“வாழ்வில் படிக்க வேண்டுமென்றால் குருவிற்கு மாணவனாய் இரு! அரசியல் படிக்க வேண்டுமென்றால் தலைவனுக்குத் தொண்டனாய் எப்போதும் இருந்து விடாதே! ஏனென்றால் தலைவன் உன்னை வைத்து அரசியல் செய்வானே தவிர அதை உனக்குக் கற்றுத் தர மாட்டான்” -சாணக்கியர் ஆஷிஸ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் அன்றைய தினம் சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தின கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆண்டுதோறும் டிசம்பர் இரண்டாம் தேதி இத்தினம் அங்கே கொண்டாடப்படுமா என்றால் அதற்கு இல்லையென்ற பதில் தான் பள்ளியின் தரப்பிலிருந்து கிடைக்கும். […]
Share your Reaction