பசியினால் திருடுகிற ஏழைகளைக் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அரசிடமிருந்து கோடிக்கணக்காகத் திருடுபவர்கள் ஒரு நாள் கூட சிறைத் தண்டனை அனுபவித்ததில்லை. -பிடல் காஸ்ட்ரோ மவுண்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊட்டி… கல்லூரியின் கலையரங்கமானது மாணவர்களால் நிரம்ப ஆரம்பித்தது. அன்றைய தினம் அருள்மொழி அக்கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாட இருந்தான். அதற்கான பரபரப்பு அங்கே இருக்கும் ஒவ்வொருவரிடமும் நிரம்பி வழிய பேராசிரியர்கள் மாணவர்களை கலையரங்கத்திற்கு செல்லும்படி கட்டளையிட்டுக் கொண்டிருந்தனர். இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் […]
Share your Reaction