பார்த்திபன் கட்சி அலுவலகத்திலிருந்து கோபத்துடன் வெளியேறியவர் நேரே காரில் சென்று வீட்டில் இறங்கினார். வீட்டின் அமைதி அவர் மனதுக்கு சங்கடத்தை தர யோசனையில் சுருங்கிய நெற்றியை தடவியபடி வீட்டினுள் நுழைந்தவரின் பார்வையில் முதலில் பட்டது சோஃபாவில் வெறித்த முகத்துடன் சிலை போல அமர்ந்திருக்கும் மனைவியும் அவரை தேற்றிக் கொண்டிருக்கும் மகளும் தான். ஹாலில் டிவி ஓடிக்கொண்டிருக்க சகாதேவன் கையை பிசைந்தபடி அஸ்வினுடன் நிற்க அபிமன்யூ அவரை போலவே கண்ணை மூடி நெற்றியை தடவியபடி இன்னொரு சோஃபாவில் அமர்ந்திருந்தான். […]
Share your Reaction