துளி 6

தேர்தல் திருவிழா ஜரூராக நடைபெற ஸ்ராவணி அதில் கவனத்தை செலுத்தாமல் அவளின் வேலையை கவனிக்க தொடங்கினாள். அவளுக்கு விஷ்ணு கொடுத்த வேலை ஒரு முக்கிய நபரை பற்றிய தகவல்களை திரட்டுவது. அதற்காகத் தான் அவள் ஒரு முக்கியமான அதிகாரியை சந்திக்க சென்று கொண்டிருந்தாள். அந்த அலுவலகத்தினுள் நுழைந்தவள் “ஏ.சி.பி சாரை பாக்கணும்” என்று கேட்க அவர்கள் அவளை பற்றிய விவரத்தை கேட்கவும் தன்னுடைய ஐ.டி கார்டை எடுத்து காட்டினாள் ஸ்ராவணி. “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மேடம்” என்றபடி […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 6

“சிங்கத்தின் தலைமையின் கீழ் இருக்கும் கழுதையும் ஜெயித்து விடும். கழுதையின் தலைமையின் கீழ் இருக்கும் சிங்கமும் தோற்றுவிடும்”                                                               -சாணக்கியர் முற்போக்கு தமிழக விடுதலை கட்சியின் தலைமை அலுவலகம்… கட்சித்தலைவரும் தமிழக முதல்வருமான வீரபாண்டியனும் கட்சியின் பொதுச்செயலாளர் செங்குட்டுவனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர்.  எல்லாம் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை தான். “தலைவரே தென் மாவட்டங்கள்ல ஜெயிக்கணும்னா கண்டிப்பா சாதி கட்சிகளோட நம்ம வச்சுக்கிட்ட கூட்டணிய முறிச்சிக்க முடியாது… கோவை பக்கம் நம்ம கட்சிக்கு இருக்குற […]

 

Share your Reaction

Loading spinner

துளி 5

ஸ்ராவணியின் சுடிதாரின் கழுத்தோரம் மைக் செட் செய்த பூர்வி “டென்சன் ஆகாம போ. ஆல் த பெஸ்ட்” என்றுச் சொல்லி அவளை ஸ்டுடியோவுக்குள் அனுப்பிவிட்டு அபிமன்யூ தயாராகி விட்டானா என்றுப் பார்வையிட வந்தாள். “போலாமா சார்? எல்லாம் ரெடியா இருக்கு” என்று அவனை ஸ்டுடியோவுக்குள் அழைத்து சென்று அவனிடம் இருந்து விடை பெற்றாள். அது விவாத நிகழ்ச்சி என்பதால் இருவருக்கும் எதிரெதிர் இருக்கைகள் கொடுக்கப்பட பின்னால் நிகழ்ச்சிக்கான இசை ஒலிக்க ஆரம்பித்தது. அதில் நேரடி பார்வையாளர்களாக வந்தவர்களும் […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 5

“அரசியலில் நீங்கள் ஏதேனும் ஒன்றை சொல்ல வேண்டுமாயின் ஒரு ஆணைக் கேளுங்கள்; ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமாயின் ஒரு பெண்ணைக் கேளுங்கள்”                                      -மார்கரேட் தாட்சர், 1965ல் கூறியது தஞ்சாவூரின் பிரபல நட்சத்திர ஹோட்டல் கான்பரன்ஸ் ஹாலில் தமிழ்நாடு முன்னேற்றக் கழக்கத்தின் சார்பாக கூட்டப்பட்டிருந்த மீட்டிங்கிற்கு தலைமை தாங்கியிருந்தார் ராமமூர்த்தி. கட்சியின் மாவட்ட அளவிலான முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் ஆஜராகியிருக்க அருள்மொழியும் யாழினியும் ராமமூர்த்தி என்ன தான் கட்டளையிடப் போகிறார் என்பதை அறிந்து கொள்ளும் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 4

தேர்தலுக்கான பரபரப்பு அபிமன்யூவுக்கு இருந்ததோ இல்லையோ அவனது தந்தை தன்னுடைய மகனின் வெற்றிக்காக ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்திருந்தார். அவரது கோரிக்கையை கட்சித்தலைமையிடம் ஏற்கெனவே வைத்திருந்தவர் உட்கட்சி கோஷ்டி சண்டைகளையும் சமாளித்தவராய் மகனுக்காக வெற்றிப்பாதையை போட்டுவிட்டு அதில் அவன் நடைபோடப் போகும் நாளை எதிர்நோக்கியிருந்தார். அந்நிலையில் தான் அபிமன்யூ அவருடன் கட்சி அலுவலகத்துக்கு சென்றவன் அவன் காதில் விழுந்த தகவல் ஒன்றைக் கேட்டு அமைதியற்று திரிந்தான். அந்த கட்சியில் அவனது தந்தைக்குச் சமமான செல்வாக்கு படைத்தவர் கல்வித்துறை அமைச்சரான […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 4

“தனது ஆசைகள், சுயவிருப்பு வெறுப்புகளைக் கட்டுப்படுத்தி வெல்லக் கூடிய ஒருவரே நன்முறையில் பாரபட்சமற்ற ஆட்சியைத் தரத் தகுதியானவர்”                                                                    -சாணக்கியர் சுந்தரமூர்த்தி ஆதித்யனின் மரணமும் அருள்மொழியின் அரசியல் பிரவேசமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்து அரசியலில் பரபரப்பு அலைகளை உண்டாக்கியது. சுந்தரமூர்த்தியின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியால் அவரது தீவிரத் தொண்டர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்ட அவலமும் நடந்தேறியது. அதிலும் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் இம்மாதிரி துக்கச் சம்பவங்கள் அதிகமாக நடந்துவிட ஆளுங்கட்சியின் குற்றசாட்டு மழையில் நனையத் துவங்கியது […]

 

Share your Reaction

Loading spinner

துளி 3

ஸ்ராவணி அன்று அலுவலகத்துக்கு வேகவேகமாகத் தயாராகிக் கொண்டிருந்தாள். கழுத்துப் பக்கம் மடங்கியிருந்த டாப்பை இழுத்து நேராக்கியவள் கண்ணாடியில் கழுத்து வெறுமையாக இருப்பதைக் கண்டு திகைத்தாள்.  படுக்கையைப் புரட்டிப் பார்த்துப் போர்வையை உதறினாள். ஆனால் செயினைதான் காணவில்லை. இவள் செய்த அதகளத்தை பார்த்தபடி உள்ளே வந்த மேனகா “என்னாச்சு வனி? ஏன்டி இப்பிடி கலைச்சு போடுற?” என்று கேட்க ஸ்ராவணி பதற்றத்துடன் “என் செயினைக் காணும் மேகி. அதான் தூங்கறப்போ கழண்டு விழுந்துடுச்சானு பார்க்கிறேன்” என்றாள் தலையணைகளை உதறிப் […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 3

நம் பழைய செருப்பைத் தைப்பதற்கு அந்தத் தொழிலை நன்றாய்ப் பழகிய தொளிலாளியிடமே கொடுக்கிறோம். ஆனால், ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை மட்டும் பசப்பாகப் பேசி ஓட்டைப் பறிக்கும் வாய்சொல் வீரர்களிடம் ஒப்படைத்து விடுகிறோம்.                                                                                                         -பிளேட்டோ தமிழ்நாடு முன்னேற்ற கழகம் கட்சியின் தலைமை அலுவலகம்… சுந்தரமூர்த்தியும் ஆதித்யனும் ஹெலிகாப்டரோடு மாயமாகி இருபது மணி நேரம் கடந்திருந்தது. கட்சி அலுவலகத்திலும் வாயிலிலும் கூடிய தொண்டர்கள் கூட்டம் கலையவில்லை. யாழினிக்குத் துணையாக அகத்தியன் கட்சி அலுவலகத்திலேயே இருந்துவிட அருள்மொழி வீட்டில் அன்னைக்கு […]

 

Share your Reaction

Loading spinner

துளி 2

காலையில் சோம்பல் முறித்த வண்ணம் எழுந்தான் அபிமன்யூ. இரவு பார்ட்டி முடித்து அதிகாலையில் தான் வீடு திரும்பியிருந்தான். இருந்தாலும் அவனது தினசரி ஷெட்யூலில் உடற்பயிற்சிக்கு ஒதுக்கியிருந்த நேரத்தில் அவனுக்கு விழிப்பு தட்ட மெதுவாக எழுந்தவனுக்கு தலை வலிக்கவே எப்போதும் போல ஹேங் ஓவருக்கு போடக்கூடிய மாத்திரையை போட்டுக் கொண்டான் அவன். வீட்டினுள்ளேயே மேல்தளத்திலிருக்கும் அவனது பிரைவேட் ஜிம்மிற்கு சென்றவன் வியர்வை வழியும் வரை உடற்பயிற்சி செய்ய தொடங்கினான். டிரெட் மில்லில் ஓடத் துவங்கியவனின் நினைவலைகளில் தோன்றினாள் அந்த […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 2

ஒருவரது இலக்கு அல்லது அவர் விரும்பும் பொருள் அவரிடமிருந்து எவ்வளவு தொலைவிலிருந்தாலும் அவர் அடைய முடியாதளவுக்கு கடினமானதாக இருந்தாலும் உறுதியான மனதுடன் தீர்மானித்துவிட்டால் அந்த இலக்கையோ பொருளையோ அவரால் அடைய முடியும். உறுதியான மனம் கொண்ட மனிதரால் அடைய முடியாததென்று எதுவுமே இவ்வுலகில் இல்லை.                                                                    -சாணக்கியர் ஜாய்ஸ் ரெசிடென்சியல் கம்யூனிட்டி, கந்தசாமி நகர், போரூர்… I was broken from a young ageTaking my sulking to the massesWriting my poems for […]

 

Share your Reaction

Loading spinner