின்றபடி வீட்டைப் பார்த்தான். தாத்தா கட்டிய பாரம்பரிய வீடு. கொஞ்சம் […] - [அத்தியாயம் 100 (இறுதி)](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-100-final/): கேரளாவின் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் சாத்தான் வழிபாடு நடத்தும் குழுக்கள் இருப்பதாக காவல்துறையின் அறிக்கைகள் கூறுகின்றன. இதில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலும் மேல்தட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள் என்கிறது இவ்வறிக்கை. இதில் கலந்துகொள்வதற்கான நோக்கங்கள் – அதீத சக்தி வேண்டும், பணக்காரனாகும் ஆசை, எதிரிகளை அழிக்க வேண்டும் – இவையே ஆகும். இதை எல்லாம் சாத்தான் செய்வார் என்று அவர்கள் அழுத்தமாக நம்புகின்றனர். இத்தகைய சாத்தான் வழிபாட்டு குழுக்களுக்கு பெரிய போதைப்பொருள் மாஃபியாக்களின் ஆதரவு இருக்கிறது. இத்தகைய வழிபாட்டு கூட்டங்களில் தங்களது போதைப்பொருட்களை விற்று அவர்கள் கல்லா கட்டுகிறார்கள். சில சாத்தான் வழிபாட்டு குழுக்களில் கொடூரமான உடலை வதைத்து வழிபடும் சடங்குகள், மோசமான பாலுறவு நடத்தைகள் போன்றவை எல்லாம் நடக்கும். இத்தகைய சாத்தான் குழுக்களைத் தடுக்க தனி சட்டங்கள் கேரளாவில் இல்லை. ஆனால் மூடநம்பிக்கையின் அடிப்படையில் நரபலி கொடுப்பதை இந்தியன் பீனல் கோடின் பிரிவு 302 […] - [அத்தியாயம் 99](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-99-pre-final/): கேரளாவில் பதினான்கு மாவட்டங்களில் சாத்தான் வழிபாட்டு குழுவினர் தங்களுக்கென சர்ச்களை நிர்மாணித்துள்ளதாக ராஜிவ் சிவசங்கர் கூறுகிறார். இத்தகைய சர்ச்கள் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்ட, கைவிடப்பட்ட வீடுகளிலும் அப்பார்ட்மெண்ட்களிலும் செயல்படுகின்றன. இவர்கள் ‘சாத்தான் சேவா’ என்ற நிகழ்வை செய்கிறார்கள். அந்நிகழ்வின் போது சாத்தான் உங்களைப் பணக்காரர் ஆக்குவார், எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவைப்பார் என்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க முயலுகிறார்கள். அதிலும் தொழில் நொடிந்த பிசினஸ்மேன்கள் தான் இத்தகைய சாத்தான் வழிபாட்டு குழுக்களின் இலக்கு என்கிறார் ராஜிவ். சாத்தான் வழிபாட்டு கும்பல் நடத்துகிற ப்ளாக் மாஸில் கலந்துகொள்ள ஒரு நபருக்கு முப்பதாயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக அவர் கூறுகிறார். இத்தகைய சாத்தான் வழிபாட்டு குழுக்கள் பற்றிய எச்சரிக்கை கேரளாவின் கத்தோலிக்க தேவாலயங்களில் அடிக்கடி விடுக்கப்பட்டது. கூடவே நம்பிக்கை என்ற பெயரில் சாத்தான் வழிபாடு மற்றும் அதிலுள்ள மூடப்பழக்க்கவழக்கங்களைப் பரப்புகிற நபர்கள் யாராயினும் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டார்கள். […] - [அத்தியாயம் 98](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-98/): குழந்தைகளுக்குப் இளஞ்சிறார்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதும் சாத்தானிஷ வழிபாட்டின் முக்கியமான சடங்காகும். 2016ல் கேரள காவல்துறையினர் சாத்தான் கல்ட் கும்பலைச் சேர்ந்த பதினோரு பேரைக் கைது செய்தார்கள். அவர்கள் அனைவரும் பதினொன்றாம் வகுப்பு மாணவன் ஒருவனை சாத்தான் வழிபாடு என்ற பெயரில் பல ஆண்டுகளாக வன்புணர்வு செய்து வந்தது தெரிய வந்ததால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தக் குழுக்களின் ஊடுருவலால் போதைப்பொருள் மாஃபியாவும் பெருகியுள்ளது என்கிறார்கள் கேரள காவல்துறையினர். சாத்தானிஷத்தில் ஈடுபடுபவர்களுக்குப் போதைப்பொருள் விற்பனை சுலபமாகப் பணமீட்டும் முறையாகத் தெரிகிறது. இத்தகைய சாத்தான் வழிபாட்டாளர்கள் தங்களது சாத்தானிஷ கொள்கைகளை டாட்டூ குத்திக்கொள்வது, அந்தக் கொள்கைகள் பதித்த டீசர்ட் அணிவது மூலம் பரப்புவார்களாம். ராஜீவ் சிவசங்கர் என்ற பத்திரிக்கையாளர், கேரளாவின் வணிக தலைநகரமான கொச்சி இத்தகைய சாத்தான் வழிபாட்டு கும்பல்களின் பிரதான பகுதி என்கிறார். இந்த கல்ட்டானது கொச்சி துறைமுகத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் அவர். இது 2000ல் ஃப்ரெஞ்ச் சுற்றுலா பயணிகளால் இங்கே […] - [அத்தியாயம் 97](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-97/): கேடல் ஜேசன் ராஜா வழக்கைத் தொடர்ந்து இண்டலிஜென்ஸ் அதிகாரிகள் கேரளாவின் சாத்தான் வழிபாட்டு கல்ட் கும்பல்கள் தங்களது வலையை விரிப்பதாக கூறி எச்சரிக்கை விடுத்தார்கள். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பது இம்மாதிரி கல்ட் கும்பல்களின் பெருக்கத்திற்கு முக்கிய காரணமாகும். இம்மாதிரி சாத்தானிஷ குழுக்கள் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடுவார்கள். கிறிஸ்தவர்கள் திருப்பலியைப் போல ‘ப்ளாக் மாஸ்’ என்ற நிகழ்வை சாத்தானிஷ கும்பல்கள் நடத்துவார்கள். கிறிஸ்தவம் மட்டுமன்றி ஏனைய மதங்களிலும் புனிதமானதாகவும் இறையருள் நிறைந்ததாகவும் கருதப்படும் அனைத்து நிகழ்வுகளையும் இந்த சாத்தானிஷத்தின் விழுதுகள் எதிர்ப்பார்கள். கொச்சியிலிருந்த ஒரு பாதிரியாரிடம் விசாரித்தபோது சாத்தானிஷ கும்பல்களின் ப்ளாக் மாஸில் மனித மற்றும் மிருக பலி, மண்டையோட்டில் ஒயின் அல்லது பலி கொடுக்கப்பட்ட மிருகங்களில் இரத்தத்தைப் பருகுவது போன்றவை நடைபெறுகிறது என்றார். கூடவே இவர்கள் கத்தோலிக்க தேவாலயங்களில் இருந்து புனித அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் திருடுவார்கள், இந்தத் திருட்டு அதிகரிப்பது சாத்தானிஷ குழுக்களின் […] - [அத்தியாயம் 96](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-96/): 2017ல் கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கேடல் ஜேசன் ராஜா என்பவர் தனது பெற்றோர், சகோதரி மற்றும் உறவுக்காரப்பெண்மணியை சாத்தான் வழிபாட்டிற்காக கோடாரியால் வெட்டிக் கொலை செய்து அக்கொலையை தீவிபத்து போல சித்தரித்து அதில் தானும் மரணித்தது போல ஒரு டம்மியை வைத்து நாடகமாடிய சம்பவம் மாபெரும் அதிர்வலையை உண்டாக்கியது. அவரை இரயில் நிலையத்தில் கைது செய்து விசாரித்தபோது சாத்தான் வழிபாட்டில் ஒரு பகுதியாக ஆன்மாவை உடலில் இருந்து பிரிக்கும் சோதனையை அவர்களை வைத்து செய்ததாகக் கூறியுள்ளார். சாத்தான் வழிபாட்டில் தான் ஈடுபட்டுள்ளதையும் ஜேசன் ராஜா ஒப்புக்கொண்டார். கொலை செய்த சடலங்களுடன் அவர் மூன்று நாட்கள் இருந்துள்ளார். பக்கத்து வீட்டுக்காரர்கள் கேட்டதற்கு அவர்கள் அனைவரும் சுற்றுலா சென்றுள்ளதாகக் கூறியுள்ளார். அவரைக் கைது செய்த ஐ.ஜி மனோஜ் ஆப்ரஹாம் கொலை செய்த சடங்களோடு மூன்று நாட்களைக் கழித்த கேடல் ஜேசன் ராஜா பின்னர் அச்சடலங்களை ஒன்றன் பின் ஒன்றாக கழிவறையில் வைத்து எரிக்கவும் செய்திருக்கிறார். […] - [அத்தியாயம் 95](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-95/): 2004ல் போலீசுக்கு உதவிய விக்கி ஹட்சசன் என்ற பெண்மணி காவல்துறையினரின் அவசரத்தாலும், தங்களுக்குச் சாதகமாக சாட்சி சொல்லவில்லை என்றால் கொலைவழக்கில் அவரையும் குற்றவாளியாக்கிவிடுவோமென்ற மிரட்டலாலும் தான் மிஸ்கெல்லி, எகோல்சுக்கு எதிராக பாலிகிராப் சோதனையில் பேசியதாகக் கூறினார். 2007ல் கொலை செய்யப்பட்ட சிறுவர்களின் உடலில் கட்டியிருந்த ஷூ லேஷ்களில் இருந்த தலைமுடி டி.என்.ஏ சோதனைக்காக அனுப்பப்பட்டது (90களில் இச்சோதனை கிடையாது). அதில் எகோல்ஸ், பால்ட்வின், மிஸ்கெல்லி மூவரது டி.என்.ஏவோடும் அந்த தலைமுடியிலிருந்த டி.என்.ஏ ஒத்துப்போகவில்லை. அதற்கு மாறாக அந்த முடி மூன்று சிறுவர்களில் ஒருவனான ஸ்டீவி ப்ராஞ்சின் மாற்றாந்தந்தையான டெர்ரி ஹோப்ஸ் என்பவரின் டி.என்.ஏவோடு ஒத்துப்போனது. அதோடு கொலை நடந்த இடத்தில் கைப்படுத்தப்பட்ட இன்னொரு தலைமுடி டெர்ரி ஹோப்சின் நண்பரின் டி.என்.ஏவோடு ஒத்துப்போனது. டெர்ரி ஹோப்ஸ் தான் கொலை செய்யவில்லை என்று மறுத்தார். ஆனால் இந்த டி.என்.ஏக்களை ஆதாரங்களாக வைத்து எகோல்ஸ், பால்ட்வின் மற்றும் மிஸ்கெல்லி மூவரும் மேல்முறையீடு செய்து தங்களது தரப்பு […] - [அத்தியாயம் 94](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-94/): விக்கி ஹட்சசன் காவல்துறையினருக்கு உதவ முன்வந்தார். அதன் அடிப்படையில் சாத்தான் வழிபாடு நடக்கும் இடத்திற்கு யாரெல்லாம் வருகிறார்கள் என்பதைக் கண்காணித்து அதில் சந்தேகப்படும்படியான நடத்தை கொண்ட மிஸ்கெல்லி என்ற பதினேழு வயது இளைஞனின் பெயரைக் குறிப்பிட்டார். மிஸ்கெல்லி, எகோல்ஸ் இருவரும் கலந்துகொண்ட சாத்தான் வழிபாடு கூட்டத்தில் அவரும் கலந்துகொண்டு அங்கே நடந்தவற்றை காவல்துறையினரிடம் கூறியுள்ளார். கூடவே அவருக்கு உண்மை கண்டறியும் சோதனையான பாலிக்ராப் டெஸ்டும் நடந்துள்ளது. அதன் மூலம் காவல்துறையினர் மிஸ்கெல்லியை விசாரிக்க ஆரம்பித்தார்கள். முதலில் குற்றத்தின் தன் பங்கு இல்லை என மறுத்தாலும் பின்னர் தனது பங்கு என்ன என்பதை விவரித்தான். அந்த மூன்று சிறுவர்களையும் மறைத்து வைக்க அவன் உதவியுள்ளான். ஆனால் எகோல்சும், பதினாறு வயதான ஜேசன் பால்ட்வின்னும் தான் அச்சிறுவர்களைக் கொடூரமாகக் கொலை செய்தார்கள் என்ற உண்மையைச் சொல்லிவிட்டான். இந்த மூவரும் ஜூன் 1993ல் கைது செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு எதிராக எந்த நேரடி ஆதாரங்களும் இல்லை. கூடவே […] - [அத்தியாயம் 93](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-93/): 1993, மே 3ல் எட்டு வயது சிறுவர்களான கிறிஸ்டோபர் பையர்ஸ், மிக்கேல் மூரே, ஸ்டீவி ப்ராஞ்ச் என்ற மூவரும் வெஸ்ட் மெம்பிஸ்கு சைக்கிள் ஓட்டிச் சென்றுள்ளார்கள். அன்று மாலை மூவரின் பெற்றோரும் சிறுவர்களைக் காணவில்லை என்று காவல்துறையில் புகாரளித்துள்ளார்கள். அடுத்த நாள் காவல்துறையினர் அச்சிறுவர்களின் உடையற்ற உடல்களை ராபின் ஹுட் ஹில்ஸ் எனப்படும் மலைப்பகுதியிலுள்ள வடிகால் பள்ளத்தில் கண்டெடுத்தார்கள். அச்சிறுவர்கள் மூவரும் அடித்து துன்புறுத்தப்பட்டு ஊனப்படுத்தப்பட்டது அடாப்சியில் தெரியவந்தது. காவல்துறையினர் இது சாத்தான் வழிபாட்டுடன் சம்பந்தப்பட்ட கொலை என நம்பினார்கள். உடனே அவர்கள் செய்தது தன்னைத் தானே சாத்தானிஷ்டாகச் சொல்லிக்கொள்ளும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பதினெட்டு வயதான டேமியன் எகோல்ஸ் என்பவனை விசாரித்தது தான். அவனுக்குப் போதைமருந்து பழக்கம், மன அழுத்தம், மனரீதியான பிரச்சனைகள் உண்டு என்பது அவனை விசாரிக்கும்போது தெரியவந்தது. ஆனால் அவன் அச்சிறுவர்களைத் தெரியாது என்று மறுத்துவிட்டான். அச்சமயத்தில் தான் விக்கி ஹட்சசன் என்ற பெண்மணியின் எட்டு வயது […] - [அத்தியாயம் 92](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-92/): 1980களில் அமெரிக்காவை சாத்தானிஷ வழிபாடு திகிலூட்டியது எனலாம். நியூபெர்ரியும் அவனது மற்ற மூன்று நண்பர்களும் வசித்து வந்தது சிறிய நகரமொன்றில். அங்கே சாத்தானிஷத்தின் கொடும் கரங்கள் பரவிய விதம் ஒரு கொடூர கொலையில் முடிந்தது. அவர்களிடமிருந்து சாத்தானின் உருவப்படங்கள், சாத்தானிஷத்தின் அடையாளங்கள் பதித்த பொருட்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டன. காவல்துறையினர் நன்கு விசாரித்தபோது தான் இந்நால்வரும் போதைக்கு அடிமையானவர்கள் என்ற விபரம் தெரியவந்தது. அதிலும் ஜிம் ஹார்டி மற்றும் ரான் க்ளமெண்ட்ஸ் இருவருக்கும் மனரீதியான பாதிப்பும் போதைமருந்து உபயோகத்தால் ஏற்பட்டுள்ளது. க்ளமெண்ட்சின் அன்னை அவனுக்கு மனோதத்துவ சிகிச்சை கொடுக்க முயன்றபோது அவன் தெரபிஷ்டுகளிடம் தனக்கு கொலை செய்வதில் இருக்கும் ஆர்வத்தைக் கூறியுள்ளான். ரோலண்டோ தனது காதில் யாரோ கொலை செய்யும்படி கட்டளையிடுவதாக கூறுவதாகவும், அந்தக் குரல் சாத்தானுடையது என்றும், சாத்தான் தனக்கு சக்திகளை வழங்கியதாகவும் நம்பியுள்ளான். ஸ்டீவன் நியூபெர்ரியைக் கொல்லும் முன்னர் ஜிம் ஹார்டி தனது நண்பர்களிடம் சாத்தானிடம் தனது திறமையை நிரூபிக்க […] - [அத்தியாயம் 91](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-91/): சாத்தானிஷத்தின் மீதான நம்பிக்கையால் உலகெங்கும் ஏகப்பட்ட கொலைகள் நடந்துள்ளன. அவற்றில் 1987ல் அமெரிக்காவின் மிசோரி கம்யூனிட்டியை உலுக்கிய ஒரு கொலைவழக்கு தான் ஸ்டீவன் நியூபெர்ரி என்ற இளைஞனின் மரணம். அதே ஆண்டு டிசம்பர் ஆறில் தனது நண்பன் ஜிம் கார்டி மற்றும் பெட்டி ரோலண்ட், ரான் க்ளமெண்ட்ஸ் என்ற இருவரோடும் சேர்ந்து தொடர்வண்டி ட்ராக் அருகே ஒரு பூனையோடு சென்றுள்ளான் நியூபெர்ரி. இந்நால்வரும் சிறிய மிருகங்களை வதைத்துக் கொல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள். நியூபெர்ரி அந்தப் பூனையைக் கொல்ல தான் செல்கிறோமென நினைத்து அவர்களோடு செல்ல, ஜிம் ஹார்டியோ மற்ற மூவரிடமும் நியூபெர்ரியைக் கொல்லும்படி கட்டளையிட்டிருக்கிறான். அடுத்த சில நிமிடங்களில் நியூபெர்ரியின் முகத்தை பேஸ்பால் பேட்டால் மூவரும் தாக்கியிருக்கிறார்கள். அவன் உணர்விழந்து விழும்வரை அடித்தவர்கள் இறந்துவிட்டான் என்றதும் ஒரு பாறைத்துண்டை அவன் மார்போடு வைத்து உடலைச் சுற்றி கயிற்றால் கட்டி குடிநீர் தொட்டி ஒன்றில் போட்டுவிட்டு அவனைக் கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை […] - [அத்தியாயம் 90](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-90/): ‘தி பீஸ்ட் ஆப் சாத்தான்’ குழுவினர் ஃபேபியோவையும் மேரினோவையும் கொன்று யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டார்கள். அவர்களைத் தேடிக் களைத்த போலீசாரும் காதல் ஜோடி ஊரை விட்டு ஓடிப்போய்விட்டார்கள் என்று வழக்கை முடித்துவிட்டார்கள். ஆனால் ஃபேபியோவின் தந்தை மிச்செல் மற்றும் மேரினோவின் அன்னை லிசா இருவரும் சேர்ந்து ஆறு ஆண்டுகள் தங்கள் பிள்ளைகளைத் தேடும்படி அதிகாரிகளுடன் போராடினார்கள். அவர்களின் போராட்டம் வீணாய் தான் போனது. இது குறித்து இத்தாலிய ப்ளாக் ஒன்றுக்கு மிச்செல் பேட்டி கொடுத்தபோது அதிகாரிகள் எவ்வாறு அவர் கொடுத்த புகாரை அலட்சியம் செய்தார்கள் என்பதை விவரித்தார். தனது மகனையும் அவனது காதலியையும் தேடுவதற்காக அவர்களைப் போலவே இரவு வாழ்க்கையில் ஐக்கியமாகியுள்ளார் மிச்செல். “தி பீஸ்ட் ஆப் சாத்தான் குழுவினரை இசைக்கலைஞர்கள் என்ற முறையில் சந்தித்தித்தேன். அதுவும் அவர்களின் விசிறி என்ற முறையில். ஆனால் காலம் கடந்த பின்னர் தான் அவர்கள் என் மகனைக் கொன்ற கொலைகாரர்கள் என்பது தெரியவந்தது. சாத்தானிய […] - [அத்தியாயம் 28](https://nmtamilnovelworld.com/konjum-manjal-pookal-28/): ‘நம்ம மைண்ட்ல கான்சியஸ் மைண்ட், சப்கான்சியஸ் மைண்ட்னு ரெண்டு பகுதிகள் இருக்குறதா சொல்லுவாங்க. அந்த சப்கான்சியஸ் மைண்ட் ரொம்ப பவர்ஃபுல்லானது. ஒருத்தரை நாம பாத்துப் பேசுறப்ப அவங்க பேசுற ஸ்டைல், பாடி லாங்வேஜ் இதெல்லாம் அந்த சப்கான்சியஸ் மைண்ட்ல ஸ்டோர் ஆகும். அது ஸ்டோர் பண்ணுன எல்லா விசயங்களையும் அப்பப்ப நடக்குற சம்பவங்களோட கம்பேர் பண்ணி பாக்கும். பழைய ஆபத்தான சம்பவத்தோட இப்ப நடக்குற இன்சிடெண்டை ஒப்பிட்டுப் பாத்துட்டு அது டேஞ்சர்னு சிக்னல் காட்டுறதைதான் நாம ‘மனசுகு ஒரு மாதிரியா இருக்கு, தப்பா ஏதோ நடக்கப்போகுதுனு தோணுது’னு சொல்லுவோம் அடிக்கடி. பல நேரங்கள்ல சப்கான்சியஸ் மைண்ட் சொன்னது நடந்திடும். எப்பவுமே உங்களோட உள்ளுணர்வு குடுக்குற சிக்னலை கவனிங்க” -ஆதிரா அன்று காலையில் மில்லுக்குச் செல்லும்போதே மனதில் ஏதோ இனம்புரியாத அலைக்கழிப்பு ஆதிராவுக்கு. இந்த மாதிரியான மனநிலை இருக்கும்போது முடிந்தவரை புதிய வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளமாட்டாள் அவள். அதே போல சிக்கலான வேலை […] - [அத்தியாயம் 89](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-89/): ஜனவரி 7, 1998ல் ஃபேபியோ டோலிஸ் என்பவரும் அவரது பத்தொன்பது வயது காதலியான சியாரா மேரிணோவும் நள்ளிரவு பப் ஒன்றில் தி பீஸ்ட் ஆப் சாத்தான் இசைக்குழு மற்றும் கல்ட் குழுவினரைச் சந்திக்கச் சென்றிருக்கின்றனர். சிறிது நேரம் கழித்து அந்தக் குழுவின் தலைவனான ஆண்ட்ரியா வோல்பே என்பவன் இந்த ஜோடிகளை பப்பை விட்டு வெளியே அழைத்துச் சென்றுள்ளான். அவனும் அவனது குழுவினரும் சேர்ந்து அந்த ஜோடிகளை நகரத்திற்கு வெளியேயுள்ள சோம்மா லம்பார்டோ என்ற இடத்திற்கு அழைத்து வந்துள்ளனர். வடமேற்கு மிலனிலிருந்து அந்த இடம் கிட்டத்தட்ட முப்பது மைல் தொலைவு. அங்கு வந்ததும் அவர்கள் வட்டமாக குழுமி மதுபானம் அருந்தியதோடு போதைப்பொருட்களையும் உட்கொண்டிருக்கிறார்கள். பின்னர் வேல்பேவுடன் சேர்ந்து ஏனைய எழுவரும் சியாரா மேரினோவை சாத்தானுக்குப் பலியிடவேண்டுமென கூறியிருக்கிறார்கள். சியாரா ‘அன்னை மேரி’ போல தோற்றமளித்தது தான் வோல்பே எடுத்த அம்முடிவுக்குக் காரணமென பின்னாட்களில் விசாரணையின்போது அக்குழுவினர் தெரிவித்தார்களாம். வோல்பேவின் இம்முடிவை டோலிஸ் ஏற்கவில்லை. […] - [அத்தியாயம் 88](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-88/): ‘தி பீஸ்ட் ஆப் சாத்தான்’ என்ற இத்தாலிய சாத்தான் வழிபாட்டு குழு 1988 முதல் 2004 வரை சாத்தான் வழிபாடு என்ற பெயரில் தொடர் கொலைகளையும் குரூரச் செயல்களையும் செய்து வந்தார்கள். அந்தக் குழுவின் உறுப்பினர்களான ஆண்ட்ரியா இசிடோன் வால்பே, நிக்கோலா ஒனூசன் சபோனே, பாவ்லோ ஓஜி லியோனி, மேரியோ ஃபெரோசிட்டி மாசியோனே, பியட்ரோ வெட்ரா க்வர்ரரி, மார்கோ கில் ஜாம்போலோ, எரோஸ் காவோஸ் மான்டிரஸ்சோ மற்றும் எலிசபெட்டா பல்லாரின் போன்றோர் இந்த அனைத்து கொடூர கொலைகளையும் செய்துள்ளனர். இக்குழுவினரால் நிகழ்த்தப்பட்ட தொடர்கொலைகள் ‘போருக்குப் பிந்தைய இத்தாலியில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் குற்றங்களில் ஒன்று’ என பி.பி.சி தெரிவித்தது. இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பத்திரண்டு பேர். அனைத்துமே திட்டமிட்ட குற்றங்கள். சாத்தான் வழிபாடு என்ற பெயரில் இரக்கமின்றி நிகழ்த்தப்பட்ட குரூரமான கொலைகள் இவை. இந்த பீஸ்ட் ஆப் சாத்தான் குழுவினர் தங்களை ஒரு இசைக்குழுவினராகக் காட்டிக்கொண்டார்கள். கூடவே தங்களது குழு ஒரு கல்ட் குழு […] - [அத்தியாயம் 87](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-87/): ரிச்சர்ட் ரமிரேஜ் தன்னை ஒரு சாத்தானிஷ்டாக வெளிப்படுத்திக்கொண்டான். அவனது விசாரணைகளின் போது கூட சாத்தான் பற்றிய குறிப்புகள் பலவற்றை அவன் கூறியுள்ளதாக காவல்துறையினர் கூறுகிறார்கள். அவனது மணிக்கட்டில் ‘பெண்டாக்ராம்’ எனப்படும் நட்சத்திரத்தைச் சுற்றி வட்டம் இருப்பது போன்ற அடையாளத்தை டாட்டூவாகப் போட்டிருந்தான். அது சாத்தான் வழிபாட்டில் இருக்கும் ஒரு சின்னமாகும். அவன் செய்த குற்றங்களுக்கான விசாரணை 1989ல் ஆரம்பித்தது. அந்தாண்டு செப்டம்பரில் பதிமூன்று கொலைகள் மற்றும் இதர பிற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ரமிரேஜ் செய்த குற்றங்கள் மனிதர்களால் புரிந்துகொள்ளக்கூடிய அளவைத் தாண்டிய குரூர குணத்துக்கும், அலட்சியத்துக்கும், தீய எண்ணங்களுக்கும் காலங்காலமாக உதாரணமாக இருக்கும் என்றார். தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது கூட ரமிரேஜ் அதற்காக வருந்தவில்லை. மரண தண்டனை விதிக்கப்பட்டு சான் – க்விண்டின் மாகாண சிறைச்சாலையில் இருந்தபோது ரமிரேஜ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவனது மரண தண்டனை வரிசை வரும் […] - [அத்தியாயம் 86](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-86/): ரிச்சர்ட் ரமிரேஜ் சீரியல் கொலைகாரன் மட்டுமல்ல, கற்பழிப்பு, வழிப்பறி என அவன் மீது ஏகப்பட்ட குற்றங்கள் உண்டு. எண்பத்து நான்கிலிருந்து ஐந்து வரை அவனால் கலிபோர்னியாவில் கொல்லப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மட்டும் பதிமூன்று. இவனை ‘நைட் ஸ்டாக்கர் (Night Stalker)’ என்று புனைப்பெயரிட்டு அழைத்தார்கள். இவன் டெக்சாஸிலுள்ள எல்பாசோவில் வளர்ந்தான். அவனைப் பற்றி கிடைத்த அதிகாரப்பூர்வ தகவல்களின்படி ரிச்சர்ட்டின் கசின் வியட்னாம் போரில் கலந்துகொண்டு அங்கே அவன் பெண்களை கொடுமைப்படுத்தி வன்புணர்வு செய்து கொலை செய்த புகைப்படங்களை ரிச்சர்டிடம் அடிக்கடி காட்டியிருக்கிறான். ரிச்சர்டின் பதிமூன்றாவது வயதில் அந்த கசின் அவனுடைய மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதை ரிச்சர்ட் கண் முன்னே பார்த்திருக்கிறான். அதைத் தொடர்ந்து அவனால் படிப்பைத் தொடர இயலாமல் போக லாஸ் ஏஞ்சலஸ் சென்றவன் மனரீதியாகப் பாதிக்கப்பட்டு தொடர் குற்றங்களில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறான். 1984ல் முதல் கொலையை இவன் செய்திருக்கிறான். 79 வயதான விதவை பெண்மணி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்து […] - [அத்தியாயம் 85](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-85/): 1970களில் ‘ஆர்டர் ஆப் நைன் ஆங்கிள்ஸ்’ என்ற சாத்தான் வழிபாடு மற்றும் கல்ட் குழுமம் யூ.கே மற்றும் உலகெங்கும் உள்ள பிற பகுதிகளில் எழுச்சி பெற்றது. இது 1960ல் ஆரம்பிக்கப்பட்ட சாத்தான் வழிபாட்டு குழுமம் ஆகும். 1980ல் இக்குழுமத்திற்கு பொது அங்கீகாரம் கிடைத்தது. இது தொன்மையான சாத்தானிச கொள்கைகளைப் பின்பற்றுவதோடு நியோ-நாஜி சித்தாந்தத்தையும் பின்பற்றிய சாத்தான் வழிபாட்டு குழுமம் ஆகும். இந்தக் குழுமம் 1973ல் ஆண்டன் லாங் என்பவரால் தொடங்கப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆண்டன் லாங் என்பது பிரிட்டிஷ் நியோ-நாஜி செயல்பாட்டாளரான டேவிட் மியாட் என்பவரின் புனைப்பெயர் என்று கூறுபவரும் உண்டு. நரபலியை ஊக்குவிக்கும் சாத்தான் வழிபாட்டு குழுவான இது சமூகத்தில் பிளவை உண்டு பண்ணும் விதத்தில் இயங்கியது. அதோடு இந்த குழு உலகம் முழுவதும் இணையம் மூலம் பிரபலமாக இருபத்தோராம் நூற்றாண்டில் வலதுசாரிகளின் ஆதரவு பரிபூரணமாக உதவியது. அதை தொடர்ந்து தனி மனிதர்களோ அல்லது குழுவோ தங்களை சாத்தானிஷ்டுகள் என்று […] - [அத்தியாயம் 84](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-84/): போஸ்ட் ட்ராமடிக் ஸ்ட்ரஸ் டிஸ்சார்டரைச் சரி செய்வதற்கான தெரபிகளில் ஹிப்னோதெரபியும் ஒன்றாகும். இதன் நோக்கமே அடிமனதில் புதைந்திருக்கும் துயரங்களை வெளிக்கொணர்ந்து பிரச்சனைகளைத் தீர்ப்பதாகும். இது எதிர்மறையான எண்ணங்களை மீண்டும் ஒருமுறை சரிப்படுத்திக்கொள்ள உதவும். அதோடு மன பாதிப்பு குணமடைய உதவும். ஹிப்னோதெரபிக்கு உடன்படுவது மனிதருக்கு மனிதர் வேறுபடும். அதோடு ஹிப்னோதெரபி கொடுப்பதற்கென நிபுணர்கள் உள்ளார்கள். அவர்களிடமே தெரபி எடுத்துக்கொள்வது நல்லது. கூடுதலாக மனநல ஆலோசகரிடம் உங்கள் குறைபாட்டைத் தீர்ப்பதற்கு சரியாக இருக்கும் வழிமுறை என்னவென கலந்தாலோசித்துக் கொள்வது அவசியம்.   -From Internet இதன்யா உச்சபட்ச கோபத்தில் இருந்தாள். “ஹவ் இர்ரெஸ்பான்சிபிள் ஆன்சர்… அவங்க சண்டை போட்டதை வேடிக்கை பாத்துட்டு ஒரு சைக்கோபாத்தை கோட்டை விட்டிருக்கிங்க… அவன் எவ்ளோ டேஞ்சர் ஆனவன்னு தெரிஞ்சும் இவ்ளோ கேர்லெஸ்சா பதில் சொல்லுறிங்க… ஒரு சின்ன விசயம் அவனை ஸ்டிமுலேட் பண்ணுனா போதும், அவனுக்குள்ள இருக்குற சைக்கோபாத் முழிச்சுப்பான்… அந்த சைக்கோபாத்தோட வெறிக்கு இன்னொரு ஆள் […] - [அத்தியாயம் 83](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-83/): நீங்கள் அனாமதேயமாக இணையத்தில் உலவ டார்க்வெப்பை தான் பயன்படுத்தவேண்டுமென இல்லை. சாதாரணமாக சர்ஃபேஸ் வெப்பிலும் கூட உங்களால் அனாமதேயமாக உலவ முடியும். நீங்கள் டார்க்வெப்பில் புழங்கும் கிரிப்டோ கரன்ஸிகளை வாங்க கூடாது என சிலர் கூறலாம். கிரிப்டோ கரன்சிகள் சட்டவிரோதமானவை என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால் அப்படி இல்லை. கிரிப்டோ கரன்சிகள் சட்டப்பூர்வமானவையே. ஆனால் டார்க்வெப்பில் யாரையும் நம்பி கிரிப்டோ கரன்சிகளை வாங்குவதைத் தவிர்க்கலாம். தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த நிபுணர்களும், சைபர் கிரிமினல்களும் மட்டுமே டார்க்வெப்பைப் பயன்படுத்துகிறார்கள் என்ற கருத்தைப் பொதுவாக கேட்க நேரிடும். அப்படி இல்லை. சட்டப்பூர்வமான நிறைய வேலைகளுக்கும் அனாமதேய அடையாளங்கள் தேவைப்படுகையில் கட்டாயம் டார்க்வெப் பயன்பாடு என்பதைத் தவிர்க்க முடியாது. -From Internet “கேஸ்ல பிசியா இருக்கேன்னு சொன்னேன்ல..” என்ற இதன்யா மொத்த காவல்துறையினரும் திகைத்துப் போய் நிற்பதை பார்த்துவிட்டுத் திரும்பியவள் ஏகலைவனைப் பார்த்ததும் “யூ ராஸ்கல்” என்று பற்களைக் கடித்துக்கொண்டு முன்னேற அதற்குள் மார்த்தாண்டன் பாய்ந்து […] - [அத்தியாயம் 82](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-82/): டார்க்வெப் சட்டத்துக்கு புறம்பானது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் உண்மை அதில்லை. டார்க்வெப்பில் சிலர் சட்டத்துக்குப் புறம்பான வேலைகளைச் செய்தாலும் டார்க்வெப் உபயோகம் சட்டத்திற்கு புறம்பானது என்று எந்த நாட்டு சட்டத்திலும் சொல்லப்படவில்லை. அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் டார்க்வெப்பில் உலாவுவது சட்டரீதியானதே. இணைய கட்டுப்பாடுகள் கொண்ட நாடுகளான ரஷ்யா, சீனா, ஈரான் போன்ற நாடுகளில் அரசாங்கங்கள் இணையத்தில் அனாமதேயமாக உலாவுவதைத் தடை செய்திருக்கின்றன. எனவே அங்கு மட்டுமே டார்க்வெப் பயன்பாடு சட்டத்திற்கு புறம்பான காரியமாகக் கருதப்படும். டார்க்வெப் என்பது சர்ஃபேஸ் வெப்பை விட மிகவும் பெரியது என்ற கருத்து அனேகரிடம் உலாவுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் சர்ஃபேஸ் வெப்பின் அளவை விட டார்க்வெப்பின் அளவானது சிறியதே! டார்க்வெப் என்பது டீப்வெப்பின் ஒரு சிறிய பகுதியே! இணையத்தில் முறைப்படி வகைப்படுத்தப்படாத பகுதியையே டீப்வெப் என்பார்கள். அதன் ஒரு பகுதியான டார்க்வெப் சர்ஃபேஸ் வெப்பை விட மிகவும் சிறியதே! […] - [அத்தியாயம் 81](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-81/): டார்க்வெப்பில் பாதுகாப்பாக நீங்கள் உலாவ விரும்பினால் அதற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட உலவியைப் பயன்படுத்துவது சிறந்தது. கூடவே வி.பி.என்களைப் பயன்படுத்துவது நல்லது. அவை உங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பைத் தரும். டார்க்வெப்பில் பாதுகாப்பற்ற தளங்கள் உண்டு. ஆர்வக்கோளாறின் காரணமாக அங்கெல்லாம் செல்வதைத் தவிர்த்தாலே நிறைய பிரச்சனைகள் தவிர்க்கப்படும். உங்களது கணினியின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது சிறந்த வழிமுறை. அதனால் உங்கள் கணினி டார்க்வெப்பின் மால்வேர்கள் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கும். உங்களது அடையாளத்தை டார்க்வெப்பில் எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தவேண்டாம். கூடவே உங்களது சுயவிவரம், கடவுச்சொற்களை யார் கேட்டாலும் எந்தத் தளம் கேட்டாலும் கொடுக்காமல் இருப்பது நலம். உங்களது டார்க்வெப் உலவியில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட செட்டிங்சை பலப்படுத்துங்கள். தரவிறக்கம் செய்யும்போது கவனமாக இருங்கள். அதுதான் உங்களது கணினிக்குள் மால்வேர் புகுவதற்கான வழி. இவற்றை எல்லாம் நீங்கள் கடைபிடித்தாலும் நூறு சதவிகிதம் டார்க்வெப்பில் பாதுகாப்பாக இயங்கலாம் என்று உறுதியெல்லாம் கொடுக்க முடியாது. எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பது உங்களைப் […] - [அத்தியாயம் 80](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-80/): டார்க்வெப் ஹாக்கர்களும், சைபர் குற்றவாளிகளும் ஒன்று கூடுமிடம். அங்கே பல தளங்கள் சட்டத்திற்கு புறம்பான ஆயுத விற்பனை, போதைப்பொருட்கள் விற்பனை, திருடப்பட்ட சுயவிவரங்கள் மற்றும் நிதி விவரங்கள் விற்பனை போன்றவற்றை ஜரூராக நடத்துகின்றன. டார்க்வெப்பிலிருந்து நீங்கள் எந்த ஃபைலையாவது தரவிறக்கம் செய்தால் உங்கள் கணினி வைரஸ், ரான்சம்வேர் தாக்குதலுக்கு உட்படும் சூழலும் உண்டாகும். சில சமயங்களில் பயனர்கள் அவர்களை அறியாமல் டார்க்வெப்பில் சட்டத்திற்கு புறம்பான சில தளங்களைப் பார்வையிடும் வாய்ப்பும் உண்டு. ஏனென்றால் இங்கே சர்ஃபேஸ் இண்டர்நெட் போல வடிகட்டும் முறைகள் இல்லை. சட்டப்படி மற்றும் சட்டத்திற்கு புறம்பான இருவகை செயல்பாடுகளையும் ஒரு தளமோ ஃபோரமோ ஒரே நேரத்தில் இயக்கிக்கொண்டிருக்கும். பயனர்கள் ஆர்வக்கோளாறின் காரணமாக சட்டத்திற்கு புறம்பான பக்கங்களுக்குப் போய்விடும் வாய்ப்பு அதிகம். அதோடு டார்க்வெப்பில் உள்ள தளங்களில் காணப்படும் இணைப்புகள் எதிர்பாராத பக்கங்களில் நம்மை கொண்டு போய் சேர்க்கும். -From Internet சோபியா மருண்ட பார்வையோடு இதன்யாவின் முன்னே நின்று […] - [அத்தியாயம் 79](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-79/): டார்க்வெப்பைப் பயன்படுத்துவதால் உண்டாகும் பொதுவான அபாயங்களை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். டார்க்வெப்பில் பயனர்களின் சுயவிவரங்கள் திருடப்படுவது அடிக்கடி நடக்கும். உங்களது சுயவிவரங்கள், கடவுச்சொல்லைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் உங்களது சமூக வலைதளங்களைப் பயன்படுத்தலாம். உங்கள் வங்கிக்கணக்கில் குளறுபடி செய்யலாம். நிதி மோசடிகளுக்குப் பெயர் போன இடம் டார்க்வெப். டார்க்வெப்பில் உலவும் சைபர் குற்றவாளிகள் உங்களது கிரெடிட் கார்ட் விவரங்கள், சமூகவலைதள பயனர் விவரங்கள், லாகின் செய்ய தேவையான விவரங்களை வெகு சுலபமாகத் திருடி விடுவார்கள். அடுத்த அபாயம் மால்வேர். பயனர்களுக்குத் தெரியாமல் அவர்களின் கணினியில் இந்த மால்வேர்கள் டார்க்வெப் மூலம் புகுந்துவிடும். பின்னர் ஒவ்வொரு முறை இணைய இணைப்போடு அவர்கள் கணினியைப் பயன்படுத்தும்போதும் மால்வேரை அனுப்பியவருக்கு சம்பந்தப்பட்டவரின் கணினியில் என்னென்ன வேலைகள் நடக்கிறது, என்னென்ன விவரங்கள் உள்ளதென்ற தகவலை அனுப்பிக்கொண்டே இருக்கும் அந்த மால்வேர். -From Internet பேராசிரியர் தேவநாதனின் வீட்டில் ஏகலைவனுக்கு விருந்தோம்பல் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. திடுமென அவன் […] - [அத்தியாயம் 78](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-78/): திடீரென PTSDயின் பாதிப்பினால் நோயாளிகள் வன்முறையில் ஈடுபடும் போது அவர்கள் தங்களை அமைதிப்படுத்த சில தடுப்புமுறைகளைக் கையாளுவார்கள். அவற்றில் குறிப்பிடத்தக்கவை ஆழ்ந்து மூச்சை எடுத்துவிடுவது, தசைகளை இலகுவாக்குவது போன்றவை. முதலில் PTSD எப்படிப்பட்ட பாதிப்பு என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பாதுகாப்பான சூழல் உருவாக்கிக்கொடுப்பது அவசியம். அவர்களின் அனுபவம் மற்றும் உணர்வுகளை பகிர்வதை ஊக்குவிக்க வேண்டும். கூடவே இந்தப் பாதிப்புக்கான சிகிச்சையை எடுத்துக்கொள்வது அவசியம் என்பதைப் புரியவைக்கவேண்டும். இந்தப் பாதிப்பு PTSD குணமாக கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். PTSD பாதிப்பைத் தூண்டும் காரணிகள் இருக்கக்கூடிய சூழலை தவிர்க்க நோயாளிக்கு உதவவேண்டும். -From Internet இதன்யா, முரளிதரன், மார்த்தாண்டன், மகேந்திரன் நால்வரும் தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தார்கள். சற்று முன்னர் தான் மார்த்தாண்டன் தூத்துக்குடி விமானநிலைய அதிகாரி ஒருவரிடம் மொபைலில் பேசி ஏகலைவன் எங்கே சென்றிருக்கிறான் என்ற விவரத்தைக் கேட்டறிந்திருந்தார். அவன் சென்னைக்குத் தொழில் விசயமாகச் […] - [அத்தியாயம் 77](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-77/): PTSD தீவிரமடையும்போது பாதிக்கப்பட்ட நோயாளிகள் தற்கொலை முடிவு, தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்வதில் இறங்குவார்கள். சிலரோ மற்றவர்களை வார்த்தை மூலமோ உடல்ரீதியாகவோ காயப்படுத்துவார்கள். எந்தச் சூழலில் அவர்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்களோ அந்தச் சூழல் வந்துவிட்டால் அவர்களைக் கட்டுப்படுத்தவே முடியாது. இதை தடுக்க ஆரம்ப கட்டத்தில் தெரபி மற்றும் மருந்துகளை எடுத்துக்கொண்டால் இந்த குறைபாட்டிலிருந்து வெளிவரலாம். சம்பந்தப்பட்ட நோயாளிகள் உடனடியாக மனநல நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவேண்டும். இல்லையென்றால் அவர்களின் பாதிப்பு தீவிரமடையும். -From Internet பொன்மலையின் விடியலின் ரேகைகள் பரவத் தொடங்கியிருந்தபோது ஊருக்கு வரக்கூடிய முதல் அரசு பேருந்தில் வந்து இறங்கினார்கள் சாவித்ரியும் நிஷாந்தும். தென்காசியில் தூரத்து உறவினர் ஒருவரின் மரணத்துக்குத் துஷ்டி கேட்க சென்று திரும்பியிருந்தார்கள் அன்னையும் மைந்தனும். ஊர் மக்கள் தேயிலைத்தோட்டத்திற்கு வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்தவாறு அன்னையும் மகனும் பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தார்கள். வாசல் தெளித்துக்கொண்டிருந்த அண்டை வீட்டுப்பெண்மணி “வந்துட்டிங்களா சாவித்திரிக்கா? நேத்து உங்க மகனைத் தேடி போலீஸ்காரங்க […] - [அத்தியாயம் 76](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-76/): Post Traumatic Stress Disorder என்பது ஒரு அதிர்ச்சியான சம்பவத்திற்கு பின்னால் உருவாகும் மனரீதியான பாதிப்பு ஆகும். அந்த அதிர்ச்சியான சம்பவம் நோயாளிக்கு நடந்திருக்கலாம் அல்லது அவர் அச்சம்பவத்தைக் கண்கூடாகப் பார்த்திருக்கலாம். PTSDயைத் தூண்டும் பொதுவான காரணிகள் பாலியல் துன்புறுத்தல், போர்க்கால கொடுமைகள், குழந்தை பருவ துன்புறுத்தல், குடும்ப வன்முறை, நெருங்கியவரின் உயிருக்கோ உடல்நலனுக்கோ உண்டாகும் ஆபத்துகள் போன்றவை ஆகும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தப் பாதிப்பு சம்பந்தப்பட்ட தொந்தரவான சிந்தனைகள், உணர்வுகள், கனவுகள், ஹாலூசினேசன்கள் உண்டாகும். -From Internet வியர்க்க விறுவிறுக்க விசாரணை அறைக்குள் அமர்ந்திருந்தாள் பிரகதி. அவளது தந்தை வெளியே சைபர் க்ரைம் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது அவளது காதில் கேட்காமல் இல்லை. அவளுக்காக சண்டையிடும் தந்தை இருந்தும் இப்படி பயப்படுகிறாள் என்றால் அவளுக்கே தான் செய்தது மிகப்பெரிய தவறு, அதிலிருந்து தப்பிக்கவே முடியாது என்பது புரிந்துவிட்டதாக தானே அர்த்தம்! மூன்று வருடங்கள் அவள் பட்ட கஷ்டம் அனைத்தையும் ஸ்ரீ […] - [அத்தியாயம் 75](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-75/): மொத்த இணையத்தையும் ஒரு பரந்து விரிந்த கானகத்தோடு ஒப்பிட்டால், அங்கே தெளிவாக நகரும் பாதைகள் தான் பிரபல தேடுபொறிகளான கூகுள் போன்றவை. இவை பயனர்கள் வெகு விரைவில் தாங்கள் தேடிய விவரங்களை அறிந்துகொள்ள உதவுகின்றன. ஆனால் அந்தப் பாதைகளைத் தாண்டியும் காடானது அடர்ந்து யாருடைய பார்வையும் படாத சில இடங்களிக் கொண்டிருக்கும் அல்லவா! அவை தான் இணையத்தின் மறைவான பகுதியான டார்க் வெப். அந்த டார்க் வெப்பில் அனைவருடைய அடையாளங்களும், செயல்களும் மறைவாக இருக்கும். புதையல் வேட்டைக்குச் செல்ல தனிப்பட்ட வரைபடங்கள் வைத்திருப்பார்களே, அதைப் போல டார்க் வெப்பில் ஒரு விசயத்தைத் தேடவேண்டும் என்றால் அதற்கென பிரத்தியேக வழிகள் உள்ளன. -From Internet சட்டத்துக்குப் புறம்பாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் சர்வர்களை ஹேக் செய்து முடக்கிய வழக்கில் ஸ்ரீயும் ஏகலைவனுடைய நிறுவனத்தில் பணியாற்றிய மேலாளரும் விசாரிக்கப்பட வேண்டுமென்ற நோக்கில் சைபர் க்ரைம் பிரிவினர் நீதிமன்றத்திடம் விசாரணைக்கான ஆணையொன்றை வாங்கியிருந்தனர். அவ்வாறு விசாரிக்கப்பட்ட போது […] - [அத்தியாயம் 74](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-74/): இருள் இணையம் அல்லது டார்க் வெப் என்பது சட்டப்பூர்வமான மற்றும் சட்டத்திற்கு புறம்பான உள்ளடக்கங்களைக் கொண்ட இணையமாகும். இதை சாதாரணமான ப்ரவுசர்கள் மூலம் பயன்படுத்த முடியாது. இதற்கென பிரத்தியேகமாக ப்ரவுசர்கள் உள்ளன. அவை என்க்ரிப்டட் வழிகள், மற்றும் பாயிண்டுகள் மூலம் பயனர்களின் அடையாளம் வெளிப்படாமல் டார்க் வெப்பில் தேடவோ செயல்படவோ வைக்கின்றன. இங்கே சட்டத்திற்கு புறம்பான ஆயுத விற்பனை, போதைமருந்து விற்பனை, கிரெடிட் கார்ட் எண்கள் பரிமாற்றம், கள்ளப்பணம், கணக்குகளை ஹேக் செய்வது போன்றவை நடந்தேறும். அதே நேரம் சட்டத்திற்குட்பட்ட சமூக வலைதளங்கள், சில கம்யூனிட்டிகளும் டார்க் வெப்பில் இயங்குகின்றன. -From Internet ஏகலைவனோடு தீவிரமாக உரையாடிக்கொண்டிருந்தார் மனுவேந்தன். இருவரும் தற்போது தான் மாஜிஸ்திரேட்டைச் சந்தித்துவிட்டுத் திருநெல்வேலியிருந்து பொன்மலைக்குத் திரும்பியிருந்தார்கள். நவநீதத்தையும் கோபாலையும் ஜாமீனில் எடுக்க முடியாத ஏமாற்றம் இருவருக்கும் இருந்தது. அதிலும் ஏகலைவனின் முகத்தில் ஏமாற்றத்தோடு துளி எரிச்சலும் கலந்திருந்தது. காரணம் திருநெல்வேலியிருந்து காரில் வரும்போது முன்னாள் அமைச்சரிடம் வழக்கு […] - [அத்தியாயம் 73](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-73/): 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் மனநல பாதிப்புக்கான மருந்தை எடுத்துக்கொள்ளும்போது அவர்களைக் கூடுதல் கவனமெடுத்து கண்காணிப்பார்கள் மனநல மருத்துவர்கள். குறிப்பாக அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனநல பாதிப்புக்கான மருந்தை எடுத்துக்கொள்ளும்போது இந்தக் கூடுதல் கவனம் அவசியமாகிறது. மருந்துகள் அவர்களின் உடலில் ஏற்படுத்தும் விளைவுகளைத் தாங்கிக்கொள்ளும் பலம் சில வயதானவர்களுக்கு இருக்காது. என்ன தான் ஆரோக்கியமானவர்களாக இருந்தாலும் மனநல பாதிப்புக்கான மருந்தை உட்கொள்ளும்போது அவர்கள் உடல்ரீதியான மாற்றத்துக்கு ஆட்கொள்ளப்படுவார்கள். அதோடு அவர்கள் குணமாகும் வேகமும் குறையும். வயதான நோயாளிகளுக்கு இம்மருந்துகளைக் கொடுக்கும் முன்னர் அவர்களிடம் கட்டாயம் மனநல மருத்துவர் கலந்தாலோசிக்க வேண்டும். மருந்துகளை எடுத்துக்கொள்வதால் வரக்கூடிய பக்கவிளைவுகளை எடுத்துச் சொல்லிப் புரியவைக்க வேண்டும். அதோடு அவர்களுக்குத் தேவையான டோசேஜையும் தீர்மானிக்க வேண்டும். -From the website of National Institute of Mental Health கோபாலை விசாரிக்க ஆரம்பித்திருந்தார் முரளிதரன். உடன் மார்த்தாண்டனும் மகேந்திரனும் அமர்ந்திருந்தார்கள். “எதுக்காக கிளாரா ஆதாரங்களைப் புதைச்சு வச்சதா […] - [அத்தியாயம் 22](https://nmtamilnovelworld.com/konjum-manjal-pookal-22/): “சின்ன சின்ன சண்டை, குட்டி கோவம், இதோட சில்லுனு கொஞ்சம் ரொமான்ஸ்! அடடா இதுவல்லவா வாழ்க்கைனு இப்ப எல்லாம் நான் பாட்டு பாடாதக் குறை! ஆனா இந்தப் புவன் ஒரு வார்த்தை சொல்லட்டுமே! க்கும்! சொல்லமாட்டார்! ஆனா கண்ணுல மட்டும் டன் கணக்குல காதல் வழியும். பொண்ணுங்களைப் பொறுத்தவரை பேச்சுதான் நெருக்கத்தையும் உணர்வையும் பிரதிபலிக்குற கருவி. ஆனா ஆண்கள் எல்லாத்தையும் வாயால சொல்லுறதில்ல. அவங்களோட உணர்வுகளைச் செயல் மூலமா வெளிப்படுத்துவாங்க. என்னடா நாம வாயைத் திறந்து மனசுல உள்ளதைக் கொட்டுறோம், இந்தாளு ஒரு வரில பேசிட்டுப் போறானேனு யோசிக்காதிங்க. அவங்க செயல்ல காட்டுறப்ப உங்க எதிர்பார்ப்பு முழுசா நிறைவேறிடும்” -ஆதிரா ஆதிரா குளித்து உடைமாற்றிவிட்டு வந்தபோது புவனேந்திரன் மீண்டும் கவிழ்ந்து படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். “குளிச்சு ட்ரஸ் மாத்திட்டு மறுபடி தூங்குறதுக்கு உங்களால மட்டும்தான் முடியும். சோம்பேறி புவன்! எழுந்திரிங்க” கையில் வைத்திருந்த டவலைச் சுருட்டி அவனது முதுகில் அவள் அடிக்கவும் சட்டென […] - [அத்தியாயம் 72](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-72/): மனப்பிறழ்வைக் குணப்படுத்தும் மருந்துகளைப் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடுவதால் எந்தப் பிரச்சனையும் உண்டாவதில்லை. ஆனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகிறது. பாதுகாப்பான, பக்கவிளைவுகள் குறைவாக கொண்ட மனநலனைப் பேணும் மருந்துகள் அனேகம் உள்ளன. ஆனால் பெரியவர்களுக்கு நேரும் பக்கவிளைவுகளும் குழந்தைகளுக்கு நேரும் பக்கவிளைவுகளும் ஒன்று போலிருப்பதில்லை. FDA எச்சரிக்கை செய்த சில மருந்துகள் குழந்தைகளில் வீரியமான பக்கவிளைவுகளை உண்டாக்கும். சில சமயம் FDA அங்கீகரித்த மருந்துகளைக் குழந்தைகளுக்கு உண்டாகும் மனநல குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்கிறார்கள் மனநல மருத்துவர்கள். ஆஃப் லேபிள் எனப்படும் அங்கீகரிக்கப்படாத மருந்துகளை குழந்தைகளுக்கோ பெரியவர்களுக்கோ கொடுத்தால் கட்டாயம் அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். -From the website of National Institute of Mental Health கொடைக்கானல் அரசு மருத்துவமனை… மிச்செல், ஜென்னி மற்றும் நித்திலராஜன் மூவருக்கும் சுயநினைவு திரும்பிவிட்டது. மூவருக்கும் பழச்சாறு கொடுத்துவிட்டுக் கொடைக்கானல் காவல்துறை ஆய்வாளரிடம் தனியே பேச வந்தார் கலிங்கராஜன். “குழந்தைங்க கிட்ட கிட்னாப்பர்ஸ் பத்தி விசாரிக்கணும் கலிங்கராஜன்” […] - [அத்தியாயம் 71](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-71/): முந்தைய தலைமுறை ஆன்டி சைக்காடிக்ஸ் மருந்துகள் நியூரோலெப்டிக்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை நீண்டகாலத்துக்கு உட்கொண்டால் டார்ட்ரைவ் டிஸ்கின்சியா என்ற தசைகளைக் கட்டுப்படுத்த முடியாத குறைபாடு உண்டாகும். இது சில சமயங்களில் தீவிரமடையவும் வாய்ப்புண்டு. டார்ட்ரைவ் டிஸ்கின்சியாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் மனநல மருத்துவர்களிடம் சோதிப்பது அவசியம். இரண்டாம் தலைமுறை சைக்காட்டிக்ஸ் மருந்துகள் பழைய தலைமுறை மருந்துகளை விட எல்லா விதத்திலும் சிறந்தவை. இவை பக்கவிளைவுகளை உருவாக்கும் விகிதாச்சாரமும் குறைவு. பைபோலார் குறைபாடு அல்லது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஆன்டி டிப்ரசண்டுகளால் இயலாத சூழலில் இவை பயன்படுத்தப்படுகின்றன. இதை நோயாளிகளுக்குக் கொடுக்கும்போது மனநல மருத்துவர்கள் அவர்களது எடை, இரத்த சர்க்கரை அளவு மற்றும் லிபிட் அளவைத் தொடர்ந்து கண்காணிப்பார்கள். -From the website of National Institute of Mental Health குழந்தைகளைத் தேடும் வேலை கொடைக்கானலில் ஆரம்பித்திருக்க கலிங்கராஜன் காரிலேயே பொன்மலையிலிருந்து கொடைக்கானலுக்குப் போய்விட்டார். குழந்தைகளைத் தேடும் பணியில் முன்னேற்றம் இருந்தால் தங்களுக்குத் […] - [அத்தியாயம் 70](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-70/): ஆன்டி சைக்காடிக்ஸ் மருந்துகள் சைக்கோஸிஸ் நோய்க்கு கொடுக்கப்படுகின்றன. சைக்கோஸிஸ் என்பது உண்மையான நிகழ்வுகளுடன் இருக்கும் தொடர்பை இழந்து ஒரு மனிதனை மாயையில் ஆழ்த்தும் வியாதி ஆகும். இந்நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அடிக்கடி மாயை மற்றும் பிரமையால் ஆட்கொள்ளப்படுவார்கள். அளவுக்கதிகமான போதைமருந்து உபயோகத்தாலும், ஸ்கிசோஃப்ரீனியா, பைபோலார் குறைபாடு மற்றும் அதீதமான மன அழுத்தத்தால் இந்த சைக்கோஸிஸ் நோய்க்கு ஆளாகிறார்கள். மனநல மருத்துவர்கள் இந்நோயாளிகளுக்கு ஆன்டி சைக்காடிக்ஸ்களோடு சேர்த்து இன்னும் சில மருந்துகளையும் கொடுத்து மயக்கம் மற்றும் மனச்சோர்வுக்கு இவர்கள் ஆட்படுவதைக் குறைக்க முயலுவார்கள். -From the website of National Institute of Mental Health கலிங்கராஜனின் வீட்டில் குமாரி கொடுத்த கிளாராவின் மருத்துவ அறிக்கை கோப்பினை புரட்டிக்கொண்டிருந்தாள் இதன்யா. நித்திலராஜனை கருவுற்றிருந்தபோது எடுக்கப்பட்ட மருத்துவச்சோதனைகள், ஸ்கேன் ரிப்போர்ட்கள் அடங்கிய அந்த கோப்பின் கடைசி பக்கத்தில் இருந்த அறிக்கையைக் கண்டும் விட்டாள். அதை எடுத்து வாசித்துப் பார்த்தவள் கிளாரா பொய் சொல்லவில்லை என்பதைப் […] - [அத்தியாயம் 69](https://nmtamilnovelworld.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-69/): மூட் ஸ்டெபிளைசர்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆன்டி-டிப்ரசண்டுகளோடு சேர்த்து சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுவதுண்டு. பைபோலார் குறைபாடு உள்ள நோயாளிகளுக்கு மூட் ஸ்டெபிளைசர்கள் மற்றும் ஆன்டி டிப்ரசண்டுகளை இணைத்து கொடுப்பார்கள் மனநல மருத்துவர்கள். அவர்களது பைபோலார் குறைபாடு மேனியாவாக மாறாமல் இவை தடுக்கும். லித்தியத்தை விட சிறந்த மூட் ஸ்டெபிளைசர்கள் மருந்துகளும் உள்ளன. ஆனால் அவற்றை எடுத்துக்கொள்ளும் நோயாளிகளை மருத்துவர்கள் தங்களது நேரடி கண்காணிப்பில் வைத்து அவர்களது மருந்து அளவையும், பக்கவிளைவுகளின் தீவிரத்தையும் கவனித்துக்கொண்டே இருப்பார்கள். -From the website of National Institute of Mental Health இதன்யா பொன்மலை காவல் நிலையத்தில் அமர்ந்திருந்தாள். அவள் முன்னே வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள் கலிங்கராஜனின் சாந்திவனத்தில் முன்னர் பணியாற்றிய நான்கு ஊழியர்கள். அவர்களை ஏற்கெனவே மார்த்தாண்டனும் மகேந்திரனும் விசாரித்திருந்தார்கள். இருப்பினும் அவர்களிடம் சொல்லாத பாயிண்ட் ஏதாவது இருக்கலாம் என்ற ஊகத்தில் அன்று காவல் நிலையத்துக்கு வரச் சொல்லியிருந்தாள் அவள். “சோ நீங்க எல்லாரும் பாத்த […] - [அத்தியாயம் 68](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-68/): மூட் ஸ்டெபிளைசர்கள் என்பவை பைபோலார் குறிபாட்டையும் மனநிலை மாறுபாட்டோடு சம்பந்தப்பட்ட பிற மனநல பிரச்சனைகளைச் சரிசெய்வதற்காகவும் கொடுக்கப்படும் மருந்தாகும். சில நேரங்களில் மனநல மருத்துவர்கள் மனநல குறைபாடுகளுக்குக் கொடுக்கும் பிற மருந்துகளின் வீரியத்தைக் குறைப்பதற்காக மூட் ஸ்டெபிளைசர்களைப் பயன்படுத்துவார்கள். மூட் ஸ்டெபிளைசர்களில் ஒன்றான லித்தியம் சில வகை மேனியாக்கள் மற்றும் பைபோலார் டிஸ்சார்டருக்குப் பரிந்துரைக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மருந்தாகும். நீண்டநாட்களுக்கு லித்தியம் எடுத்துக்கொள்ளும் நோயாளிகளுக்குத் தற்கொலை எண்ணம் குறைகிறதென சில ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. லித்தியம் எடுத்துக்கொள்ளும் நோயாளிகளை மனநல மருத்துவர்கள் அடிக்கடி உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். அவர்களின் உடலிலுள்ள லித்தியத்தின் அளவையும் சிறுநீரகம் மற்றும் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டையும் பரிசோதிப்பதுண்டு. -From the website of National Institute of Mental Health ஸ்ரீயை வைத்திருக்கும் காவல்நிலையத்துக்கு வழக்கறிஞர் மனுவேந்தனோடு வந்திருந்தான் நிஷாந்த். ஏகலைவனின் ஆஸ்தான வழக்கறிஞரான மனுவேந்தன் ஸ்ரீயிடம் பேசி அவன் வாக்குமூலத்தில் என்ன சொல்லவேண்டுமென கூறுவதற்காக வந்திருந்தார். அங்கே […] - [அத்தியாயம் 67](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-67/): மனநல மருத்துவர்கள் ஸ்டிமுலண்ட் வகை மருந்துகளை மனப்பிறழ்வுக்குறைபாடு சிகிச்சையில் பயன்படுத்துகிறார்கள். இந்த ஸ்டிமுலண்ட் வகை மருந்துகள் எச்சரிக்கையுணர்வு, கவனம் மற்றும் ஆற்றலைக் கொடுப்பதோடு இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு மற்றும் சுவாசத்தைச் சீராக்குகிறது. இது நோயாளிகளின் தினசரி செயல்பாடுகளை ஒழுங்குக்குள் கொண்டு வர உதவும். இது ஹைபர் ஆக்டிவிட்டி உள்ள குழந்தைகளின் ADHD குறைபாட்டைச் சரிசெய்வதற்காக இந்த மருந்துகள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகின்றன. -From the website of National Institute of Mental Health மார்த்தாண்டன் முன்னே பவ்வியமாக நின்று கொண்டிருந்தார் அந்த மனிதர். அவர் கேட்ட கேள்விகளுக்கு நிதானமாகப் பதில் சொல்லவும் செய்தார். “சோ கடைசி நாள் அவங்க ரெண்டு பேரோட நடவடிக்கையும் வித்தியாசமா இருந்திருக்கு?” “ஆமா சார்… அவங்களை யாருமே கவனிக்கலனு நினைச்சாங்க… ஆனா நான் அவங்களைப் பாத்தேன் சார்” “இதை எங்க வந்து சொல்ல சொன்னாலும் சொல்லுவிங்களா?” “கண்டிப்பா சொல்லுவேன் சார்” “சரி… இப்ப நீங்க கிளம்பலாம்” செல்பவரையே […] - [அத்தியாயம் 66](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-66/): பென்சோடயாஸ்பைன்ஸ் மற்றும் பீட்டா ப்ளாகர்கள் கடுமையான ஆன்சைட்டியைக் குறுகிய காலத்திற்கு கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நோயாளிகள் நீண்டகாலத்திற்கு பென்சோடயாஸ்பைன்ஸ் எடுத்துக்கொண்டால் அதற்கு அடிமையாகிவிடும் வாய்ப்பும் அதிகம். இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கவே மனநல மருத்துவர்கள் குறுகிய காலத்துக்கு மட்டுமே பென்சோடயாஸ்பைன்களைப் பரிந்துரை செய்கிறார்கள். கூடவே டோசேஜ் அளவையும் ஆன்சைட்டி பிரச்சனை குறையும்போது படிப்படியாகக் குறைத்துவிடுவார்கள். பீட்டா ப்ளாக்கர்களை ஆஸ்துமா மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் கொடுப்பதில்லை. ஏனென்றால் அவை அந்நோய்களை இன்னும் தீவிரப்படுத்திவிடும். பஸ்பிரோன் என்பது மற்றொரு வகை ஆன்டி – ஆன்சைட்டியைக் குணப்படுத்தும் மருந்து வகை. இது நீண்டகாலத்துக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்து ஆகும். இது மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு தினசரி எடுத்துக்கொள்ளப்படும். அப்போது தான் அதன் வீரியம் ஆன்சைட்டியைக் குணப்படுத்தும். -From the website of National Institute of Mental Health இதன்யா வங்கி மேலாளரின் அறையில் அமர்ந்து அவரிடம் பேசிக்கொண்டிருந்தாள். “எங்க பேங்க் ஹெட் ஆபிஸ்ல […] - [அத்தியாயம் 65](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-56/): மனநல மருத்துவர்கள் பீட்டா – ப்ளாக்கர்களை குறுகிய கால ஆன்சைட்டி அறிகுறிகளைக் குணப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள். இத்தனைக்கும் பீட்டா – ப்ளாக்கர்கள் அதற்கான மருந்துகளே இல்லை என்றாலும் அவை குறைந்த பக்க விளைவை உண்டாக்குவதாலும், ஆன்சைட்டியின் தீவிரம் குறைவு என்பதாலும், சில சூழல்களில் ஆன்சைட்டியால் உண்டாகும் அடிப்படை உடலியல் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த அவற்றை பயன்படுத்துகின்றனர். உதாரணமாக சிலருக்கு சில போபியாக்கள் உண்டு. அந்த போபியா அவர்களைத் தாக்கும்போது காரணமின்றி ஏற்படும் அளவுக்கதிகமான பயத்தால் உண்டாகும் அதிவேக இதயத்துடிப்பு, ட்ராமா மற்றும் பதற்றத்தைப் போக்க இந்த பீட்டா – ப்ளாக்கர்களை மனநல மருத்துவர்கள் பயன்படுத்துவார்கள். -From the website of National Institute of Mental Health இதன்யா சென்னைக்குச் செல்வதற்கு தேவையான உடமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அவளருகே முபீனா சோகமே உருவாய் நின்று கொண்டிருந்தாள். “ஜஸ்ட் டூ டேய்ஸ்ல திரும்பிடுவேன் முபீ… டோண்ட் வொரி” என்று அவளது சோகத்துக்கு ஆறுதல் கூறியவாறு […] - [அத்தியாயம் 64](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-64/): ஆன்டி – ஆன்சைட்டிக்கான மருந்துகள் ஆன்சைட்டியின் அறிகுறிகளான பேனிக் அட்டாக், அதீத பயம் மற்றும் கவலையைப் போக்க உதவும். மன அழுத்தத்தைக் குணமாக்க நிறைய மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் சில ஆன்சைட்டியையும் குணப்படுத்தும். பேனிக் டிஸ்சார்டர் மற்றும் சோசியல் ஆன்சைட்டி டிஸ்சார்டருக்குச் சிகிச்சையளிக்கையில் மருத்துவர்கள் SSRI மற்றும் இதர ஆன்டி டிப்ரசண்டுகளை வைத்தே சிகிச்சையை ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் மற்ற மருந்துகளோடு ஒப்பிடுகையில் அவற்றிற்கு பக்கவிளைவு குறைவு. பென்ஸோடயாப்சைன்கள் ஆன்டி ஆன்சைட்டிக்காக பரிந்துரைக்கப்படும் மருந்துகளாகும். குறுகிய கால ஆன்ஸைட்டி டிஸ்சார்டரைக் குணப்படுத்த இவை பயன்படும். -From the website of National Institute of Mental Health இதன்யா நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து தன்னெதிரே பதற்றத்தை மறைத்தபடி அமர்ந்திருந்த முத்துவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளைப் பற்றி நீதிமன்றத்தில் பொய்யான குற்றம் சாட்டியவனுக்கு எப்படி இயல்பாக அமர்ந்து அவளது கண்களை நேருக்கு நேராகப் பார்க்கும் தைரியம் வரும்! தலையைக் குனிந்து விரல்களை […] - [அத்தியாயம் 63](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-63/): ஆன்டி-டிப்ரசண்டுகள் உடலில் செயல்பட ஆரம்பிக்க நான்கு முதல் எட்டு வாரங்கள் வரை எடுத்துக்கொள்ளும். அந்த நான்கு முதல் எட்டு வாரங்களில் தூக்கம், பசியுணர்வு, உற்சாகம் மற்றும் கவனம் போன்றவை இயல்புக்கு வர ஆரம்பிக்கும். ஒரு மருந்துக்கு செயல்படுவதற்கான கால அவகாசத்தைக் கொடுப்பது என்பது அது நமக்குச் சரியான மருந்தா என்று தீர்மானிப்பதை விட முக்கியமானது. இந்த ஆன்டி-டிப்ரசண்டுகள் பொதுவான பக்க விளைவுகளான வயிற்று உபாதை, தலைவலி மற்றும் பாலியல் உணர்வுகள் மரத்துப் போதல் போன்றவற்றை உருவாக்கும். இந்த பக்கவிளைவுகள் மிகவும் குறைந்தளவில் இருக்கும். காலப்போக்கில் இவை மறைந்தும் விடும். சிலருக்குத் தீவிரமான பக்கவிளைவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் முதலில் குறைவான டோஸேஜ் கொடுத்து படிப்படியாக டோஸேஜின் அளவு அதிகரிக்கப்படும். கூடவே அவர்கள் எப்போது இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதையும் மருத்துவர்களே தீர்மானிப்பார்கள். -From the website of National Institute of Mental Health முருகையாவின் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து சற்று […] - [அத்தியாயம் 62](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-62/): மனப்பிறழ்வு குறைபாட்டுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் முக்கியமானவை ‘ஆன்டி-டிப்ரசண்டுகள்’ எனப்படும் மருந்துவகைகள். இவை மன அழுத்தத்தைச் சரி செய்வதற்காக கொடுக்கப்படுகின்றன. சில நேரங்களில் மனநல நிபுணர்கள், ஆன்சைட்டி, வலி மற்றும் தூக்கமின்மையைக் குணப்படுத்தவும் இந்த ‘ஆன்டி-டிப்ரசண்டுகளை’ நோயாளிகளுக்குக் கொடுப்பதுண்டு. SSRI, SNRI, NDRI இந்த மருந்துகள் பொதுவாக மன அழுத்தம் மற்றும் ஆன்சைட்டி போன்ற குறைபாடுகளுக்குப் பெருவாரியான மனநல மருத்துவர்களால் தற்காலத்தில் கொடுக்கப்படுகின்றன. முன்பு கொடுக்கப்பட்ட மருந்துகளை விட இவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகளும் குறைவு. முந்தைய ஆன்டி-டிப்ரசண்டுகளான ட்ரைசைக்ளிக்ஸ் மற்றும் MAOI போன்றவை தீவிரமான பக்க விளைவுகளை உருவாக்கும். ஆனால் தீவிரமான மனப்பிறழ்வு குறைபாடு கொண்டவர்களுக்கு அவையே சரியான மருந்துகளாகும். -From the website of National Institute of Mental Health ஏகலைவனின் தோட்டத்தில் கடுப்போடு நுழைந்த இதன்யாவின் பார்வை அவன் ஆசையாக வளர்க்கும் ராமபாண கொடியின் மீது படிந்தது. மனித உயிர்களின் மதிப்பறியாதவனுக்கு அந்தக் கொடி மீது மட்டும் அப்படி […] - [அத்தியாயம் 61](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-61/): மனரீதியான பிரச்சனைகளைக் குணமாக்குவதில் மருந்துகளின் பங்கு முக்கியமானது. சைக்கோதெரபி மற்றும் மூளைத்தூண்டுதல் தெரபியோடு சேர்த்து மருந்துகளும் சைக்கோபதிக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துகள் நோயாளிகளிடம் சில பின்விளைவுகளை ஏற்படுத்தும். அதோடு எந்த மருந்து அவர்களுக்கு ஏற்றது என உடலில் செலுத்தி அதன் விளைவைப் பரிசோதித்த பின்னர் தான் அந்த மருந்து அவர்களுக்கு பரிந்துரைக்கப்படும். எனவே மனரீதியான பிரச்சனைகளுக்குத் தன்னிச்சையாக மருந்து எடுத்துக்கொள்வது தவறு. அதற்கென உள்ள மருத்துவ நிபுணர் அல்லது மனவியல் நிபுணரிடம் சென்று பரிசோதித்து, சம்பந்தப்பட்ட நோயாளியின் பிரச்சனைக்கு ஏற்ப அவர் தயார் செய்யும் சிகிச்சை முறைகளுக்கு இடையே அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வதே சிறந்தது. தன்னிச்சையாக மருந்துகளை எடுத்துக்கொள்வது பிரச்சனையை இன்னும் தீவிரப்படுத்துமே தவிர குணமாக்காது. -From the website of National Institute of Mental Health கலிங்கராஜனின் கரத்தை டீசர்ட்டிலிருந்து உதறினான் நிஷாந்த். அவனது கண்களில் அதிர்ச்சியும் பயமும் விடைபெற்று அலட்சியம் குடிகொண்டிருந்தது. டீசர்ட்டில் இல்லாத […] - [அத்தியாயம் 60](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-60/): Humanistic therapy என்பது மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் எந்தளவுக்கு சூழலை நல்லவிதமாகக் கையாள முடிகிறதென்பதை அறிந்துகொள்ள உதவுகிறது. இதில் அடுத்தவர்களுக்கு மரியாதை கொடுப்பது, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போன்றவை குறித்து நோயாளிகளுக்குக் கவுன்சலிங் அளிக்கப்படும். மானுட தத்துவ அறிஞர்களான ஜேன் பால் சார்ட்டர், மார்ட்டர் பபர் மற்றும் சோரன் கியர்கெகார்ட் இந்த வகை தெரபியை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்கள். ஹியூமானிஸ்டிக் தெரபி மூன்று வகைப்படும். Client Centered therapy, Gestalt therapy, Existential therapy ஆகியவையே அந்த மூன்று வகைகள். மனப்பிறழ்வுக்குறைபாட்டுக்கு ஆலோசனை வழங்கும் தெரபிஷ்டுகள் இவற்றில் ஏதோ ஒன்றை மட்டும் நம்புவதில்லை. நோயாளியின் பாதிப்புக்குத் தகுந்தாற்போல ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தெரபிகளை கூட்டாக கொடுத்து அவர்களை குணப்படுத்த முயல்வார்கள். -American Psychological assoiciation பிக் ஷாப்பருக்குள் இருந்து எடுக்கப்பட்ட வெண்ணிற சட்டையில் இருந்த பழுப்பு வண்ண கறை இரத்தம் தான் என்பதில் மகேந்திரனுக்கும் இதன்யாவுக்கும் எந்த ஐயமும் […] - [அத்தியாயம் 59](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-59/): ‘Cognitive therapy என்பது நோயாளிகள் என்ன செய்கிறார்கள் என்பதை விட அவர்கள் என்ன மாதிரி சிந்திக்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்தும் தெரபி ஆகும். தவறான சிந்தனைகள் தான் தவறான செயல்களுக்கு வழிவகுக்குமென இந்த தெரபிஷ்ட்கள் உறுதியாக நம்புகிறார்கள். எனவே அவர்களது சிந்தனையை நேர்வழிப்படுத்துவதன் மூலம் அவர்களது உணர்வுகளையும் செயல்களையும் நேர்வழிப்படுத்தமுடியும் என்பதே இந்த தெரபியின் சாராம்சம். இந்த தெரபியை உருவாக்கியதில் ஆல்பர்ட் எல்லிஸ் மற்றும் ஆரோன் பெக் என்ற இருவரின் பங்கு அளப்பரியது. -American Psychological assoiciation கான்வென்ட் பள்ளியில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் மார்த்தாண்டனிடம் மறைக்காமல் சொல்லிவிட்டாள் இதன்யா. நவநீதம் மற்றும் கலிங்கராஜன் இருவரது நடவடிக்கையும் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலிருப்பதை அவரும் ஒப்புக்கொண்டார். கூடவே இனியா சொன்ன இன்னொரு செய்தி அவரை தீவிர யோசனையில் ஆழ்த்தியது. “நான் பூங்குன்றத்துல இருக்குற கோவிலுக்குப் போற சாக்குல ஒரு விசிட் அடிச்சேன் மார்த்தாண்டன் சார்… அங்க முத்துவையும் ஜானையும் பத்தி விசாரிச்ச வரைக்கும் […] - [அத்தியாயம் 58](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-58/): பிஹேவியர் தெரபி என்பது ஒரு சைக்கோபாத்தின் சாதாரண மற்றும் அசாதாரண நடத்தைகளைப் பற்றி அறிந்துகொண்டு அவற்றை சரிசெய்யும் தெரபியாகும். இந்த தெரபி முறையில் இவான் பவ்லோவ் என்பவரின் பங்கு அதிகம். நோயாளி விரும்பத்தக்க சூழல்களை உருவாக்கிக்கொடுத்து அதன் மூலம் அவர்களை சரிபடுத்த முயற்சிப்பார்கள். அடுத்த முறை அவர்களுக்குப் பிடிக்காத அல்லது விரும்பத்தகாத சூழலை உருவாக்கி, அதன் மூலம் அவர்கள் எந்தளவுக்கு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை மதிப்பிடுவார்கள். அடுத்த முறையை ‘Operant conditioning’ என்பார்கள். அந்த முறை மூலம் நோயாளிகள் நல்ல நடத்தைகளுக்குப் பரிசும், மோசமான நடத்தைகளுக்குச் சிறுதண்டனையும் கொடுக்கப்படும். 1950களில் பிஹேவியர் தெரபிக்கான அவசரத்தேவை அதிகரித்தது. அதனால் அந்த தெரபியில் சிற்சில மாறுதல்களும் நேர்ந்து கொண்டே இருந்தன. மிகவும் முக்கியமான மாறுதலில் ஒன்றான ‘Cognitive Behavioral therapy’ நடத்தையோடு சேர்ந்து நோயாளியின் சிந்தனைகளையும் நேர்வழிப்படுத்தும் -American Psychological assoiciation முபீனாவை அழைத்துக்கொண்டு கணினி பயிற்சி வகுப்புக்காக திருநெல்வேலி சந்திப்புக்கு வந்திருந்தாள் […] - [அத்தியாயம் 57](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-57/): சைக்கோ அனாலிசிஸ் மற்றும் சைக்கோடைனமைட் தெரபி – இவை இரண்டும் சைக்கோதெரபி முறைகளாகும். இவை இரண்டுமே பிரச்சனைக்குரிய குணாதிசயங்கள், உணர்வுகள் மற்றும் சிந்தனைகளை மாற்றியமைக்கக்கூடிய சிகிச்சை முறைகளாகும். அதிலும் சைக்கோ-அனாலிட்டிக்கல் சம்பந்தப்பட்ட தெரபிகள் தெரபிஷ்டுக்கும் நோயாளிக்குமிடையே நல்லதொரு நட்பை உருவாக்கும். அதன் மூலம் நோயாளியின் பாதிப்பு எவ்வளவு தீவிரம் என்பதை தெரபிஷ்ட் தெரிந்துகொள்ள முடியும். அதோடு நோயாளிகள் தெரபிஷ்டுடன் எப்படி பழகுகிறார்கள் என்பதை வைத்து தங்களது குணநலன்களைப் புரிந்து கொள்வார்கள். சைக்கோ அனாலிசிஸ் சிக்மண்ட் ஃப்ராடுடன் சேர்த்து பேசப்பட்டாலும் அவரது காலத்தில் இருந்த முறையைத் தாண்டி அது நிறைய மாறுதலுக்குட்பட்டு விரிவடைந்திருக்கிறது தற்போது. -American Psychological assoiciation இதன்யா மூச்சிறைக்க இரகசியப்பாதையின் வழியே நடந்து வந்து சக்கரவர்த்தி தேயிலைத்தோட்டத்திலிருந்து கீழ்நோக்கி சரிந்த சரிவு முடிந்து சமதளம் ஆரம்பித்திருந்த இடத்தில் நின்று கொண்டிருந்தாள். அவள் நின்ற இடத்திலிருந்து தலைக்கு மேலே காக்கை கூட்டம் பறந்து கொண்டிருந்தது. அவற்றின் கதறல் இன்னும் ஓய்ந்த பாடில்லை. […] - [அத்தியாயம் 56](https://nmtamilnovelworld.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-56/): சைக்கோபதிக்கான சிகிச்சை சிக்கலானது மற்றும் பன்முகத்தன்மை கொண்டதும் கூட. அதில் சைக்கோதெரபி, நடத்தை பற்றிய பயிற்சிகள், மருந்துகள் போன்றவை அடங்கும். குழந்தைகள் மற்றும் பதின்வயதினருக்கு ‘ஃபேமிலி ஃபோகஸ்ட் தெரபி’ எனப்படும் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய தெரபி கொடுக்கப்படும். பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தினர் அக்குழந்தையின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட இந்த தெரபி உதவியாக இருக்கும். சில நேரங்களில் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கே தெரபிஸ்ட் நேரடியாகப் போய் சில தெரபிகளை அளிப்பார். ஆனால் அதன் பலன் மற்ற சிகிச்சைகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைவே! -From Psychologytoday site சக்கரவர்த்தி தேயிலை தோட்டம்…. தன் முன்னே நின்று கொண்டிருந்த லாரிகளைக் கண்களைச் சுருக்கிப் பார்த்துக்கொண்டிருந்தாள் இதன்யா. அவளுக்கு எந்த லாரி அவளை விபத்துக்குள்ளாக்கியது என்பதெல்லாம் உயிர் பிழைக்கவேண்டுமென்ற பதற்றத்தில் நினைவில் பதியவில்லை. எனவே தடுமாற்றத்துடன் மீண்டும் மீண்டும் மூன்று லாரிகளையும் பார்த்தவள் மார்த்தாண்டனிடம் தெரியவில்லை என உதட்டைப் பிதுக்கினாள். “சரி விடுங்க மேடம்…” என்றவர் கண்களால் […] - [அத்தியாயம் 55](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-55/): Dissocial Psychopaths என்பவர்கள் அளவுக்கடந்த போதைமருந்து உபயோகத்தால் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் வகையறாக்கள். சொல்லப் போனால் சமுதாயம் காட்டும் ஒதுக்கத்தையும், உதாசீனத்தையும் தவிர்க்கவே இவர்கள் போதைமருந்து பழக்கத்தை ஆரம்பிப்பார்கள். பின்னர் அதற்கு அடிமையாகிக் குற்ற காரியங்களில் ஈடுபடுவார்கள். Pseudopsychopaths வகையினரோ போதைமருந்து பழக்கம் மற்றும் விபத்தின் காரணமாக உண்டான காயத்தால் ப்ரீ-ஃப்ரென்டல் கார்டக்ஸ் பகுதி சேதமுற்றதால் மனப்பிறழ்வுக்குறைபாட்டுக்கு ஆளாகியிருப்பார்கள். அவர்கள் ஒழுக்க விழுமியங்கள், நன்னடத்தை, நல்லுணர்வுகளை முற்றிலுமாக இழந்திருப்பார்கள். -By Dan Baxter, ESTP Primary psychopath and psychopathy Researcher கோபாலின் நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருக்கிறதென மார்த்தாண்டனிடம் இதன்யா தெரிவித்துவிட்டாள். கூடவே விசாரணை என்ற பெயரில் அவரை உடனே நெருங்கினால் ஏகலைவனும் நிஷாந்தும் உஷாராகக் கூடுமென்பதால் அவனரை விட்டுப் பிடிப்போமென்றாள் அவள். “சரி மேடம்… ஆனா அந்தாளை எப்பவுமே கண்காணிச்சிட்டே இருக்கணும்” என்ற மார்த்தாண்டனின் யோசனையையும் அவள் மறுக்கவில்லை. அவரிடம் பேசிவிட்டு வந்தவளை இரவுணவுக்கு அழைத்தார் அஸ்மத். […] - [அத்தியாயம் 54](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-54/): Secondary psychopath எனப்படும் சோசியோபாத்கள் வெகு சுலபத்தில் வன்முறைக்கான தூண்டுதல்களால் பாதிக்கப்படுவார்கள். உதாரணத்திற்கு நீங்கள் சொல்லும் ஏதோ ஒரு வார்த்தை, உங்களின் ஏதோ ஒரு செயல் அவர்களின் கோபத்தைத் தூண்டிவிட்டால் யோசிக்காமல் உங்களைத் தாக்கத் துணிவார்கள். அவர்களுக்கு மனக்கட்டுப்பாடு என்பது கிஞ்சித்தும் இருக்காது. அந்தத் தூண்டுதல் அவர்கள் பட்ட காயம், கசப்பான அனுபவம், வன்கொடுமை, உதாசீனம், குடும்ப உறுப்பினர்களின் இறப்போடு ஏதோ ஒருவகையில் தொடர்புடையதாக இருக்கும். சாதாரண மனிதர்கள் அச்சமயத்தில் பெரிதாக எதிர்வினையாற்ற மாட்டார்கள். ஆனால் சோசியோபாத்களோ ஆக்ரோசத்தோடு வன்முறையில் இறங்கி சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பார்கள். -By Dan Baxter, ESTP Primary psychopath and psychopathy Researcher இதன்யா பொன்மலைக்கு வந்து சேர்ந்துவிட்டாள். இங்கே வருவதற்கான முடிவுக்கு மயூரியும் வாசுதேவனும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். “ஐ நீட் ரெஸ்ட்… இந்த ரெண்டு மாசத்துல என் மனசு கொஞ்சம் அமைதியாகணும்னா ஹில் ஸ்டேசன் மாதிரி ப்ளேசுக்குப் போங்கனு டாக்டர் சொன்னதை […] - [அத்தியாயம் 53](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-53/): Secondary psychopaths பொதுவாக Sociopaths என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தனிமை, வன்கொடுமை, உதாசீனம் மற்றும் அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளின் காரணமாக சைக்கோபாத் ஆகிறார்கள். இந்த வகை சைக்கோபாத்களுக்கு ஆக்ரோசம், முரட்டுத்தனம் அதிகமாக இருக்கும். தற்கொலை எண்ணம் கொண்ட இவர்களது செயல்கள் எப்போது எப்படி இருக்குமென யாராலும் கணிக்க முடியாது -From psychology today பாம்பு சீறுவது போல சீறிக்கொண்டிருந்தாள் அந்த இளம்பெண். அவளது கண்களில் தான் அவ்வளவு கோபம். “இன்னும் எத்தனை நாள் நான் உனக்காக வெயிட் பண்ணணும் நிஷாந்த்? வீ போத் ஆர் மேஜர்… நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னா, கேசை காரணம் காட்டி நீ விலகுற… உண்மைய சொல்லு, உனக்கு நிஜமாவே என் மேல லவ் இருக்கா இல்லையா?” நிஷாந்த் அவளது கையைப் பற்றி முத்தமிட்டான். “ஜஸ்ட் ஃபைவ் இயர்ஸ் பொறுத்துக்க பேபி… நான் ஸ்டடீஸ் முடிச்சிடுறேன்… மாமாவோட ப்ராப்பர்டி, கம்பெனி எல்லாமே எனக்குச் சொந்தமானதும் நம்ம கல்யாணம் […] - [அத்தியாயம் 52](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-52/): சைக்கோபாத்களை Primary psychopaths, Secondary Psychopaths (Sociopaths), Dissocial Psychopaths, Pseudopsychopaths என நான்கு வகைப்படுத்தலாம். Primary Psychopaths என்பவர்கள் பிறக்கும்போதே குறைவான ஆர்ப்பிட்டோஃப்ரண்டல் கார்டக்ஸ் மற்றும் உணர்வு செயலிகள், சிறிய அமிக்டலா, அமிக்டலாவுக்கும் ப்ரீ ஃப்ரண்டல் கார்டக்சுமிடையே உள்ள இணைப்புகளில் வேறுபாடுகள், நீளமான மற்றும் பெரிய கார்பஸ் கலோசம் கொண்ட மூளை அமைப்போடு பிறப்பார்கள். சாதாரண மனிதர்களுடைய மூளையோடு ஒப்பிடும்போது இந்த ப்ரைமரி சைக்கோபத்களின் மூளை அதிக தீட்டா மூளை அலைகளை விழித்திருக்கும்போது கொண்டிருக்கிறது. அவர்களுக்கு ஒரு உணர்வின் நரம்பியல்ரீதியான அனுபவத்துக்கும் உடல்ரீதியான எதிர்வினைக்குமான இணைப்பே இருக்காது.” -By Dan Baxter, ESTP Primary psychopath and psychopathy Researcher விண்டேஜ் ஆம்பியன்சுடன் ஜொலித்த கபேயின் உள் அலங்காரத்தை ரசனையுடன் பார்த்தபடி முரளிதரனுக்காகக் காத்திருந்தாள் இதன்யா. அவள் பொன்மலையிலிருந்து சென்னைக்குத் திரும்பி அன்றோடு ஒரு வாரம் கடந்துவிட்டிருந்தது. கட்டாயம் ஓய்வு தேவை என்ற மருத்துவரின் ஆலோசனையை ஒதுக்கிவிட்டு மறுநாளே வங்கி […] - [அத்தியாயம் 51](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-51/): டெட் பண்ட்டி என்ற அமெரிக்க சீரியல் கில்லருக்கு 1970களில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பெண்களைக் கடத்தி, பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்குக்காக மரண தண்டனை கொடுக்கப்பட்டது. அவனது குழந்தைப்பருவத்தில் தாத்தாவிடம் அனுபவித்த கொடுமைகளால் மனப்பிறழ்வுக்கு ஆளானவன். அவனது அன்னை திருமணத்துக்கு முன்னரே அவனைப் பெற்றதால் சமுதாயத்தின் முன்னே அவரது தம்பியாகக் காட்டப்பட்டே வளர்க்கப்பட்டான். கூடவே அவனது அன்னையின் கணவரான ஜான் பண்ட்டியோடு அவனுக்குச் சுமூக உறவில்லாமல் போய்க் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளான். எனவே இளமைப்பருவத்திலேயே சமுதாயத்திலிருந்தும் குடும்பத்திலிருந்தும் ஒதுங்கி தனிமையில் வாழ்ந்துள்ளான். இத்தனிமை அவனது மனப்பிறழ்வுக்குறைபாட்டை இன்னும் அதிகரித்து சைக்கோபாத்தான அவனை தொடர்கொலைகளில் ஈடுபட வைத்தது. – An article from Psychology today தலையில் யாரோ பெரும்பாரமொன்றை எடுத்து வைத்தது போல அத்துணை கனம். கண்களைத் திறக்கவே முடியவில்லை. கண்ணிமைகளோடு சேர்த்து நெற்றியும் தலையும் விண்விண்னென்று வலித்தன. பெரும் சிரமத்தோடு முயன்று கண்களைத் திறந்து பார்த்தாள் இதன்யா. நகர […] - [அத்தியாயம் 50](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-50/): சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு அவர்களின் ஆக்ரோசத்தையும் முரட்டுத்தனத்தையும் கையாளுவதற்கு தேவையான ‘ஃபேமிலி ஃபோகஸ்ட் தெரபி’ அளிக்கப்படுகிறது,. என்ன தான் மருந்துகள் அளிக்கப்பட்டாலும் சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பொறுத்தவரைக்கும் ஃபேமிலி ஃபோகஸ்ட் தெரபியே முதன்மையானது. சைக்கோபதி என்பது குழைந்தைகளின் மென்மையையும் பச்சாதாபத்தையும் இல்லாமல் செய்துவிடும். இதனால் அவர்களால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. இது அவர்களைச் சுற்றியுள்ள மற்ற குழந்தைகளுக்குப் பாதிப்பை உண்டாக்கும். -From the therapyroute.com காவல் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதன்யாவோடு சேர்த்து சிறப்பு விசாரணை குழுவிலிருந்த மற்ற மூவரும் இனியாவின் வழக்கு பற்றி பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்துக்கொண்டிருந்தனர். “இந்தக் கேஸ்ல சஸ்பெக்டா இருந்த ரோஷண் லாக்கப்ல சூசைட் பண்ணுறதுக்கு முன்னாடி அவருக்கு லை டிடெக்டிங் டெஸ்ட் எடுத்தாங்க… அதுல அவர் இனியாவ கொலை பண்ணலனு சொன்னார்… லை டிடெக்டிங் டெஸ்டுல குளறுபடி எதுவும் நடந்துச்சா சார்?” அச்சமயத்தில் இந்த வழக்கை விசாரித்துக்கொண்டிருந்த மார்த்தாண்டன் மற்றும் […] - [அத்தியாயம் 49](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-49-2/): சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்கான அத்தியாவசியத்தை உணர்வதில்லை. தங்களது குறைபாட்டை அவர்கள் உணராத பட்சத்தில் சிகிச்சைக்கு உடன்படவே மாட்டார்கள். கூடவே சிகிச்சைக்கு உடன்படக்கூடிய மனவலுவும் அவர்களிடம் இருக்காது. அப்படியே சிகிச்சைக்கு உடன்பட்டாலும் தங்களிடம் அச்சிகிச்சையால் உண்டாகும் நேர்மறையான மாற்றங்களை ஏற்றுக்கொள்ள சைக்கோபாத்கள் தயங்குவார்கள். சிலர் கடந்தகாலத்தில் இத்தகைய சிகிச்சைக்கு உடன்பட்டு அது தோல்வியில் முடிந்ததால் இன்னும் அதீத பாதிப்புக்கு ஆளாகியிருப்பார்கள். அதனால் மீண்டும் ஒரு முறை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள அஞ்சுவார்கள். கூடவே இத்தகைய சிகிச்சைக்கான செலவும் அதிகம். அதனால் சாமானியர்களால் இந்தச் சிகிச்சையைச் செய்துகொள்ள இயலாது. -From therapist.com இதன்யாவின் முன்னே அமர்ந்திருந்தார் வழக்கறிஞர் மனுவேந்தன். அவரருகே முகங்கொள்ளா கோபத்தோடு ஏகலைவனும் அமர்ந்திருந்தான். “ஏகலைவன் சாருக்கு பிசினஸ் ரிளேட்டட் ஒர்க்ஸ் எவ்ளோவோ இருக்கு… சம்பந்தமில்லாத கேசுக்காக அவரை ஸ்டேசன்ல உக்கார வச்சு அவர் டைமை வேஸ்ட் பண்ணிட்டிருக்கிங்க மேடம்” என்றார் மனுவேந்தன். “ஓ! அவ்ளோ பிசியான ஆள் எதுக்கு இந்தக் கேஸ்ல […] - [அத்தியாயம் 48](https://nmtamilnovelworld.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-48/): சமூகவிரோத நடத்தை கோளாறுகளில் மிகவும் தீவிரமானது சைக்கோபதி எனப்படும் மனப்பிறழ்வுக்குறைபாடு. இதற்கு சிகிச்சை முறைகள் இருந்தாலும் அந்தச் சிகிச்சையை முழுவதுமாக செய்து முடிப்பதற்கு ஏகப்பட்ட தடைகள் உள்ளன. சைக்கோபதியால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்குச் சரியாக உடன்படமாட்டார்கள். தங்களது குறைபாட்டைப் பற்றிய எவ்வித கவலையுமின்றி சிகிச்சையே தேவையில்லை என்ற மனப்பாங்குடன் வாழ்பவர்கள் அதிகம். அவர்களுக்குப் புரிந்துணர்வு குறைவு என்பதால் தங்களது சைக்கோபதியின் தீவிரம், அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டியதன் அவசியம் பற்றி எல்லாம் எடுத்துக் கூறினாலும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. தங்களது மனப்பிறழ்வுக்குறைபாட்டால் அடுத்தவர்களுக்கு ஆபத்து நேர்ந்தால் அந்தப் பழியைப் பாதிக்கப்பட்டவர்கள் மீது தூக்கிப்போட்டுவிடுவார்கள். தங்களிடமுள்ள எதிர்மறை குணங்களைத் திருத்தும் எண்ணம் எப்போதுமே அவர்களுக்கு வராது. எனவே மாற்றத்தை உண்டாக்கக் கூடிய சிகிச்சை முறைக்கு உடன்பட அவர்கள் மறுப்பதுண்டு.  -From therapist.com இதன்யா மீண்டும் நாற்காலியில் அமர வீடியோ கேமரா ஓட ஆரம்பித்தது. “நான் ரோஷணைச் சந்திச்சது…” கிளாரா சாத்தான் வழிபாட்டுக்குழுவில் இணைந்த கதையைச் சொல்ல […] - [அத்தியாயம் 47](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-49/): மனப்பிறழ்வுக்குறைபாடு எனப்படும் சைக்கோபதிக்கான அடுத்த கட்ட சிகிச்சை முறை ‘ஆன்டி-சைக்காடிக்ஸ்’ எனப்படும் மருந்துகளை அளிப்பது. வன்முறையும் ஆக்ரோசமும் கொண்ட சைக்கோபாத்களுக்கு இந்த மருந்துகளை அளிப்பதன் மூலம் மற்றவர்களுக்கு ஊறு விளைவிக்கவேண்டுமென்ற அவர்களின் தூண்டுதல் கட்டுப்படுத்தப்படும். அடுத்த மருந்து, ‘மூட் ஸ்டெபிளைசர்கள்’ எனப்படும் உணர்வு நிலையாக்கிகள். இவை சைக்கோபாத்களுக்கு உண்டாகும் கிளர்ச்சிகளையும், மாயைகளையும் கட்டுப்படுத்தும். இந்தக் கிளர்ச்சிகளும், மாயை உணர்வுகளும் தான் அவர்களை வன்முறையாகச் செயல்படவைக்கும் காரணிகள். இவை கட்டுப்படுத்தப்பட்டால் சைக்கோபாத்களின் வன்முறையும் கட்டுக்குள் இருக்கும். -From therapist.com கிளாராவின் அழுகுரல் விசாரணை அறையிலிருந்து ஒலித்துக்கொண்டிருந்தது. அது சிறப்பு விசாரணைக்குழுவினரின் அலுவலக அறை வரை கேட்டது என்றால் எவ்வளவு உரத்தக் குரலில் அவள் அழுதிருப்பாள் என்று யோசித்துப் பாருங்கள்! மார்த்தாண்டன் தடயவியல் துறையிலிருந்து வாங்கி வந்த அறிக்கையை இதன்யாவிடம் காட்டிக்கொண்டிருந்தார். “அந்த ஹாக்சா ப்ளேடுல உறைஞ்சு போயிருந்த இரத்த சாம்பிள் இனியாவோட ப்ளட் சாம்பிளோட மேட்ச் ஆகுது மேடம்… இந்த முடியும் இனியாவோட […] - [அத்தியாயம் 46](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-46/): சைக்கோபதியைப் பூரண குணமடையச் செய்வது என்பது இயலாத காரியம். ஆனால் சில சிகிச்சை முறைகளை வைத்து அதை அபாயகரமான நிலையிலிருந்து கட்டுக்குள் கொண்டு வரலாம். அதன் மூலம் சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட நபரால் யாருக்கும் ஆபத்து வராத வண்ணம் தடுக்க முடியும். அதில் முதல் வகை சிகிச்சை Cognitive Behaviourial Therapy. இது பாதிக்கப்பட்ட நபரின் சிந்தனைகள், உணர்வுகள், நடவடிக்கைகள் போன்றவற்றைச் சீர்செய்ய உதவும் சிகிச்சை ஆகும். சைக்கோபதி அல்லது நடத்தை சார்ந்த குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு தனி நபருக்கு இம்மூன்றும் சீரற்ற முறையில் இருப்பதால் உண்டாகும் தூண்டுதல்களே அவரை அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபடச் செய்யும். இந்தத் தெரபியானது அந்நபரின் சிந்தனை, உணர்வுகள் மற்றும் நடவடிக்கைகள் இம்மூன்றையும் நேர்மறையாக்கி நல்லவிதமானத் தூண்டுதல்களை உருவாக்க வழிவகுக்கும். -From therapy.com கிளாராவிற்கு அன்றைய விடியலே சோதனையாக அமைந்தது. தலைவலியால் கபாலம் பிளந்துவிடுமோ என்று எண்ணுமளவுக்குக் கொடூரவலி. மிச்செல்லின் பள்ளியில் ‘பெற்றோர் ஆசியர் சந்திப்பு’ […] - [அத்தியாயம் 45](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-45/): பெண் சைக்கோபாத்கள் நெருங்கிய உறவுகளிடம் நிலையான அன்பைக் காட்டுவதில்லை. குடும்பத்துடன் இருந்தாலும் அவர்கள் மற்றவர்களிடம் விலகலைக் கடைபிடிப்பார்கள். அக்கறையற்ற, அஜாக்கிரதையான, வன்முறையைக் கையாளும் நபராக தன் குழந்தைகள் மற்றும் வாழ்க்கைத்துணைவரிடம் நடந்துகொள்ள கூட அவர்கள் தயங்குவதில்லை. சைக்கோபதி கொண்ட நபர்கள் யாராயினும் அவர்களுக்கு சக மனிதர்கள் மீது அக்கறையோ இரக்கமோ இருக்காது. எந்த ஆழமான அன்பையும் உறவையும் மதிக்கும் தன்மை அவர்களுக்கு இருப்பதில்லை. அவர்களுக்கு அமைதியற்ற சூழலை உருவாக்கப் பிடிக்கும். சைக்கோபாத் பெண்கள் தங்களது நடவடிக்கையால் சமுதாய அல்லது குடும்ப அமைதி குலைந்தாலும் அது குறித்து கவலை கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு குற்றவுணர்ச்சியோ வெட்கமோ கிஞ்சித்தும் இருக்காது. – An article from Psychology today பொன்மலை காவல் நிலையம்… இதன்யா ஏகலைவனைப் பற்றி மார்த்தாண்டன் சேகரித்து வைத்திருந்த தகவல்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். அன்று மாலை மாஜிஸ்திரேட்டைச் சந்தித்து கைது ஆணையை வாங்கிவிட்டால் ஏகலைவன் மற்றும் கிளாரா இருவரையும் கைது […] - [அத்தியாயம் 44](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-44/): மனப்பிறழ்வு குறைபாடு கொண்ட பெண் சைக்கோபாத்கள் மனதளவின் காயமுறும்போது அதிவேகமாகவும் சுலபமாகவும் தங்களின் ஆக்ரோசத்தை எதிராளிகளிடம் காட்டத் துணிவார்கள். அது சில நேரங்களில் அவர்களின் இணையராக இருக்கவும் வாய்ப்புள்ளது. பல நேரங்களில் அவர்கள் தங்கள் இணையரை உணர்வுரீதி, பொருளாதாரரீதி, உடல்ரீதியாக வேதனைப்படுத்த முயற்சிப்பார்கள். அவர்களின் இணையருடன் இருக்கும் உறவை யாரேனும் தகர்க்க முயன்றார்கள் என்றாலோ வன்முறையைக் கையில் எடுத்து மரியாதை குறைவாக நடந்துகொள்ள தயங்க மாட்டார்கள். இந்தப் பெண் சைக்கோபாத்கள் செக்ஸ், பாலியல் ரீதியான மயக்கம், தன்னைத் தானே அழித்துக்கொள்வேன் என பயமுறுத்துதல் போன்றவற்றை அடுத்தவர்களைக் கட்டுப்படுத்தும் ஆயுதங்களாகப் பயன்படுத்துவார்கள். அடுத்தவர்களை அவர்களின் விருப்பமின்றி பின்தொடர்வது, சைபர்புல்லியிங், வார்த்தைகளால் அவமானப்படுத்துவது போன்றவற்றிலும் ஈடுபடத் தயங்கமாட்டார்கள் இத்தகைய பெண் சைக்கோபாத்கள். – An article from Psychology today பொன்மலை காவல்நிலையத்தில் மீண்டும் விசாரணை அறை உச்சபட்ச பரபரப்பில் இருந்தது. இரண்டாம் முறையாக அந்த அறையில் அமர வைக்கப்பட்டிருந்தான் நிஷாந்த். ஏற்கெனவே நீதிமன்றத்துக்கு […] - [அத்தியாயம் 43](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-43/): பெண் சைக்கோபாத்கள் தங்களுக்கென ஒரு போலியான முகமூடியைப் போட்டுக்கொண்டு உலாவுவார்கள். அன்பான பெண், அக்கறையான மனைவி, உதவிக்கு ஆளற்ற அபலைப்பெண், சுதந்திரமனப்பாங்கு கொண்ட பெண், இரக்கமுள்ள அண்டைவீட்டார், அன்பான அன்னை என சமுதாயத்திற்காக அவர்கள் அணியும் முகமுடி சமயத்திற்கு தகுந்தாற்போல மாறிக்கொண்டே இருக்கும். அனைவரும் விரும்பத்தக்க ஒரு பெண்ணாக தன்னை வெளிக்காட்டிக்கொள்வதில் பெண் சைக்கோபாத்கள் மெனக்கிடுவார்கள். ஏனென்றால் அனைவரிடமும் நல்ல பெயர் எடுப்பதில் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். அவர்களுக்குச் சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் அதிகமாக இருக்கும். தீவிர மனப்பிறழ்வு குறைபாடுள்ள பெண்கள் ஆண் சைக்கோபாத்களைப் போலவே ஆக்ரோசமாக உடல்ரீதியான தாக்குதல்களில் இறங்குவார்கள்” – An article from Psychology today காவல் நிலையத்துக்குக் கிளம்பிய இதன்யாவுடைய பைக்கின் குறுக்கே ஒரு நபர் வரவும் சட்டென ப்ரேக்கிட்டு நின்றது. வந்தவர் வேறு யாருமில்லை சாவித்திரி தான். யாரும் தன்னைக் கவனிக்கிறார்களா என சுற்றும் முற்றும் அவர் பார்க்கவும் “நீங்க சொல்ல வேண்டியதை ஏற்கெனவே சொல்லிட்டிங்களே.. […] - [அத்தியாயம் 42](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-42/): மீண்டும் மீண்டும் குற்றம் செய்யும் சைக்கோபாத்களில் ஆண்கள் பெண்களை விட அதிகம் இருக்கின்றனர். காரணம் பெண் சைக்கோபாத்கள் உடல்ரீதியான கொடூரங்களில் ஈடுபடுவதை விட வார்த்தைகளால் வதைப்பதில் கைதேர்ந்திருப்பதே. அதனால் வன்முறையான குற்றங்களில் அவர்கள் ஈடுபடுவது குறைவு. பெண் சைக்கோபாத்களில் ஒட்டுண்ணித்தனமும் பொறாமையும் அதிகம். அடுத்தவர்களின் சந்தோசத்தைக் கண்டு அவர்களால் பொறுக்கவே முடியாது. அடுத்தவர்களுக்குச் சொந்தமானதை தனது உடைமையாக்கிக்கொள்ள பயமுறுத்துதல், மிரட்டல் போன்ற காரியங்களில் இறங்குவார்கள் சைக்கோபாத்கள். பெண் சைக்கோபாத்கள் அனைவரும் ஃபேட்டல் அட்ராக்சன் திரைப்படத்தில் வரும் நடிகை க்ளென் குளோசின் கதாபாத்திரம் போல இருப்பார்கள் என்று சொல்லிவிடமுடியாது. ஏனெனில் அவர்கள் மற்றவர்களின் உணர்வுகளோடு விளையாடுவதில் வல்லவர்கள். – An article from Psychology today தனது பைக்கிலிருந்து இறங்கிய இதன்யா ஏகலைவனின் பங்களாவுக்குள் எவ்வித தயக்கமுமின்றி நுழைந்தாள். அவளுக்கு அதிகச் சிரமம் வைக்காமல் முகப்பிலிருந்த தூணில் படர்ந்திருந்த ராமபாணக்கொடியைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் அவன். இதன்யாவைக் கண்டதும் ஒரு நொடி அவனது […] - [அத்தியாயம் 41](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-41/): “பெண் சைக்கோபாத்கள் கட்டுப்படுத்தும் குணம் கொண்டவர்கள். தந்திரமும், வஞ்சகமும் அவர்களின் இயல்பு. அவர்கள் தங்களது செயல்கள் உண்டாக்கும் விளைவுக்கான பொறுப்பை ஏற்கவே மாட்டார்கள். சுரண்டல் மனப்பான்மை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மேலும் அவர்கள் இளம் வயதிலேயே உணர்வுரீதியாகச் சுரண்டப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் வழிப்பறி, போதைப்பொருட்கள் சார்ந்த குற்றங்களிலும் ஈடுபட வாய்ப்புண்டு. சைக்கோபாத் தன்மை இல்லாத ஒரு குற்றவாளியிடம் இதில் ஏதோ ஒரு குற்றம் மட்டுமே இருக்கும். அதோடு பெண் சைக்கோபாத்களாலும் ஒரு தடவை ஒரு தவறு செய்து அதில் ருசி கண்டுவிட்டால் மீண்டும் அத்தவறைச் செய்யாமல் இருக்க முடியாது. மீண்டும் மீண்டும் செய்யும் தூண்டுதல் அவர்களுக்குள் அடங்காமல் இருக்கும். ஒருமுறை தண்டனை அனுபவித்த மற்ற குற்றவாளிகள் மனம் திருந்துவது போல சைக்கோபாத்கள் மனம் திருந்துவதில்லை. மாறுவதுமில்லை. – An article from Psychology today இதன்யாவும் முரளிதரனும் சைபர் காவல்நிலையத்திலிருந்து அடுத்து வந்த ஃபேக்ஸ் தகவலைப் படித்துவிட்டு அமைதியாய் அமர்ந்திருந்தனர். மடிக்கணினியின் சீரியல் […] - [அத்தியாயம் 40](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-40/): சில குறிப்பிட்ட வழக்குகள் பெண் சைக்கோபாத்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் காட்டுகின்றன. அவற்றில் ஒன்று தான் ஆமி என்ற இருபது வயதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கொலைக்குற்றவாளியின் வழக்கு. ஆமியைப் பரிசோதித்த போது அவளுக்கு ‘ஆன்டி சோசியல் பெர்ஷனாலிட்டி டிஸ்சார்டர்’ எனப்படும் சமூக விரோத மனப்பாங்கு நோயோடு மனப்பிறழ்வுக்கான அறிகுறிகளும் இருந்ததாகக் கண்டறிப்பட்டது. அதீத மனப்பிறழ்வுக்கான அனைத்து அறிகுறிகளும் அப்பெண்ணுக்கு இருந்தன என சோதித்தவர்கள் கூறினார்கள். அவள் தனது பதின்வயதிலேயே சமூகவிரோத மனப்பாங்கை வெளிப்படுத்தியிருக்கிறாள். அடிக்கடி வீட்டை விட்டுக் காணாமல் போவது, போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதென பலமுறை செய்திருக்கிறாள். கொலைக்கான ஆயுள் தண்டனை ஆமிக்குக் கிடைக்கும் முன்னரே நிறைய முறை திருட்டு மற்றும் ஏமாற்றியதற்கான குற்றங்களைச் செய்து சின்ன சின்ன தண்டனைகளையும் பெற்றிருந்தாள். அவளது வழக்கை வைத்து ஆய்வறிக்கை தயார் செய்த நபர் ஆமி வஞ்சகமும் கர்வமும் கொண்டவளாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். செய்த தவறுகளுக்குப் பொறுப்பேற்க மறுத்தவளுக்குப் பச்சாதாபமோ கழிவிரக்கமோ அறவே கிடையாது என்கிறார் […] - [அத்தியாயம் 39](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-39/): பெண் சைக்கோபாத்களுக்குத் தங்கள்மீது எந்த நல்லெண்ணமும் இருக்காது. அதற்காக அவர்கள் வருத்தப்படவும் மாட்டார்கள். நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்தாலும் அதற்கான நன்றிக்கடனை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் விரும்பிய அனைத்தையும் அடைந்தே தீரவேண்டுமென்ற வெறியோடு செயல்படுவார்கள். அவர்களை வாழ்க்கை ஏமாற்றிவிட்டதாகக் கருதுவார்கள் இந்தப் பெண் சைக்கோபாத்கள். இத்தனைக்கும் அவர்கள் ஆசைப்படும் அனைத்துமே எளிதில் கிட்டாதவை, நடக்கக்கூடாதவையாகவே இருக்கும். அவர்களை யாராலும் திருப்திப்படுத்தவே முடியாது. இம்மாதிரி பெண் சைக்கோபாத் ஒருவர் உங்களிடம் ஏதோ ஒரு ரகசியம் அல்லது புறணியைச் சொல்கிறார் என்றால் கவனமாக இருங்கள். ஏனெனில் இதே போல தான் உங்களது இரகசியங்களையும் உங்களைப் பற்றிய புறணிகளையும் பிறரிடம் கூறுவார். – An article from Psychology today மறுநாள் காவல் நிலையத்துக்குக் கிளம்பிய இதன்யாவை மாவட்ட காவல்துறையின் சைபர் பிரிவிலிருந்து வந்த அழைப்பு அங்கே போகவிடாமல் தடுத்தது. சைபர் பிரிவு அதிகாரி சொன்ன தகவல் அத்தகையது. “உடனே வர்றேன் சார்… […] - [அத்தியாயம் 38](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-38/): பெண் சைக்கோபாத்கள் யாருக்கும் விசுவாசமாக இருக்கமாட்டார்கள். அனைவரையும் தனது தேவைக்குப் பயன்படுத்திக்கொள்வது தன் உரிமை என்ற மனப்பாங்கு அவர்களுக்கு இருக்கும். உங்களது துன்பங்களில் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். மகிழ்ச்சியில் அவர்கள் சிரிப்பதை நீங்கள் கண்கூடாகக் காணலாம். வேண்டுமென்ற அடுத்தவர்களின் உடமைகளைத் திருடுவதும் பெண் சைக்கோபாத்களில் சிலர் செய்வார்கள். தப்பித் தவறிப் பிடிபட்டுவிட்டால், தனக்குச் சாதகமாகச் சூழ்நிலையைத் திரித்து கட்டுக்கதை ஒன்றை கூறி தங்களது தகாத செயலைக் கூட நியாயப்படுத்துவார்கள். கடைசியில் உங்கள் மீதே பழியைத் திருப்புவார்கள். செய்த இழிகாரியத்துக்கு அவர்கள் எப்போதும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். – An article from Psychology today “பொதுவா ரோஷணுக்கு மாத்திரை போடுறது தடைபட்டா ஹலூசினேசன் வரும்… அப்பலாம் சாத்தான் என் கண்ணுக்குத் தெரியுறார், என்னை அவர் கிட்ட கூப்பிடுறார்னு உளறுவான்… அன்னைக்கும் அவன் அப்பிடிப்பட்ட சிச்சுவேசன்ல தான் இருக்கான்னு ராக்கி பேசுறப்ப புரிஞ்சிக்கிட்டு ஃப்ராக்சன் ஆப் செகண்ட்ஸ்ல பழிவாங்குற திட்டத்தைப் போட்டேன்… செங்கோடன்ங்கிற பொய்யான […] - [அத்தியாயம் 37](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-37/): பெரும்பாலான பெண் சைக்கோபாத்கள் அடுத்தவர்களை உணர்வுரீதியாக வதைப்பதற்கு எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார்கள். ஒரு பெண் சைக்கோபாத் தனது எதிராளியின் தன்னம்பிக்கையை உடைப்பது, அவர்களை கேலிக்கு ஆளாக்குவது, குடும்பத்தினர் மற்றும் தோழமை வட்டத்திடம் அந்த எதிராளியைப் பற்றித் தவறாகச் சொல்லி அவர்களை அந்த எதிராளிக்கு எதிராகத் திருப்பிவிடுவது போன்ற காரியங்களைச் செய்யத் தயங்கமாட்டார். யாராவது ஒருவரின் வாழ்க்கையை அழிக்கவேண்டுமென அந்த பெண் சைக்கோ முடிவு செய்துவிட்டால் அதில் வெறியோடு இறங்குவார். பெண் சைக்கோபாத்கள் ஆண் சைக்கோபாத்களை விட தந்திரமான, அடுத்தவர்களை தன் இஷ்டத்திற்கு ஆட்டிவைக்கக்கூடிய, தலைசிறந்த பொய்யர்களாக இருப்பார்கள். அனைவரின் கவனத்தையும் தன்னை நோக்கி குவிப்பதற்கு எந்த எல்லைக்கும் செல்வார்கள் இவர்கள். அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் எப்படியெல்லாம் அவர் தன்னை ஒரு பாதிக்கப்பட்டவராகக் காட்டிக்கொள்கிறார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். சில நேரங்களில் உங்கள் இரக்கத்தை ஜெயிக்க அவர் முதலை கண்ணீர் வடிப்பார். ஆனால் நீங்கள் அவ்விடத்தை விட்டு நீங்கிய அடுத்த […] - [அத்தியாயம் 36](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-36/): சைக்கோபாத் என்றதுமே பொதுவாக அமெரிக்கன் சைக்கோ நாவலில் வரும் பேட்ரிக் பேட்மேன் தான் அனைவரின் ஞாபகத்திற்கும் வருவார். ஆனால் நடப்பு வேறு மாதிரி உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். நரம்புளவியல் குறைபாடு கொண்ட ஒரு பெண் அக்குறைபாடு கொண்ட ஆணை விட ஆபத்தானவள் என்கின்றனர் அவர்கள். பொதுவாக சைக்கோபாத் என்றதுமே இரக்கமற்ற, குற்றங்கள் செய்யக்கூடிய, சமூகவிரோத நடத்தை கொண்ட கொடூரன் என்றே மக்கள் கருதுகிறார்கள். பெண்கள் மென்மையானவர்கள் என்ற பொதுமைப்படுத்துதல் காரணமாக மேற்சொன்ன குணாதிசயங்கள் பெண்களுக்கும் இருக்கும் என்பதை யாரும் சிந்திப்பதேயில்லை. சைக்கோபாத்கள் பணம், அதிகாரம் மற்றும் கட்டுப்படுத்தும் திறனைச் சொந்தமாக்கிக்கொள்வதில் விழிப்பாக இருப்பார்கள் என்கிறார் கார்பரேட் உலகிலுள்ள சைக்கோபாத்களை அணுகுவதில் நிபுணரும், ஆங்கிலா ரஷ்கின் பல்கலைகழகத்தில் பணியாற்றும் மருத்துவர் க்ளைவ் படி. சைக்கோபாத்கள் வன்முறையானவர்கள், சமூகவிரோதிகள் என்று சொல்வதெல்லாம் ஒரு குறுகிய பார்வை என்கிறார் அவர். பெண் சைக்கோபாத்களிடம் மூர்க்கத்தனமும், வன்முறையும் குறைவாக இருப்பதால் அவர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை என்கிறார் அவர். […] - [அத்தியாயம் 35](https://nmtamilnovelworld.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-35/): சைக்கோபாத்கள் என்றாலே கொலைகாரர்கள், குற்றவாளிகளாகத் தான் இருக்கவேண்டுமென எந்தக் கட்டாயமுமில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சைக்கோபாத்கள் வன்முறையோடு இன்னும் பல குற்றவியல் செயல்களிலும் ஈடுபடுவதாக அவர்கள் கூறுகிறார்கள். அதீத மனக்கிளர்ச்சி, பழியைத் திசை திருப்பும் போக்கு, இதற சமூகவிரோதபோக்குகள் இவையனைத்தும் சேர்ந்து ஒரு சைக்கோபாத்தை மற்ற குற்றங்கள் செய்பவர்களை விட அபாயகரமானவனாகக் காட்டுகின்றன. இருப்பினும் மனப்பிறழ்வுக்குறைபாட்டுக்கும், வன்முறை மனப்பான்மைக்கும் இடையே சில விசயங்கள் ஒத்துப்போகலாம். எல்லா சைக்கோபாத்களும் கொலைகாரர்கள் குற்றவாளிகளாக மாறுவதில்லை. அவர்களின் மூர்க்கத்தனத்தைத் தணிக்கவும் கட்டுப்படுத்திக்கொள்ளவும் தெரிந்தவர்கள் வன்முறையான சைக்கோபாத்களாக உருவெடுப்பதில்லை. – An article from Psychology today ஜான் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முத்துவைத் தேடி கொல்லத்திற்கு காவல்துறையினர் விரைந்தார்கள். அதில் மார்த்தாண்டனும் மகேந்திரனும் அடக்கம். முரளிதரனும் இதன்யாவும் பொன்மலையில் இருந்தார்கள். காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கில் ஏற்பட்டுள்ள திருப்பங்களையும், முன்னேற்றத்தையும் பற்றி அறிக்கை கொடுக்கும் வேலை அவர்களுக்கு இருக்கிறது. கூடவே முத்துவைப் பொன்மலைக்கு அழைத்து வந்ததும் அவனையும் […] - [அத்தியாயம் 34](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-34/): சைக்கோபாத்களின் தனிமை, மறைக்கப்பட்ட துன்பங்கள், தன்னம்பிக்கையற்ற போக்கு போன்றவை வன்முறை மற்றும் குற்றவியல் நடத்தைக்கான தீவிரமான அறிகுறிகள் என்பதால் அவற்றை அடையாளம் காண்பது மிகமிக முக்கியம். ஒவ்வொரு சைக்கோபாத்தின் வாக்குமூலங்களைக் கேட்டறியும் போது தான் அவர்கள் எந்தளவுக்குப் பலகீனமாகவும் காயப்பட்டும் இருக்கிறார்கள் என்பது புரியும். இந்தச் சைக்கோபாத் குணங்களைத் தவிர்க்கவும், சிகிச்சை அளிக்கவும் இன்னும் நிறைய சைக்கோஃபார்மோதெரபி சிகிச்சை சோதனைகள், நியூரோ ஃபீட்பேக் மற்றும் ஒருங்கிணைந்த சைக்கோதெரபி ஆராய்ச்சிகள் கட்டாயம் தேவை. சைக்கோபாத்கள் பற்றி சமுதாயத்தில் இப்போதிருக்கும் பார்வை முழுமையற்றது. ஏனெனில் அவர்கள் அனுபவித்த தனிமையையும், துன்பங்களையும் யாரும் பெரிதாகக் கருதுவதில்லை. எப்போது இவையெல்லாம் முக்கியத்துவம் பெறுமோ, அப்போதுதான் சைக்கோபாத்கள் என்பவர்கள் இதயமற்றவர்கள் என்று நாம் பார்க்கும் கோணம் மாறி அவர்களும் பாதிக்கப்பட்ட மனிதர்களே என சிந்திக்க ஆரம்பிப்போம். -From ‘The hidden suffering of the psychopath’ article of Willem H.J.Martens நிஷாந்தையும் இனியாவையும் கோவிலில் பார்த்த கையோடு […] - [அத்தியாயம் 33](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-33/): சைக்கோதெரபி மட்டும் மனப்பிறழ்வுக்குறைபாடான சைக்கோபதியைக் குணப்படுத்த போதாது. சைக்கோஃபார்மோதெரபியானது நரம்புயிரியல் செயல்பாடுகளை இயல்புக்குக் கொண்டு வர உதவியாக இருக்கும். லித்தியம் சமூகவிரோதப்போக்கு, முரட்டுத்தனம் மற்றும் தாக்கும் குணம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு பங்காற்றுகிறது. ஹோலண்டர் என்பவர், மனநிலையை நிதானமாக்கும் மருந்துகளான டைவல்ப்ரோயெக்ஸ், SSRI, MAOI மற்றும் நியூரோலெப்டிக்ஸ் போண்றவை முரட்டுத்தனம் மற்றும் விரோத மனப்பாங்குடன் கூடிய மனப்பிறழ்வு நோயாளிகளைக் கட்டுக்குள் வைப்பதில் சிறப்பாக வேலை செய்வதாக ஆவணப்படுத்தியுள்ளார். சைக்கோபதியை எந்தளவுக்கு சைக்கோஃபார்மாதெரபி குணமாக்கும் என்பது பற்றி இன்னும் போதுமான ஆய்வுகள் நடத்தப்படாததால் தரவுகளும் குறைவாகவே உள்ளன. மூளைப்புறணியின் குறைவான தூண்டுதல், அனிச்சைச்செயலைப் புரிந்துகொள்வதில் உள்ள குறைபாடுகளைப் போக்க நியூரோ ஃபீட்பெக் எனப்படும் நரம்பியல் கருத்தறிக்கைகள் முறை உதவிகரமாக உள்ளது. -From ‘The hidden suffering of the psychopath’ article of Willem H.J.Martens “நிஜமா நீ சொன்ன மாதிரி நடக்குமா? இல்ல குருட்டாம்போக்குல எதையாச்சும் உளறுறியா?” என்று சற்று கண்டிப்பான […] - [அத்தியாயம் 32](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-32/): தேவையற்ற தூண்டுதல்கள் குறைந்த அளவிலான MAO மற்றும் கார்டிசோல், அதிகளவிலான கொனாடல் ஹார்மோன்களால் ஏற்படுகின்றன. எனவே பெரும்பான்மையான சைக்கோபாத்கள் இத்தகைய நரம்புயிரியல் குறைபாடுகளால் இயல்புக்கு மீறிய நடத்தைகளை வெளிப்படுத்துகின்றனர். இதுவே அவர்களுக்கும் இவ்வுலகிற்குமிடையே பிளவை உண்டாக்குகிறது. தேவையற்ற தூண்டுதல்கள், விரோதம், முரட்டுத்தனம் மற்றும் உணர்வுரீதியான வேதனைகளை வேண்டுமானால் சைக்கோதெரபியின் உதவியால் ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரலாம். மற்றபடி சைக்கோபதியைக் கண்டறியவும் கட்டுக்குள் கொண்டுவரவும் சைகோஃபார்மாதெரபி மற்றும் நியூரோ ஃபீட்பேக் எனப்படும் நரம்பு சம்பந்தப்பட்ட கருத்தறிக்கை அவசியம். நீண்டகால சைக்கோதெரபி அதாவது குறைந்தபட்சம் ஐந்தாண்டு கால சைக்கோதெரபியில் சில வகையான சைக்கோபாத்களும், அவர்களது மோசமான நடத்தைகளும் குணமாகியிருக்கின்றன. -From ‘The hidden suffering of the psychopath’ article of Willem H.J.Martens “ஜான் அண்ணா” இனியாவின் குரல் கேட்டதும் ஜானுக்கும் நவநீதத்துக்கும் தூக்கிவாரிப்போட்டது. இருவரும் அதிர்ச்சியோடு அவளைப் பார்க்க இனியாவோ உறுத்து விழித்தாள் இருவரையும். அவளருகே நின்று கொண்டிருந்த குமாரி கிடைத்த வாய்ப்பை […] - [அத்தியாயம் 31](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-31/): கடந்து போன பத்தாண்டுகளில், சைக்கோபதி உருவாவதற்கான சில காரணங்கள் பற்றிய நரம்புயிரியல் விளக்கங்கள் கிடைத்துள்ளன. உதாரணமாக தேவையற்ற தூண்டுதல்கள், பொறுப்பற்றத்தன்மை, விரோதம் மற்றும் முரட்டுத்தனம் இவையெல்லாம் நரம்பியல் இரசாயனங்களான மோனோமைன் ஆக்சிடஸ் (MAO), செரொடனின், 5-ஹைட்ராக்சிண்டோலேக்டிக் ஆசிட், ட்ரியைடோதைரனின், ஃப்ரீ தைராக்சின், டெஸ்டோஸ்டிரோன், கார்டிசோல், அட்ரினோகார்டிகோட்ராஃபிக் ஹார்மொண் மற்றும் ஹைப்போதலாமிக் – பிட்யூட்டரி – அட்ரினல் மற்றும் ஹைப்போதலாமிக் – பிட்யூட்டரி – கொனாடல் அச்சுகளில் உருவாகும் ஹார்மோன்கள் போன்றவற்றின் அசாதாரணமான சுரப்பு அளவுகளால் உண்டாகும் பிரச்சனைகள் ஆகும். சைக்கோபதியின் மற்ற அறிகுறிகளான உணர்வு தேடுதல்கள், மோசமான அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளும் திறனின்மை போன்றவை மூளை புறணிகளின் குறைவான தூண்டுதலோடு தொடர்புபடுத்தப்படுகின்றன. -From ‘The hidden suffering of the psychopath’ article of Willem H.J.Martens பொன்மலை காவல் நிலையம்… நவநீதம் விசாரணையில் கூறிய உண்மைகள் அனைத்தையும் தனது விசாரணைக்குழுவினரிடம் போட்டுக் காட்டினாள் இதன்யா. மார்த்தாண்டன் இன்னும் காவல் நிலையத்துக்கு வரவில்லை. […] - [அத்தியாயம் 30](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-30/): வன்முறையான சைக்கோபாத்கள் தங்களது மூர்க்கத்தனத்தை தங்கள் மீதே காட்டிக்கொள்ளும் அபாயமும் உள்ளது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சைக்கோபாத்கள் மனோதத்துவ சிகிச்சைக்குப் பிறகு தங்களது குணாதிசயம் கொடுத்த குற்றவுணர்ச்சியின் காரணமாக மிகவும் மோசமான முறையில் தற்கொலை செய்து இறந்துள்ளார்கள். அவர்கள் தங்களது உயிருக்கு மதிப்பே இல்லையென கருதுவதும், இனி வாழ்ந்து என்ன சாதிக்கப்போகிறோமென ஒடுங்கிப்போவதுமே இத்தகைய கொடூரமான தற்கொலைகளுக்குக் காரணமாக அமைகிறது. -From ‘The hidden suffering of the psychopath’ article of Willem H.J.Martens சாந்திவனம்… நவநீதம் பனியில் உறைந்த பதுமை போல அமர்ந்திருந்தாள். பொன்மலையின் குளிர்ந்த சீதோஷ்ணம் கூட அவளது வியர்வை உற்பத்தியைக் குறைக்கவில்லை. விசாரணைக்காக ஒரு அறையில் வீடியோ எடுப்பதற்கான ஆயத்தத்தோடு அவளெதிரே அமர்ந்தாள் இதன்யா. அரண்டு போயிருந்த நவநீதம் மிரட்சியோடு, தான் சொல்லப்போவதெல்லாம் வீடியோவாகப் பதிவாகுமா எனப் பார்த்தாள். இதன்யா விசாரணையைப் பாதியில் முடித்துக்கொண்டு கிளம்பியதும் ஆசுவாசமுற்றவள் அடுத்த சில மணி நேரத்தில் மீண்டும் அவள் வந்து […] - [அத்தியாயம் 29](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-29/): தனிமையால் கொலை செய்வது நமக்கு வேண்டுமானால் நம்ப முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் டாமர் மற்றும் நீல்சன் இருவரும் தங்களது தனிமையையும் சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட தன்மையையும் சகிக்க முடியாத வேதனை என்கிறார்கள். அவர்கள் தங்களுக்கென ஒரு சாடிஸ்டான உலகத்தை உருவாக்கிக்கொண்டு தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களான நிராகரிப்பு, வன்கொடுமை, அவமானம், அலட்சியம் மற்றும் உணர்வுரீதியான பாதிப்புகளுக்குப் பழி தீர்க்கத் தொடங்கினார்கள். டாமரும் நீல்சனும் கொலை செய்வது தங்களுக்குச் சந்தோசத்தைத் தருவதில்லை என்கின்றனர். அவர்களிடம் சிக்கியவர்களை வதைப்பதும், தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதுமே சந்தோசத்தைக் கொடுக்கும் என இரு சைக்கோபாத்களும் கூறுகிறார்கள். டாமர் என்பவன் தன்னிடம் சிக்கியவர்களுக்குத் தூக்கமாத்திரை கொடுத்து அரைமயக்கத்தில் ஆழ்த்திய பிறகு அவர்களின் மூளைக்குள் ஆசிட்டை ஊசி மூலம் செலுத்தி ஜாம்பி ஆக்கி ரசிப்பதை வழக்கமாக வைத்திருந்தானாம். நீல்சனோ உயிரோடு இருப்பவர்களை விட இறந்த உடல்கள் தன்னைத் தனிமையில் விட்டுப் போகாது என நம்பியிருக்கிறான். இறந்த உடல்களோடு பேசுவதையும் அவர்களுக்காக கவிதை எழுதுவதையும் […] - [அத்தியாயம் 28](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-28/): டாமர் மற்றும் நீல்சன் இருவரும் தங்களது தனிமையைப் போக்கிக்கொள்ள துணை வேண்டுமென்பதற்காக தொடர் கொலைகளைச் செய்ததாகக் கூறியிருந்தார்கள். இருவருக்கும் நண்பர்கள் மற்றும் பழகியவர்கள் என யாருமில்லை. அவர்களுக்கும் சமுதாயத்துக்கும் உள்ள தொடர்பே ஓரினச்சேர்க்கை பார்களில் இருக்கும் அற்ப சொற்ப தருணங்கள் மட்டுமே. நீல்சன் கொலை செய்த பிறகு இறந்த உடல்களோடு பேசிக்கொண்டே தொலைக்காட்சி பார்ப்பானாம். டாமர் கொலை செய்தவர்களின் உடலைச் சாப்பிடுவதன் மூலம் அவர்கள் தன்னுடன் இருப்பதாக நம்பியிருக்கிறான். இதன் மூலமாக அவர்கள் அவனோடு பிரிக்க முடியாதபடி கலந்துவிடுவார்கள் என்பது அவனது பைத்தியக்காரத்தனமான நம்பிக்கை. -From ‘The hidden suffering of the psychopath’ article of Willem H.J.Martens மறுநாள் காலையில் மார்த்தாண்டன் தடயவியல் துறையினரிடம் அறிக்கையை வாங்கிக்கொள்ள புறப்பட்டுப் போய்விட்டார். மகேந்திரன் மட்டுமே காவல்நிலையத்தில் இருந்தார். அங்கே வந்த இதன்யா பிரேத பரிசோதனை அறிக்கையை வாங்க யாரை அனுப்பப்போகிறீர்கள் என விசாரித்தாள். “மானிங் கான்ஸ்டபிள் போயிட்டார் மேடம்” என்றார் […] - [அத்தியாயம் 27](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-27/): சமுதாயத்தில் ஒதுக்கப்படுவது, தனக்கென யாருமில்லாத தனிமையோடு உணர்வுரீதியான வேதனையும் சேர்ந்து ஒரு சைக்கோபாத்தை குற்றங்களைச் செய்யத் தூண்டுகின்றன. இந்த உலகமே அவர்களுக்கு எதிராக இருப்பதாக நம்புகிறார்கள் அவர்கள். கூடவே தங்களின் வினோத ஆசைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான அனைத்து உரிமைகளும் தங்களுக்கு இருப்பதாக எண்ணிக்கொள்வார்கள். சைக்கோபாத் சீரியல் கொலைகாரர்களான ஜெஃப்ரி டாமர் மற்றும் டெனிஸ் நில்சன் கூற்றுப்படி அவர்களைப் போன்ற சைக்கோபாத் கொலைகாரர்கள் அடிக்கடி உலகத்துடனான தொடர்புகளைத் துண்டித்துக்கொள்வதாகவும் அதன் மூலம் அவர்களின் சைக்கோபாத் குணம் இன்னும் தூண்டப்படுவதாகவும் கூறியிருக்கிறார்கள். அவர்களின் சோகமும், வேதனையும் அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் செய்யப்போகும் குற்றச்செயல்களில் குரூரம் அதிகரிக்குமென கூறியிருக்கிறார்கள் இருவரும். -From ‘The hidden suffering of the psychopath’ article of Willem H.J.Martens ஜானைக் காவலர்கள் கைது செய்து கொண்டு வந்தார்கள். அவர் முகத்தில் எந்த உணர்ச்சிகளுமில்லை. முதியவர் ஒருவரை இவ்வளவு கொடூரமாகக் கொலை செய்த குற்றவுணர்ச்சி கிஞ்சித்துமில்லை. ஆனால் தாங்கள் கைது செய்யப் […] - [அத்தியாயம் 26](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-26/): சைக்கோபாத்கள் அதிகபட்ச வெளிப்புறத் தூண்டுதலால் முட்டாள்தனமான சாகச மனநிலையில் இருப்பார்கள். காரணம் அவர்களின் இயல்புக்கு மீறிய எதிர்பார்ப்புகள் மற்றும் பிறருடன் நடக்கும் மோதல்கள். இந்த முட்டாள்தனமான சாகச மனநிலையைக் கட்டுப்படுத்த முடியாத தங்களது இயலாமையை எண்ணி அவர்கள் மனவுளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் தங்களது இயல்பிலிருந்து மாற விரும்பினாலும், பயமுணராத்தன்மை, அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளும் திறன் இல்லாமை, எதிர்மறை மனநிலை, விரக்தி, மனச்சோர்வு இதெல்லாம் அவர்களை மாறவிடுவதில்லை. -From ‘The hidden suffering of the psychopath’ article of Willem H.J.Martens குடும்பநல நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தாள் இதன்யா. இன்னும் ஒரு ஹியரிங்குக்குப் பிறகு விவாகரத்து கிடைத்துவிடும் என்றார் வழக்கறிஞர். முன்னாள் கணவனிடம் பேசக்கூட விருப்பமின்றி நீதிமன்றத்திலிருந்து கிளம்பிவிட்டாள் அவள். நீதிமன்றத்தில் நுழைந்ததிலிருந்து அவளது மொபைல் சைலண்ட் மோடுக்குப் போயிருந்தது. அதைக் கூட கவனியாமல் வீட்டுக்கு வந்து சேர்ந்தவள் ஏதோ உறுத்தவும் மொபைலை எடுத்துப் பார்த்தாள். ஏகப்பட்டத் தவறிய அழைப்புகளைத் தொடுதிரை சிவப்பு […] - [அத்தியாயம் 25](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-25/): சைக்கோபாத்களின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அதில் குழப்பமான குடும்ப வாழ்க்கை, பெற்றோர்களின் வழிகாட்டுதல் போதுமான அளவில் இல்லாமை, போதைக்கு ஆளான பெற்றோரின் கொடுமை மற்றும் சமூக விரோதப்போக்கு, மோசமான உறவுகள், விவாகரத்து, வளர்ச்சிக்குப் பாதகமான சூழல் போன்றவை கட்டாயம் இடம்பெறும். இத்தகைய நபர்கள் தங்களது மனரீதியான குறைபாட்டால் தங்களை ஒரு சிறைக்கைதியைப் போல உணரலாம். அதனால் தங்களையும் சாதாரணமாக வாழும் மற்ற நபர்களையும் அவர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதுண்டு. அவர்களுக்கு இருக்கும் எவையெல்லாம் தனக்கு மறுக்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து பார்க்கவும் செய்வார்கள். தங்களது முரட்டுத்தனமான சுபாவத்தால் ஒருவிதமான தாழ்வுமனப்பான்மைக்குள் தள்ளப்படுகிறார்கள் இவர்கள். தங்களையே களங்கப்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் தங்களைப் பற்றி விவரம் மற்றவர்களுக்குத் தெரிய வருவதற்கு அவர்கள் அனுமதிப்பதில்லை. காரணம், அப்படி தெரியவருமாயின் தங்களை அவர்கள் நிராகரித்துவிடுவார்களோ என்ற பயத்தால் வெகு கவனமாக தங்களது மனப்பிறழ்வுக்குறைபாட்டை, உண்மையான இயல்பை மறைத்துக்கொள்வார்கள். இது அவர்களை தர்மச்சங்கடத்தில் ஆழ்த்தும். தனது உண்மையான இயல்பை மறைத்து மற்றவர்களுடன் […] - [அத்தியாயம் 24](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-24/): சைக்கோபாத்கள் பலவிதமான காரணங்களால் உணர்வுரீதியான வேதனைகளை அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கும் தன்னை அன்பு செலுத்தவும் அக்கறை காட்டவும் நபர்கள் வேண்டுமென்ற ஆழமான ஆசை இருக்கும். அந்த ஆசை நிறைவேறாமல் போவதே அவர்களின் மனப்பிறழ்வுக்குறைபாடு தீவிரமாகக் காரணமாக அமைகிறது. எது எப்படியோ, இம்மாதிரியான கொடுமையான மனப்பாங்கு கொண்ட சைக்கோபாத்களுடன் சுமூகமான உறவைப் பேணுவது யாருக்கும் கடினமே. இத்தகைய சைக்கோபாத்கள் அவ்வபோது தங்களது குணங்களால் மற்றவர்கள், குறிப்பாக நேசிப்பவர்கள் காயமடைவதைப் பற்றி யோசித்து வருத்தத்துக்கு ஆளாவார்கள். பெரும்பாலான சைக்கோபாத்களின் வாழ்க்கையில் நிலையான உறவுகளும், சமுதாயத்துடனான பிணைப்பும் அறவே இருப்பதில்லை. -From ‘The hidden suffering of the psychopath’ article of Willem H.J.Martens பாதிரியார் பவுலும், சாவித்ரியும் வழக்கறிஞர் ஒருவரோடு வந்திருந்தார்கள். மூவரையும் விசாரணை குழுவுவின் அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றாள் இதன்யா. அங்கே போனதும் நடந்து முடிந்த விசாரணையில் ராக்கி மற்றும் நிஷாந்த் இனியாவைக் கொலை செய்யவில்லை என்பது ஓரளவுக்கு ஊர்ஜிதமானதைக் குறிப்பிட்டவள் […] - [அத்தியாயம் 23](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-23/): மனப்பிறழ்வுக்குறைபாடு அறிவியல்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு குறைபாடு ஆகும். ஆனால் இக்குறைபாட்டைக் கண்டறிய மருத்துவ சோதனைகளான இரத்தச் சோதனை, மூளை ஸ்கேன், மரபியல் பரிசோதனை போன்று எந்தச் சோதனையும் கிடையாது. அவர்களை சில குணாதிசயங்களை வைத்து கண்டுகொள்ளலாம். பெரும்பாலும் அவர்கள் புத்திக்கூர்மை மிக்கவர்களாகவும், அதீத கவர்ச்சி கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் தங்களது அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளத் தவறுவார்கள். யாரிடமும் அன்பு பாராட்டத் தெரியாமல் அடுத்தவர்களை தங்களது பேச்சு சாதுரியத்தால் ஏமாற்றும் குணம் கொண்டவர்கள். சுயக்கட்டுப்பாடு இல்லாமல் விளைவுகளைப் பற்றிய கவலையின்றி எந்த ஒரு குற்றச்செயல்களையும் செய்து முடிப்பார்கள். இதை வைத்துப் பார்க்கையில் சைக்கோபாத் என்றாலே கடினமான, இதயமற்ற மனிதத்தன்மையற்ற ஜீவன் என்ற பிம்பம் நமக்குள் உருவாகும். ஆனால் உண்மை அதுவல்ல! சாதாரண மனிதர்களைப் போல சைக்கோபாத்களும் தங்களது பெற்றோர், வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் மீது பாசம் வைப்பதுண்டு. ஆனால் அந்த பாசமோ இரக்கமோ அடுத்தவர்களைப் பார்க்கும் போது வெளிப்படாது. அது மட்டுமல்லாமல் […] - [அத்தியாயம் 22](https://nmtamilnovelworld.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22/): மனப்பிறழ்வுக்குறைபாட்டுக்கு மரபியல் மற்றும் சூழல் காரணங்களும் ஒருவிதத்தில் பொறுப்பாகும். ஆனால் இவை நேரடி காரணிகள் அல்ல. அதாவது சிலவிதமான நரம்பியல் கட்டமைப்புகளை கொண்ட மூளை வடிவமைப்பு மனப்பிறழ்வுக்குறைபாட்டை ஒரு மனிதனுக்குள் உண்டாக்கும். மனித மூளையில் தற்காப்பு மற்றும் பயத்தை உணர்வதற்காக இருக்கும் பகுதி ‘அமிக்டலா’. இதுவே ஒரு சூழலில் எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பதற்கான கட்டளைகளைப் பிறப்பிக்கும் பகுதியாகும். சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அமிக்டலா பகுதி மற்ற குழந்தைகளின் அமிக்டலாவை விட கொஞ்சம் மாறுபட்ட அமைப்போடு காணப்படும். அப்பகுதி சிறியதாகவோ குறைவான செயல்திறன் கொண்டதாகவோ அமையும் போது அக்குழந்தைகளுக்கு இயல்பாகவே பயம் என்ற உணர்வு குறையும். சராசரி மனிதர்களுக்கு இருக்கக்கூடிய இரக்கம் போன்ற உணர்வுகளை அவர்களால் உணர முடியாமல் போய்விடும். -From psychopathy.org website தன் முன்னே அமர்ந்து ஷாலின் நுனியைத் திருகிக்கொண்டிருந்த முபீனாவின் மீது ஒரு கண்ணைப் பதித்தபடியே அஸ்மத் கொடுத்த தேநீரைப் பருகிக்கொண்டிருந்தாள் இதன்யா. அப்போது தான் பள்ளியிலிருந்து […] - [அத்தியாயம் 21](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-21/): சைக்கோபதி எனும் மனப்பிறழ்வுக்குறைபாடு மரபுரீதியான காரணிகளால் ஏற்படுமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சைக்கோபதி ஜீன் என்று தனிப்பட்ட வகையில் எந்த மரபணுவும் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படுவதில்லை. ஆனால் குடும்ப உறவுகளில் மரபுரீதியான மனப்பிறழ்வுக்குறைபாடு வருவது உண்டு என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பெற்றோருக்கு மனப்பிறழ்வுக்குறைபாடு இல்லையென்ற சூழலில் முந்தைய தலைமுறையில் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தைகளுக்குச் சைக்கோபதி வருவதற்கான மரபணுக்கூறுகள் அவர்களுக்குள் இருக்கும். ஒரே ஒரு மரபணுவால் மட்டுமே இது சாத்தியமில்லை. நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் இம்மாதிரியான மரபணுக்கூறுகள் கூட்டாக ஒன்றிணைவதால் மட்டுமே மனப்பிறழ்வுக்குறைபாடுகள் தோன்றுகின்றன. யாருமே பிறக்கும்போது சைக்கோபதி உள்ளவர்களாகப் பிறப்பதில்லை. ஆனால் இம்மாதிரியான மரபணுக்கூறுகளின் ஒன்றிணைவை பரம்பரையாகப் பெற்று பிறக்கும் குழந்தைகளில் சைக்கோபதி வருவதற்கான ஆபத்து அதிகம்” -From psychopathy.org website இனியா முபீனாவின் வீட்டிலிருந்து அவளோடு சாந்திவனத்துக்கு வந்து கொண்டிருந்தாள். “நான் ரெக்கார்ட் நோட் முடிக்கிற வரைக்கும் நீ என் கூட இரு முபீ… வீட்டுல மிச்செல், ஜென்னி, நித்தி […] - [அத்தியாயம் 20](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-20/): மனப்பிறழ்வுக்குறைபாட்டைக் குணப்படுத்த முடியாது என்பது ஒரு கட்டுக்கதை. மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கான சிகிச்சை அவர்களின் குடும்பங்களிலிருந்தே ஆரம்பிக்கிறது. குடும்ப உறுப்பினர்களின் அனுசரணையும் அன்பும் அவர்களைப் பண்படுத்தும். மருத்துவ சிகிச்சையானது மெதுவாகவே முன்னேற்றத்தை உண்டாக்கும். மற்ற ஆளுமை குறைபாடுகளைப் போலவே மனப்பிறழ்வுக்குறைபாட்டைக் குணப்படுத்துவதும் சவால் நிறைந்த காரியமே. ஏனெனில் அந்தக் குறைபாட்டின் தீவிரம், அதற்கான காரணங்கள், குறைபாட்டுக்கான பயனுள்ள சிகிச்சை முறைகள் பற்றி இதுவரை போதுமான ஆராய்ச்சிகள் எதுவும் நடத்தப்படாததால் சிகிச்சைக்கான வழிமுறைகளும் போதுமானதாக இல்லை. -From psychopathy.org website இதன்யா நிஷாந்திடம் விசாரணையை முடித்துக்கொண்டு அலுவலக அறைக்குள் நுழைந்துகொள்ள அவளைத் தொடர்ந்து வந்தார் மார்த்தாண்டன். “அந்த நிஷாந்துக்குக் கருணை காட்டவே கூடாது மேடம்… எத்தனை பொய் சொல்லிருக்கான் அவன்… பதினேழு வயசு பொண்ணைக் காதல்ங்கிற பேருல யூஸ் பண்ணிருக்கான்… நம்ம கிட்ட மட்டும் டி.என்.ஏ சேம்பிள்ஸ் சிக்கலனா இவன் இப்பவும் உண்மைய சொல்லிருக்கமாட்டான்… இனியா பேர் கெட்டுப்போகக்கூடாதுனு உண்மைய மறைச்சதா இப்பவும் […] - [அத்தியாயம் 19](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-19/): மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சமூக விரோத நடத்தை மற்றும் ஆக்ரோசத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டு. இருப்பினும், மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள் உடல்ரீதியான வன்முறையில் ஈடுபடுபவர்களாக மாறுவதில்லை. அதே போல உடல்ரீதியான வன்முறையில் ஈடுபடுவோர் அனைவருக்கும் மனப்பிறழ்வுக்குறைபாடு இருப்பதுமில்லை. மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சவால்கள் இருக்கும். சில நேரங்களில் மனப்பிறழ்வுக்குறைபாடு வன்முறையாக வெளிப்படுவதில்லை. திருடுதல், ஏமாற்றுதல் போன்ற சமூக விரோத செயல்களாகவும் மனப்பிறழ்வுக்குறைபாடு வெளிப்படும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இவை எல்லாம் வயது மற்று பாலினத்தைப் பொறுத்து மாறுபடுகின்றனவாம். -From psychopathy.org website நிஷாந்தைத் தேடி வந்திருந்தான் ராக்கி. சாவித்திரி அவனுக்கும் சேர்த்து காபி போட்டுத் தரவும் அருந்தியவன் நிஷாந்த் உடை மாற்றிவிட்டு வந்ததும் “உன் கிட்ட கொஞ்சம் பேசணும் மச்சி” என்றான். “என்னடா?” என்றபடி குழல்விளக்கின் ஒளியில் சிவந்திருந்த அவனது கன்னத்தைப் பார்த்தபடி வினவினான் நிஷாந்த். ராக்கியின் கண்களில் கண்ணீர் நிரம்பியது. “உங்கண்ணன் அடிச்சானா? நான் மாமா கிட்ட சொல்லி அவனை […] - [அத்தியாயம் 18](https://nmtamilnovelworld.com/iniyavin-iruthi-nimidangal-18/): கலாச்சார இனக்குழு வேறுபாடின்றி எல்லா இடங்களிலும் மனப்பிறழ்வுக்குறைபாடு கொண்டோர் வாழ்கின்றனர். தோராயமாக 1 சதவிகித ஆண்களும், 0.3 முதல் 0.7 சதவிகித பெண்களும் இக்குறைபாட்டால் பாதிக்கப்படலாமென ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. ஹேரின் செக்லிஸ்டின் படி மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அனைவரும் சைக்கோபாத்கள் அல்ல. சிலருக்கு வெறும் அறிகுறிகள் மட்டும் இருக்கலாம். மனப்பிறழ்வுக்குறைபாட்டோடு தொடர்புடைய ஆரம்பகால அறிகுறியான ‘அமைதியான, உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத குணாதிசயத்தைக் குழந்தை பருவத்தில் ஒருவர் கொண்டிருக்கலாம். அதற்காக அவர் வளர்ந்ததும் சைக்கோபாத் ஆகிவிடுவார் என்று அர்த்தமில்லை. அப்படி ஆகிவிடுவார் என்ற பயமும் தேவையற்றது. இத்தகைய அறிகுறிகள் குழந்தைகளிடம் தென்பட்டால் அவர்களுக்கு முறையான கவுன்சலிங் கொடுத்தால் போதுமானது. -From psychology today ஓநாய்களும் நாய்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்றாலும் நாய்களைப் போல ஓநாய்கள் அவ்வளவு எளிதில் மனிதர்களுடன் பழகுவதில்லை. அதற்கு காரணம் இந்த இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள் பிறந்ததும் இரண்டுவிதமான பருவங்களைக் கடக்கின்றன. முதல் பருவம் ‘பழகும் பருவம்’. இப்பருவத்தில் புதிய […] ## Pages - [Copyright Page](https://nmtamilnovelworld.com/copyright-page/): To PDF Thieves and Ghostwriters: Be warned that any attempt to steal or plagiarize story plots from this site will result in immediate and rigorous legal action according to Indian Copyright Act 1957 – Nithya Mariappan   Share your Reaction - [Book Shop](https://nmtamilnovelworld.com/nithya-mariappan-book-shop/): Online Community For Tamil novels Full Width Radical Red Sliding Messages ✨NM Tamil Novel World புக் ஷாப் உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨ எழுத்துகளைக் காகிதப்பூக்களாக அட்டைக்குள் அடக்கி விற்குமிடம் இங்குள்ள இணைப்புகளை க்ளிக் செய்து நித்யா மாரியப்பனின் புத்தகங்களை வெவ்வேறு தளங்களில் நீங்கள் வாங்கலாம் புத்தகம் வாங்குவது பற்றிய சந்தேகங்களுக்குக் கீழே இருக்கும் வாட்சப் குரூப்பில் இணையுங்கள் . . அருணோதயம் பதிப்பகம் வெளியீடு. Call -7200836063 ரூ.270/- . அருணோதயம் பதிப்பகம் வெளியீடு. Call -7200836063 ரூ.300/- . அருணோதயம் பதிப்பகம் வெளியீடு. Call -7200836063 ரூ.380/- . அருணோதயம் பதிப்பகம் வெளியீடு. Call -7200836063 ரூ.430/- . அருணோதயம் பதிப்பகம் வெளியீடு. Call -7200836063 ரூ.390/- . அருணோதயம் பதிப்பகம் வெளியீடு. Call -7200836063 ரூ.290/- . அருணோதயம் பதிப்பகம் வெளியீடு. Call -7200836063 ரூ.300/- . அருணோதயம் பதிப்பகம் வெளியீடு. […] - [Newsletter](https://nmtamilnovelworld.com/newsletter/): [newsletter]   Share your Reaction - [My Music Space | NM tamil novel world](https://nmtamilnovelworld.com/my-music-space-nithya-mariappan/): Explore how the world of Tamil movie songs influence characters and narratives in contemporary N.M. Tamil novel World. Discover themes of nostalgia, identity, cultural connection, and character development through the lens of popular film music streaming. Night Time breeze – Play list by Nithya Marippan. [cpm-player id=”1″]   Share your Reaction - [Forum](https://nmtamilnovelworld.com/forum/): [forum]   Share your Reaction - [Real-time Users](https://nmtamilnovelworld.com/real-time-users/):   Share your Reaction - [Cookie Policy](https://nmtamilnovelworld.com/nm-tamil-novel-world-cookie-policy/): Full Width Radical Red Sliding Messages ✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨ தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்! © All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan கதைகளைத் திருடி PDF போடாதீர்கள் Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள் . This page provides comprehensive information about how we use cookies on our website to enhance your browsing experience, improve website […] - [Contact Us | NM Tamil Novel World](https://nmtamilnovelworld.com/nm-tamil-novel-world-contact-us/): Feel free to contact us.   Share your Reaction - [About Us | NM Tamil Novel World](https://nmtamilnovelworld.com/nm-tamil-novel-world-about-us/): Full Width Radical Red Sliding Messages ✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨ தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்! © All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan கதைகளைத் திருடி PDF போடாதீர்கள் Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள் . வணக்கம்! நான் நித்யா மாரியப்பன்.  டாக்ஸ் கன்சல்டண்டாகப் பணியாற்றியபடி கடந்த ஆறாண்டுகளாக இணையத்தில் எழுதி வருகிறேன். இதுவரை 49 நாவல்களும், 27 சிறுகதைகளும், இரண்டு குறுநாவல்களும் எழுதியுள்ளேன். […] - [Terms and Conditions | For readers and Tamil Novel Writers](https://nmtamilnovelworld.com/terms-and-conditions-tamil-novel-writers/): Full Width Radical Red Sliding Messages ✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨ தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்! © All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan கதைகளைத் திருடி PDF போடாதீர்கள் Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள் NM Tamil Novel World (‘We’, ‘Our’ Or ‘Us’) operates a forum site where tamil novel writers post their tamil novels and […] - [Privacy Policy | For readers and tamil novel writers](https://nmtamilnovelworld.com/privacy-policy-2-tamil-novel-writers/): Full Width Radical Red Sliding Messages ✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨ தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்! © All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan கதைகளைத் திருடி PDF போடாதீர்கள் Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள் NM Tamil Novel World (‘We’, ‘Our’ Or ‘Us’) operates a forum site where tamil novel writers post their tamil novels and […] - [Tamil Novels | Nithya Mariappan](https://nmtamilnovelworld.com/): Full Width Radical Red Sliding Messages ✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨ தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்! © All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan கதைகளைத் திருடி PDF போடாதீர்கள் Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள் FB Group WhatsApp YouTube Book Store Premium Novels Site வாசகர்களின் கனிவான கவனத்திற்கு  copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights […] - [NM Tamil Novels | Tamil Novels](https://nmtamilnovelworld.com/nm-tamil-novel-world-online-community/): Full Width Radical Red Sliding Messages ✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨ தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்! © All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan கதைகளைத் திருடி PDF போடாதீர்கள் Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள் FB Group WhatsApp YouTube Book Store Premium Novels Site வாசகர்களின் கனிவான கவனத்திற்கு copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights […] [comment]: # (Generated by Hostinger Tools Plugin)