“எனக்குச் சின்ன வயசுல இருந்தே கியூரிசியாட்டியோட இருக்க பிடிக்காது… எதாவது ஒரு விசயம் புதிரா இருந்துச்சுனா அந்தப் புதிருக்கான விடை தெரியுற வரைக்கும் என்னால நிம்மதியா சாப்பிட தூங்க முடியாது… நாங்க தேர்ட் ஸ்டேண்டர்ட் படிக்கறச்ச ரேஷ் நெல்லையப்பர் கோவிலோட வெள்ளை நந்தி வருசத்துக்கு வருசம் உயரமாகும்னு சொன்னா… அது உண்மையா பொய்யானு கேட்டா யாருமே ப்ராப்பர் ஆன்சர் குடுக்கல… மதுரைக்கு போன எங்கப்பா வந்ததுக்கு அப்புறம் தான் அந்த டௌட் கிளியர் ஆச்சு… ஆனா அது வரைக்கும் அந்தக் கேள்விக்கு விடை தெரியாம கியூரிசியாட்டோட சுத்துன எனக்குத் தான் அந்தக் கஷ்டம் தெரியும்… தட் கியூரிசிட்டியாட்டி நியர்லி கில்ட் மீ!
-க்யூட் கியூபிட்டின் குரல்
வித்யாசாகரின் பதிலில் அதிர்ந்தவள் “அடப்பாவி ஈவில் மைண்டட் டெவில்” என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள். அவனோ எதற்கும் அசைந்து கொடுக்காது மேஜையில் தாளம் போட்டபடி அமர்ந்திருந்தான்.
“நேத்து தான் உன்னோட மேரேஜ் அலயன்சை பிரேக் பண்ணுன… ஒரு பொண்ணை மூனு வருசமா காதலிக்கிறேனு வேற சொன்ன… ஆனா என் கிட்ட நம்பர் கேக்குற… நீ என்ன மாதிரி மனுசன்?”
அவனது இதழ் சிரித்தாலும் மனமோ “இது தான் சரியான சான்ஸ்… அந்த மூனுவருசக்காதலுக்கு நீ தான் சொந்தக்காரினு சொல்லுடா வித்தி” என்று அவனை உசுப்பேற்றியது.
ஆனால் அதற்கு மாறாக அவனது மூளையோ “இந்தப் பொண்ணு லவ்வ சயனைடோட கம்ப்பேர் பண்ணுது… இன்னும் காதலோட மகத்துவம் புரியல… இவ கிட்ட இப்போ நீ விசயத்தை உடைச்சேனு வைய்யேன், கொஞ்சம் கூட யோசிக்காம ட்ரக் ஸ்டோருக்குப் போய் சொந்தக்காசுல சயனைட் வாங்கி உன் வாய்ல ஊத்தி உனக்குச் சிவலோக பதவி வாங்கிக்குடுப்பாளே தவிர உன் காதலை புரிஞ்சுக்க மாட்டா” என்று உசுப்பேற்றிய மனதிற்கும் அவனுக்கும் சேர்த்தே குட்டு வைத்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
எந்த உறவின் ஆரம்பக்கட்டத்திலும் மூளை சொல்வதைக் கேட்டு நமது நிலைப்பாடு மற்றவருக்கும் சம்மதமா என்பதை ஆராய்ந்த பின்னரே இதயம் சொல்வதைக் கேட்க துவங்கவேண்டும். அதைத் தான் வித்யாசாகரும் செய்தான்.
இதழில் புன்னகையுடன் கண்களில் குறும்பு மின்ன “லுக்! எனக்கு பேசுன அலையன்ஸ் பிரேக் ஆயிடுச்சு… லவ் வேற டிராக்… அதுக்காக கண்ணுக்கு எதிர்ல இருக்குறவங்கள கண்டுக்காம விடமுடியுமா? அதான் நம்பர் கேக்குறேன்” என்று மிதப்புடன் அவன் கூறவும் சங்கமித்ராவின் முகத்தில் முதலில் திகைப்பும் பின்னர் கடுப்பும் குடியேறியது.
ஏற்கெனவே காதலி இருக்கும்போது அவளிடம் மொபைலில் பேசவேண்டிய அவசியம் என்ன? ஒருவேளை வெளிநாட்டுவாசத்தின் அடையாளமோ!
ஒருத்தியைக் காதலிக்கும் போதே இன்னொரு பெண்ணிடம் மொபைல் எண்ணைக் கேட்டால் எந்தப் பெண்ணும் சம்பந்தப்பட்ட ஆணின் குணத்தைத் தவறாக அனுமானித்துக்கொள்வது வாடிக்கை தானே! அவ்வாறே சங்கமித்ராவும் அனுமானித்துக்கொண்டாள்.
“சோ உன் லவ்வரை மீட் பண்ணுற வரைக்கும் உனக்கு ஜாலியா டைம்பாஸ் ஆகணும்… அதுக்கு நான் தான் கிடைச்சேனா? நீ ஏர்போர்ட்ல சிரிச்சப்போ, என்னைச் சீண்டுனப்போ ஏதோ விளையாட்டுக்கு நடந்துக்கிறனு சும்மா விட்டது எவ்ளோ பெரிய மிஸ்டேக்னு இப்போ தானே தெரியுது… லுக்! இனிமே நீ என்னை பாத்து சிரிக்கவோ, என் கிட்ட பேசவோ டிரை பண்ணுனா நான் மனுசியாவே இருக்கமாட்டேன்… சீ! என்ன ஜென்மம்?” என்று சினத்துடன் உரைத்துவிட்டு எழுந்தவள் அவனுக்காக காத்திராமல் அங்கிருந்து வெளியேறினாள்.
வித்யாசாகர் தனது வார்த்தைகள் சங்கமித்ராவுக்குத் தன் மீது உண்டாக்கிய தப்பெண்ணத்தை துடைத்தெறியும் எண்ணத்துடன் வேகமாக வெளியேறியவன் “மித்து நில்லு” என்று வேகநடையுடன் அவளை நெருங்கினான்.
அவள் எதையும் காதில் போட்டுக்கொள்ளாது ஹோட்டல் லாபியை அடைந்த வேளையில் பார்ட்டி முடிந்து அனைவரும் வந்துகொண்டிருந்தனர்.
அதன் பின்னர் வகுப்புத்தோழர்கள், தோழிகளிடம் விடைபெறும் போர்வையில் அவனைத் தவிர்த்தவள் நரேனின் காரில் வித்யாசாகருடன் முன்னிருக்கையில் அமர விரும்பாது பின்னிருக்கையில் அவசரமாக அமர்ந்துகொண்டாள்.
அதன் பின்னர் விருஷாலி தமையனுடன் அமர்ந்துகொள்ள காரும் கிளம்பியது. வீட்டை அடையும் வரை வித்யாசாகரின் விழிகள் ரியர்வியூ மிரர் வழியாக சங்கமித்ராவின் முகபாவத்தை ஆராய அவனது மனமோ ஏன் அந்த பாழாய் போன மூளையின் பேச்சைக் கேட்டு அனைத்தையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கினாய் என்று அவனை ஆயாசத்துடன் கேட்டது.
வீட்டுக்கு வந்த பின்னரும் களைப்பாக இருக்கிறது என்று நேரே மாடியறையை அடைந்தவள் தவறி கூட வித்யாசாகரைப் பார்க்கவில்லை.
வித்யாசாகரோ விருஷாலியும் ரேஷ்மாவும் இருக்கும் போது அவளிடம் பேச சங்கடப்பட்டவன் அன்று இரவு நரேனிடம் புலம்பித் தீர்த்துவிட்டான்.
“ஒழுங்கா அந்தப் பொண்ணு கிட்ட நீ காதலிக்கிற அமுல்பேபி அவ தான்னு சொல்லிருக்கலாம் வித்தி”
“அவளுக்கு இப்போ லவ் மேல நல்ல ஒபீனியனே இல்லடா… லவ்வ சயனைடோட கம்பேர் பண்ணுறவளை கொஞ்சம் பேசி சரி பண்ணலாம்னு யோசிச்சேன்… ஆனா அதுவே தப்பா போயிடுச்சு… இப்போ நான் போய் இந்த உண்மைய சொன்னாலும் அவ நம்பமாட்டா… ஃபர்ஸ்ட் இம்ப்ரெசனே ஒர்ஸ்ட் இம்ப்ரெசனா போயிடுச்சே”
“இப்போ என்ன தான் பண்ணப்போற?”
“ஊருக்குப் போற வரைக்கும் எதும் பண்ணப்போறதில்ல… அங்க போய் எதுவா இருந்தாலும் பேசிக்கிறேன்… பட் ஒன் திங்க், என்னால அவளை லவ் பண்ணுறத நிறுத்த முடியாது” என்று நரேனுக்குப் பதிலளிப்பது போல தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.
அத்தோடு தனது பார்வையோ சிரிப்போ சங்கமித்ராவைத் தீண்டாத வண்ணம் கவனமாக இருக்கவேண்டும் என்று மட்டும் எண்ணிக்கொண்டான். இதெல்லாம் நடக்கிற காரியமா என மனசாட்சியின் நையாண்டி செய்தது வேறு விசயம்!
மறுநாள் விடியலில் மாலை இரயிலுக்குக் கிளம்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தவண்ணம் பெண்கள் மூவரும் பிசியாகிவிட அவனோ ஸ்டெர்ன்சான்சே அப்பார்ட்மெண்டுக்காக ரியல்டரிடம் பேசிமுடித்தான்.
இடையிடையே அவனை அறியாது விழிகள் சங்கமித்ரா பக்கம் சென்றாலும் அவளது ஆங்ரிபேர்ட் தோற்றத்தைக் கண்டதும் கவனியாததைப் போல காட்டிக்கொண்டான்.
வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்திருக்கலாமோ என வெகு தாமதமாகச் சிந்தித்த மூளைக்கு பயங்கரச்சாபங்களைக் கொடுத்துவிட்டு நேரத்தை நெட்டித் தள்ளினான்.
மாலை நால்வரும் இரயில் நிலையத்தை அடைந்த போது அவர்களுக்கு முன்னரே நரேன் காத்திருந்தான். அவன் விழிகளால் வித்யாசாகரிடம் விசயத்தை வினவ அவனோ எதுவும் சரியில்லையென தம்ஸ் அப்பை தலைகீழாகக் காட்டினான்.
நரேன் அவனது நெற்றியில் சுண்டுவிரலால் கோடிழுத்துக் காட்டினான். இருவரின் இந்த சமிக்ஞை மொழியை சங்கமித்ரா கவனித்தாலும் தோழியரைத் தவிர்த்து வேறு எங்கும் பார்வையைத் திருப்பவில்லை.
முன்பதிவு செய்திருந்த பெட்டிகளில் அமர்ந்த போது இருவரும் எதிரெதிர் இருக்கைகளில் ஜன்னலோரம் அமர்ந்திருந்தாலும் சங்கமித்ரா ரேஷ்மாவிடம் தனது நெயில்பாஷைக் காட்டி ஏதோ பேசினாள். விருஷாலியைக் கிண்டல் செய்தாள்.
மிகவும் கவனமாக வித்யாசாகர் நீட்டிய பிஸ்கட் பாக்கெட்டை தவிர்த்தவள் அவன் இன்னும் நீட்டிக்கொண்டே இருக்க அவனை முறைக்க ஆரம்பித்தாள்.
“பிஸ்கட்”
ஒற்றை வார்த்தையில் சொன்னவனுக்குத் தேவையில்லை என்று பதிலளிக்க கூட விரும்பாதவளாக முகத்தை மட்டும் திருப்பிக்கொண்டாள்.
இவ்வளவையும் பார்த்த நரேன் வித்யாசாகரின் காதுக்குள் “என்னமோ கீதா மாதிரி கியூட்னு சொன்னியே… இப்போ முறைக்கிறப்போ எப்பிடி இருக்கு?” என்று வினவ
“பயங்கரமா குளிர் எடுக்குறப்போ சூடா காபி குடிச்சா நமக்குள்ள இதமா ஒரு ஃபீல் பரவும் பாரேன்… அதை தான் இப்போ ஃபீல் பண்ணுறேன்” என்று வித்யாசாகர் அசராமல் பதிலளித்தான்.
அதாவது சங்கமித்ராவின் கோபத்தையும் அவன் ரசிக்கிறானாம்! “நீயெல்லாம் திருந்தாத கேஸ்” நரேன் தனது தலையிலடித்துக் கொண்டான்.
“அண்ணா பிஸ்கட்” என்று வினவிய ரேஷ்மாவிடம் முழு பாக்கெட்டையும் நீட்டிய நரேன் “இனிமே உன் ஃப்ரெண்ட் வாங்கிப்பாம்மா” என்று சொல்ல சங்கமித்ரா அவனையும் உறுத்து விழித்தாள்.
அதைக் கண்டு வித்யாசாகர் நமட்டுச்சிரிப்பு சிரிக்கவும் நரேன் கடுப்புடன் முறைக்க இவ்வாறே நேரம் கடந்தது.
மூன்று பெண்களும் வளவளவென பேசிக்கொண்டே வர நரேனும் வித்யாசாகரும் அவரவர் போனில் கேம் விளையாடியபடி நேரத்தைப் போக்கினர்.
அந்நேரம் பார்த்து வித்யாசாகரை மதிவதனி மொபைலில் அழைக்கவும் அவனது ரிங்க்டோனில் கவனம் கலைந்தாள் சங்கமித்ரா.
What I want when I come through
I need a girl like you, yeah yeah
பாடலின் வரிகளைக் கேட்டவள் “க்கும்! கேர்ள்சாம் கேர்ள்ஸ்… அதுல கூட இவனுக்குப் ப்ளூரல் தான் போல” என்று தனக்குள் நொடித்துக்கொள்ள வித்யாசாகரோ அவளது முகத்திலிருந்தே அவள் மனதைப் படித்தவன் “சொல்லுங்கம்மா” என்று பேச ஆரம்பித்தான்.
மறுமுனையில் மதிவதனி கேட்ட கேள்விகளுக்குப் பொறுமையாக பதிலளித்தவன் “ஸ்டேசன்ல ட்ரெயின் நிக்கிறப்போ வாங்கிப்பேன்மா… ம்ம்.. ரொம்ப பசிக்குது” என்று அவன் பாட்டிற்கு ஏதோ பேச ஆரம்பித்தான்.
அதன் பின்னர் சங்கமித்ரா அவனைக் கவனிக்கவில்லை. வித்யாசாகர் பேசிமுடித்துவிட்டு “உங்க மூனு பேருக்கும் நைட் சாப்பிட என்ன வேணும்?” என்று வினவ
சங்கமித்ரா “ஒன்னும் வேண்டாம்” என்று அவசரமாக இடையிட்டாள்.
“ஓ! சாப்பிடாமலே ஊர்ல வந்து இறங்குறேனு குலதெய்வதுக்கு எதுவும் வேண்டுதலா?” என்று நக்கலாக கேட்டபடி சிரித்தான் வித்யாசாகர்.
“அப்பிடி வினோதமான வேண்டுதலை கல்லிடைகுறிச்சிக்காரங்க வைப்பீங்க போல… ஆனா எங்க குலதெய்வக்கோயில்ல நாங்க வேற மாதிரி தான் வேண்டுதல் வைப்போம்” என்றாள் அவள் உள்ளர்த்தத்துடன்.
“அது என்னம்மா?” என நரேன் ஆவலுடன் வினவ
“ஒன்னுமில்லண்ணா! எங்க குடும்பங்கள்ல ஓவரா வாய் பேசி கலாய்க்கிறவங்களை அங்க கூட்டிட்டுப் போய் மொட்டை போடுவோம்” என்றாள் அப்பாவியாக.
அதன் பின்னர் அவனும் வித்யாசாகரும் கப்சிப்பாகி விட “எல்லாருக்கும் சேர்த்து ரேஷ் சமைச்சு எடுத்துட்டு வந்துட்டா” என்று விருஷாலி சொல்லவும் இருவரும் சிரித்து வைத்தனர்.
உடனே “உப்புமா தான்” என்றதும் நரேனின் முகம் போன போக்கில் சங்கமித்ரா நகைக்க நேற்றைய இரவிலிருந்து அவளின் சிரிப்பைக் காணாது தவித்த வித்யாசாகரின் இதயம் இப்போது ஆசுவாசம் அடைந்தது.
அதன் பின்னர் சங்கமித்ரா அவனை முறைக்காவிடினும் அவனிடம் ஒதுக்கத்தைக் கடைபிடிக்க வித்யாசாகர் மெதுமெதுவாக பொறுமையை இழக்க ஆரம்பித்தான்.
அதிலும் உப்புமாவை நீட்டும் போது தெரியாத்தனமாக அவனது கரத்தில் விரல் உரசிவிட வெடுக்கென அவள் கையை இழுத்துக்கொண்ட வேகம் மற்றவர்களுக்குப் புரியவில்லை என்றாலும் வித்யாசாகருக்குப் புரியாமலா இருக்கும்! உடனே உஷ்ணத்துடன் அவளை முறைத்தவனுக்கு அவளது குனிந்த தலையின் தரிசனமே கிடைத்தது. அவனைத் தவிர்க்கிறாளாம்.
“ரொம்ப டார்ச்சர் பண்ணுறடி பப்ளிமாஸ்” என்று தனக்குள் முணுமுணுத்தவனின் தொண்டக்குள் இறங்கிய ரவா உப்புமா அவனுக்கு என்னவோ சரளைக்கல்லையும் மண்ணையும் குழைத்து விழுங்கியது போன்ற உணர்வையே அளித்தது.
சாப்பிட்டதும் பெண்கள் மூவரும் உறங்கலாம் என்ற முடிவுக்கு வர வித்யாசாகரும் நரேனும் மீண்டும் கேமில் ஆழ்ந்து போயினர். விளையாட்டு சுவாரசியத்தில் நரேன் உறங்கியும் போனான்.
வித்யாசாகருக்குத் தான் உறக்கம் வருவேனா என்று அடம்பிடித்தது. இரயிலின் மெல்லிதான குலுங்கல் தொட்டிலில் போட்டு ஆட்டுவதைப் போல சுகமாய் தான் இருந்தது. ஆனால் அவனால் உறங்கமுடியவில்லை.
எந்த ஒருத்திக்காக அவன் மூன்றாண்டுகள் காத்திருந்தானோ அந்த ஒருத்தி அவனுக்கு மிக அருகில் இருந்தும் அவனைப் பற்றி தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறாள். நினைக்கும் போதே மனதுக்குள் எரிச்சல் மண்டியது.
அந்நேரம் பார்த்து உறங்கிக்கொண்டிருந்த சங்கமித்ராவின் மொபைல் சிணுங்க அவள் விழித்துக்கொண்டாள். அழைப்பது சர்வானந்த் என்றதும் உடனே அழைப்பை ஏற்றபடி அவர்கள் அமர்ந்திருந்த கோச்சில் அன்று கூட்டமில்லாததால் சற்று நகர்ந்து நின்று பேசத் தொடங்கினாள்.
“சொல்லுண்ணா”
“மித்து ஒன்னும் பயமில்லையே?” என்று ஆதுரத்துடன் ஒலித்த சர்வானந்தின் குரலில் மெதுவாக நகைத்தாள் அவள்.
“ஒரு பயமும் இல்ல… நான் சாப்பிட்டுட்டு தூங்கிட்டேன் தெரியுமா? உன் கால் வந்ததால தான் முழிச்சேன்” என்று அவள் கூறவும் தான் அவனுக்கு அங்கே நிம்மதி.
அவனிடம் நாளை காலை சரியான நேரத்துக்கு தென்காசி வரும்படி கட்டளையிட்டுவிட்டு இரவுவணக்கத்துடன் பேசிமுடித்து திரும்பியவள் அங்கே நின்றிருந்த வித்யாசாகரைக் கண்டதும் திடுகிட்டாள்.
அடுத்த கணமே விலகி நடக்கவிருந்தவளை அவன் சட்டென்று கரம் பிடித்து நிறுத்தவும் சங்கமித்ராவுக்குள் அதிர்ச்சி மெதுவாய் பரவியது.
அவன் பிடித்து நிறுத்தியதில் நெருக்கத்தில் நின்றவளுக்கு அவனது மூச்சுக்காச்சு முகத்தில் மோதிய நேரத்தில் தான், இன்னொருத்தியின் காதலன் அவன் என்பதை மூளை நினைவுறுத்த வேகமாக அவனிடமிருந்து கரத்தை உருவிக்கொண்டு இடைவெளி விட்டு நின்றாள்.
வித்யாசாகரோ நேற்றைய இரவிலிருந்து அவளது செயல்பாடுகளில் மனம் சோர்ந்திருந்தவன் கடுப்புடன் “ஏய் வாட் டூ யூ திங்க் அபவுட் மீ? ஆம் ஐ லுக்கிங் லைக் அ ரோக்?” என்று அழுத்தமாக இறுகியக்குரலில் சீறவும் அவளுக்குள்ளும் சினம் தூண்டப்பட்டது.

“யூ ஆர் பிஹேவிங் லைக் அ ரோக் மிஸ்டர் வித்யாசாகர்… ஆல்ரெடி ஒரு பொண்ணை மூனுவருசமா லவ் பண்ணுறேனு சொல்லிட்டு என் கூட ஃப்ளர்ட் பண்ணுறவனை வேற எப்பிடி நினைக்கிறது?” என்றாள் வெடுக்கென்று.
வித்யாசாகர் இடுப்பில் கையூன்றி அவளை முறைத்தவன் கண்களை இறுக மூடிக்கொண்டான். இம்மாதிரி தருணத்தில் காதலைச் சொல்லும் எண்ணம் அவனுக்கு இல்லை. அதே நேரம் அவள் தன்னைப் பற்றி தவறாக எண்ணவும் கூடாது.
மெதுவாக விழி திறந்தவன் “நான் யாரையும் லவ் பண்ணல… லவ் பண்ணுறேனு பொய் சொன்னேன்” என்றான் நிதானமாக.
சங்கமித்ரா நம்பாத பாவனையுடன் பார்க்கவும் “நீ நம்பலனாலும் அதான் உண்மை… ஆக்சுவலி ஐ நீட் சம் டைம்… நான் இன்னும் செட்டில் ஆகவேல்ல… அதுக்குள்ள கல்யாணம், பொண்டாட்டி, குழந்தை, குட்டினு சுமைய ஏத்திக்க விரும்பல… வீட்டுல சொன்னா கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க… அதான் மூனு வருசமா ஒரு பொண்ணை லவ் பண்ணுறேனு பொய் சொன்னேன்” என்று பிசிரற்ற குரலில் விளக்கமளித்தான்.
அவன் குடும்பம் பற்றி கூறியதும் சங்கமித்ரா அவனது பேச்சு உண்மையே என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். ஏனெனில் விருஷாலியின் வாய்வார்த்தைகளின் வழியே வித்யாசாகரின் குடும்பப்பற்றை அறிந்திருந்தவள் அவள்.
இருப்பினும் அவன் மீது கொண்ட சந்தேகத்தின் கடைசி துகள் இன்னும் மனதில் ஒட்டியிருக்க “அப்போ அமுல்பேபி யாரு?” என்று கேட்டாள் அவள். சொல்லப்போனால் அவனை விமானநிலையத்தில் கண்ட தினத்தில் அப்பெண்ணையும் வினோதமானவள் என எண்ணியவள் தானே!
எனவே இயல்பான குறுகுறுப்பு அடங்காமல் அவள் கேட்ட விதம் வித்யாசாகரின் சினத்தை மட்டுப்படுத்தியது. பெருமூச்சுடன் சிகையை அழுத்திக்கொண்டவன் “என்னோட ட்ரீம் கேர்ள்… எனக்கு வரப்போற லைஃப் பார்ட்னருக்கு நான் குடுத்த கற்பனை நேம் தான் அமுல்பேபி” என்றான்.
சங்கமித்ரா அனைத்தையும் கேட்டவள் “இதை நேத்தே சொல்லிருக்கலாமே” என்று இழுக்கவும் வித்யாசாகரின் பழைய குறும்பு திரும்பிவிட்டது.
“நான் சொல்ல தான் வந்தேன்… நீ அதுக்கு நிக்கணுமே? ரெஸ்ட்ராண்ட்ல ஆரம்பிச்ச ரன்னிங்க ஹோட்டல்ல தானே நிறுத்துன!” எண்று அவன் கேலியாய் முடிக்கவும் அவள் நாக்கை கடித்துவிட்டுப் புன்னகைத்தாள்.
“மாரத்தான் ரேஸ்ல ஓடுற மாதிரி எஸ்கேப் ஆனது, அப்புறம் ஒரே வீட்டுல இருந்துட்டு என் கூட ஹைட் அண்ட் சீக் விளையாடுனது இதெல்லாம் தான் இந்த உண்மை இவ்ளோ லேட்டா உனக்குத் தெரிஞ்சதுக்கான ரீசன்” என்று அவன் முடிக்கவும் சங்கமித்ரா தனது முன்கோபத்திற்கு மன்னிப்பு வேண்டினாள்.
“நான் உன்னை மன்னிக்கணும்னா நம்பர் குடு”
அசராமல் கேட்டுவிட்டு நின்றவனைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பு தான் வந்தது.
“அதான் மனசுக்குள்ள வருங்கால ஒய்ப் இப்பிடி தான் இருக்கணும்னு ஒரு ப்ளூப்ரிண்ட் வச்சிருக்கியே… அதுக்கு அப்புறமும் ஏன் என் கிட்ட நம்பர் கேக்குற?”
“அந்தப் ப்ளூப்ரிண்டோட வாழ்க்கை முழுக்க இருக்க முடியாதுல்ல… அதோட மேட்ச் ஆகுற ஒருத்திய தான் நான் வலை வீசி தேடிட்டிருக்கேன்… அதை விடு… ஆப்டர் ஆல் மொபைல் நம்பர், டென் டிஜிட் நம்பரைச் சொல்லுறதுக்கு நீ ரொம்ப சுத்தல்ல விடுற பப்ளிமாஸ்” என்று அயர்ச்சியுடன் முடித்தவன் கை குலுக்குவதற்காக நீட்டினான்.
சங்கமித்ரா திகைக்கவும் “ஃப்ரெண்ட்ஸ்?” என்று தலையைச் சாய்த்து புன்னகைத்தபடி கேட்டவனின் கன்னத்தில் விழுந்த குழியை இன்று தான் கவனிக்கிறாள் அவள்.
நீட்டிய கரத்தைப் பற்ற அவளது கரமும் நீண்டது. உதடுகளோ “ஃப்ரெண்ட்ஸ்” என்று உச்சரித்தது.
அடுத்து மொபைல் எண்கள் ‘பப்ளிமாஸ்’ ‘மிஸ்டர் ஜெர்மன்’ என்ற பெயரில் அவரவர் மொபைலில் சேமிக்கப்பட சங்கமித்ரா அவனுக்கு இரவு வணக்கத்தை சொல்லிவிட்டு உறங்கிப்போனாள்.
வித்யாசாகர் அவனது பப்ளிமாசின் மனதை வெல்லும் முயற்சியின் முதல் படியில் ஏறிய மகிழ்ச்சியில் நிம்மதியாக கண்ணுறங்கினான்.
மறுநாள் விடியலில் அவனது முகத்தில் தெரிந்த ஜொலிப்பைக் கண்ட நரேன் “எனக்குத் தெரியாம ஃபேர் அண்ட் ஹான்ட்சம் க்ரீம் யூஸ் பண்ணுறியாடா?” என்று கலாய்த்தாலும் அவனைப் பெரிய மனது பண்ணி மன்னித்துவிட்டான் வித்யாசாகர்.
விருஷாலியும் ரேஷ்மாவும் சங்கமித்ரா வித்யாசாகரிடம் வாய் ஓயாமல் பேசுவதை கண்களில் ஒரு வித எதிர்பார்ப்புடன் கவனிப்பதை அவள் அறியவில்லை! ஆனால் வித்யாசாகர் பார்த்துவிட்டான்.
இருவரும் என்ன நடக்கிறது என்று அவனிடம் வினவ கண்ணைச் சிமிட்டியவன் தென்காசி வரும் வரையிலும் அவளிடம் ஏதாவது ஒன்றை கேட்டு பேசிக்கொண்டே வந்தான். பேச்சு சுவாரசியத்தில் தென்காசி இரயில் நிலையமும் வந்துவிட்டது. இரயில் நின்றதும் பெண்கள் மூவரும் தங்களது சூட்கேஸ் மற்றும் உடமைகளுடன் நடைமேடை மீது இறங்கினர்.
நண்பனின் முகஜொலிப்பைக் கவனித்த நரேன் “எப்பிடியோ நல்லா இருந்தா சரி தான்டா” என்று அவனது செவியில் முணுமுணுத்தபடி தானும் இறங்கினான்.
சங்கமித்ரா தன்னை அழைத்துச் செல்ல தமையன் வருவான் என எண்ணியிருக்க அங்கே அவளது தந்தையின் காரும் அதை ஓட்டும் டிரைவரும் காட்சி தர முகம் வாடினாள்.
ஆனால் ரேஷ்மாவோ “தேங்க்ஸ் காசி விஸ்வநாதரே! வந்த உடனே கடுவன்பூனைய மீட் பண்ணணுமானு தயங்கிட்டே வந்தேன்… நீங்க என்னை காப்பாத்திட்டீங்க” என்று இறைவனுக்கு மனதுக்குள் நன்றி நவிழ்ந்து கொண்டாள்.
வித்யாசாகரை அழைக்கவும் காரோடு டிரைவர் காத்திருக்கவே விருஷாலியிடம் விடைபெற்றனர் தோழியர் இருவரும்.
“போய்ட்டு வர்றேன்ணா” என்ற ரேஷ்மாவின் குரலை அடுத்து “போய்ட்டு வர்றேன் நரேன் அண்ணா… அண்ட் மிஸ்டர் ஜெர்மன் நான் கிளம்புறேன்” என்று சங்கமித்ரா விடைபெற புன்னகையுடன் அவளை வழியனுப்பிவைத்தான் வித்யாசாகர்.
விருஷாலியோ தோழி தமையனுக்கு வைத்த புனைப்பெயரை எண்ணி ஆச்சரியப்படவில்லை. இம்மாதிரி பட்டப்பெயர்கள் சூட்டுவது அவளுக்குக் கைவந்த கலை என்பது விருஷாலிக்கு நன்றாக தெரியும்.
அவள் அதிசயித்தது யாரோ ஒரு அமுல்பேபியைக் காதலிப்பதாகச் சொல்லி திருமணத்தை நிறுத்திய தமையனின் முகத்தில் சங்கமித்ராவிடம் பேசும் போது உண்டாகும் அதிகப்படி ஆர்வத்தைக் கண்டு தான்.
இதைப் பற்றி அவனிடம் கேட்கவேண்டும் என்றவள் அதே யோசனையுடன் வித்யாசகர் நரேனுடன் காரில் அமர காரும் கல்லிடைக்குறிச்சியை நோக்கி விரைந்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

