வெறிச்சோடி காணப்பட்டது அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் மேரேஜ் ஹால். இவ்வளவு நேரம் இருந்த குதூகலம், உற்சாகம் அனைத்தும் விருந்தினர்களோடு சேர்ந்து வெளியேறிவிட அங்கே மிஞ்சியிருந்தவர்களின் முகத்தில் வேதனையும் வருத்தமும் மட்டுமே குடிகொண்டிருக்க இருவரது முகங்களில் மட்டும் குழப்பரேகை. அஸ்வின் அரை மணி நேரத்துக்கு முன் நடந்த நிகழ்வுகளை எண்ணிப் பார்க்க ஆரம்பித்தான்… மேனகா பெண்வீட்டார் மற்றும் பார்த்திபன் முன்னிலையில் அபிமன்யூவுக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே ஸ்ராவணியுடன் மணமாகிவிட்டது என்றும் சொல்ல அங்கே கலவரம் மூள ஆரம்பித்தது. […]
Share your Reaction